உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நீயும் நானும் இனி "எதிரிகள்"



* சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
நம் பெற்றோர்  உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
இனி "எதிரிகள்"  என்று...

* நீயும் நானும் வேறு வேறாய்
இருக்க நம்மில் வேர் விட்ட
நம் காதலுக்கு
சொல்லிவிடு
இனி  நீயும் நானும்
"எதிரிகள்"

* ம் காதல் வளர்த்த
கடற்க்கரை மணலுக்கும்,
காதல் பேசி நம் காலடி வந்த
கடற்க்கரை அலைகளுக்கும்
சொல்லி விடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"

* குற்றவாளிகள் போல்
நம்மை குத்திக் கூடையும்
நம் சொந்தங்களின்
பார்வைக்கு பட்டென்று
சொல்லிவிடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"  என்று..


* விலகிப் போகிறோம்
என்று தெரிந்தும்,
விலகாமல் நமைத்தடுக்கும்
நம் நட்புக்கு
சொல்லிவிடு
இனி  நீயும் நானும்
"எதிரிகள்" 

ம் !!!!
* எதிர்ப்படும் வாழ்க்கை
நமக்காய் இருந்தும்,
திருமணமாக உன் தங்கைக்கும்,
மணமாக காத்திருக்கும்
என் சகோதரிக்குமாய்
நம் காதல்  போட்டுக்கொண்டது
ஒரு முகமூடி..

* னைப்பிரிந்து என்
நலம் விசாரிப்புகளும்
நலமற்று போக...
எனைத் தீண்டும் உன் பார்வையின்
ஆளுமை எனை விட்டு போக,
நடை பிணமென அலைந்துகொண்டிருக்கிறேன் ,
நீ நலமாய் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்
எனைத்தேற்றிக் கொள்கிறேன்,
காரணம்
நீயும் நானும்

இனி "எதிரிகள்" 

* ம் காதல் தோல்வியைத்
தழுவியது என்று யாரேனும்
சொன்னால், தயங்காமல்
சொல், உன்னை நானும்,
என்னை நீயும், உயிர் இருக்கும்வரை
நம் உயிரில் கருவாய் சுமப்போம்...
ஏன்னென்றால்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"

* திர்படும் எல்லாரும் நமக்கு
எதிரியாய்ப்போக, காதலை
சுமந்துகொண்டு,காலத்தின் முன்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"


* சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
பெற்றோர்  உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
"எதிரிகள்"  என்று...

(இதற்க்கு முந்தய என் தமிழன் என்ற தமிழக மீனவர் படுகொலைக்கு எழுதிய கண்டன கவிதையையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லலாமே!!!!)


அன்புடன்
உன் எதிரி
ரேவா 

சனி, 29 ஜனவரி, 2011

என் தமிழன்

* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

* அரசியல்வாதி என்னும்
பிணம்தின்னி கழுகின்  பின்
சாவமாய்த்திரிந்தான் என் தமிழன்...
அவன் எச்சிக்கையில் ஒட்டி
கிடக்கும் ஓற்றை வார்த்தைக்காய்
ஏங்கி தவித்தான் என் தமிழன்..

* ஈழத்தமிழனைத்  தான் காவு
கொடுத்தோம் என்றால்,
எஞ்சிய எம் ஏழை மீனவத்தமிழனையும்
சாவுக்கு தாரைவார்க்கவோ
நாம் தரணியில் பிறந்தோம்?

இதயத்தில் இணைந்திட்டவன் ,
தன் சொந்தத்தின் வாழ்வுக்காய்,
கடல் தேடி சென்றானே!!!
கடலோடு போன தந்தை,
நம்மை கரைசேர்க்க, கரைவருவாரோ
என எதிர்ப்பார்த்து நிற்கும்
எந்தன் தாய்க்கும், தவித்து நிற்கும் 
எந்தன் பிள்ளைக்கும
என்ன பதில் நாம் சொல்ல...?
சொல் தமிழா என்ன பதில் நாம் சொல்ல...






* முத்தமிழ்  பேசுவோம் ...
எம் தமிழுக்கு செம்மொழி
உயர்வு வாங்கித்தர போர்க்கொடி
நீட்டுவோம்...ஆனால்
என் ஏழைத்தமிழனுக்கோ?

* ஏழைத்தமிழன் என்றால்
அத்துணை இளப்பமா?...
ஆறடுக்கு மாளிகையில் நீ இருக்க
உன்னை ஏற்றிவிட்ட
ஏழைக்கரங்கள் செய்வது அறியாமல்
ஏங்கி நிற்க....எச்சரிக்கை
விடுவதாய் ஏமாற்றுதல் நியாயமா? 

* பொறுத்திருந்து பொறுத்திருந்து
நாட்களும் நரகமாக,
எங்கள் வாழ்கையும் வீணானது
தான் மிச்சம்...

* எங்கள் எச்சம் தின்னும்
தந்திர நரிகளே...
நாங்கள் மாறினால் நீங்கள்
மண்டியிட்டு வேண்ட காணி நிலமும்
உங்கள்   கைக்குள் இருக்காது..
நாங்களும் மாறுவோம்... எத்தனை
நாள் தான்  உன்னிடம் ஏமாறுவோம்..

* பொறுத்தது  போதும்...
அரசனும் வேணாம்...
அரசியல் வேடதாரியும் வேண்டாம்...
இன்னும்  பொறுத்தால்
மிச்சமே
மிச்சும்...
ஒன்று படு தமிழா
நம்  தமிழனுக்காய்...
நம் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை  சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் தமிழா.....

* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

நம் போடும் சத்தம் சென்றடைய www.savetnfisherman.org தளத்தில்  நம் ஆதரவை தெரிவிப்போம்

இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

குரல் கொடுப்போம்... நம் உரிமையை நாமே பெறுவோம்...நன்றி 

( எதற்கு இந்த விலை  இந்த பதிவையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லலாமே...)
 அன்புடன்
ரேவா 

எதற்கு இந்த விலை....





அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.. இது கவிதைக்கான தளமாக மட்டும் இருந்து விடக்கூடாது என்ற என் நண்பர்களின் எண்ணப்படி பெண் மனதில், பெண்ணை பெற்றவர் மனதில் தோன்றும் எண்ணக்குமுறல்களை என் எழுத்தாய் இங்கே பதிவு செய்து இருக்கிறேன்...

அதற்க்கான முதல் களமாக எதற்கு இந்த விலை என்ற சிந்தனைத் தொகுப்பை
ஆரம்பிக்கிறேன்...

சமீபத்தில்  என் மனதை பாதித்த செய்தி, பேச்சிலும், செய்கையிலும், படிப்பிலும் என்னை விட கெட்டிக்காரி என் சினேகிதி... இப்பொது மேலாண்மை படிப்பை முடித்து மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள்..

திருமண வயதை அடைந்த பெண் உள்ளோர் எல்லார் வீட்டிலும்
நடக்கும் பெண் பார்க்கும் படலத்திருக்கு என் தோழியும் ஆயத்தமானால்...

குடும்பம் சகிதமாக மாப்பிளை வீட்டார் என் தோழியின் வீட்டிற்கு வந்து சேர... சினிமா பாணியில் சில சம்பிரதயங்களும் அரங்கேறியது...
வழக்கமாய் விட்டுச்செல்லும் வார்த்தையே இங்கும்... வீட்டுக்கு போயி தகவல்  அனுப்புரோம்னு...

ஆனா மாப்பிளை ரொம்ப கெட்டிக்காரர்... முதல் பார்வையிலே என் தோழியை பிடித்துப் போக என் தோழியின் தொலை பேசி எண்களை வாங்கிவிட்டு சென்றிருக்கிறார்...என் தோழியின் குடும்பத்தாருக்கும், மாப்பிளை வீட்டாருக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கஎன் தோழியும் தோழியின் மாப்பிள்ளையாய் அறிமுகம்  ஆனவரும்
பரஸ்பரம் நலம் விசாரித்தலில் தொடங்கி  இருவரும் காதலில்
விழுந்தனர்...

இந்த நேரத்துல situvation சாங் "தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே" ஒரு வழியா இவங்க பழகுறது மாப்பிளை வீட்டாருக்கு தெரியவர கல்யாணப்பேச்சு சீரியஸ் அஹ நடந்துகிட்டு இருக்கிற நேரத்துல தான் கதைல ட்விஸ்ட்டு என்னனு கேக்குறேன்ங்களா அதாங்க நாம மாப்பிள்ளைக்கு அரசு அலுவலகத்துல வேலை கிடைச்சிடுச்சு.. விடுவாங்களா....!!!!! பையனோட ஷேர் மார்க்கெட் value அதிகமாகிடுச்சு...

கடைசியா பையனோட அம்மா அந்த பையனுக்கு ரேட் பிக்ஸ் பண்ணுனாங்க  பாருங்க உங்க ரேட் இல எங்க ரேட் இல்லைங்க... 5 லட்சம் ரொக்கம்...100 சவரன் நகை...ஒரு சான்றோ கார்... என் தோழி வீட்டுல எல்லாருக்கும் விழிபிதுங்கி  போயிடுச்சு.... இல்லையாபின்ன கொஞ்ச நஞ்ச ரேட் அஹ அது... கடைசில சமந்தம் கைமாற பையன் உறுதியா இருப்பானு பாத்தா அவனும் அம்மா பக்கம் விழுந்தாச்சு...

நூறு  குயர்   நோட்டுல அவன் எழுதிவச்சு என் தோழிகிட்ட பேசுன காதல் வசனம் வீணா போச்சு... மாப்பிள்ளை   எஸ்கேப்... எங்க அம்மா சொல்லுற பொண்ணத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல.... இப்போ தான் என் தோழியா மருத்துவமனைல பாத்துட்டு வரேன் ஏன்னு  கேக்குறேங்களா... கேணச்சி விஷம் சாப்டாங்க...

ஏதோ இந்த விசயத்த இவ்ளோ நேரம் நான் விளையாட்ட சொல்லிருந்த்தாலும், நம்ம எவ்ளோ மார்டனா மாறினாலும், " ஐ அம்  சோ மாடர்ன் யு நோ " னு  நுனிநாக்கு இங்கிலீஷ் பேசினாலும், நாம இன்னும் மாறலைங்க.... சரி நாகரிகம்கிற பேருல எல்லாம் வந்தாச்சு, கிட்ட தட்ட ஒரு குட்டி வெளிநாடா இந்திய மாறிடுச்சு பழக்கவழக்கதுல? ஆனா உங்களுக்கு ஒன்னு தெரியுமா எந்த வெள்ளைக்காரனும் கல்யாணம் பண்ணிக்க டவுரி கொடுக்கமட்டானுங்க ...

இந்தியால எல்லாம் பிடிக்கும் ஆனா ஒரு பொண்ணு, தன் சொந்த பந்தம், எல்லாத்தையும் விட்டுட்டு வேற ஒரு சுழல்ல ஒரு ஆணை நம்பி வருரா, அங்க கணவர் குடும்பத்தை தான் குடும்பமாய் எடுத்துகிட்டு அவங்க ஆசை, ஆவங்க துக்கத்துல தானும் ஒரு ஆளா நிக்கிறா, கணவனுக்கு எல்லாமா அவ இருக்க, கல்யாணம் பண்ணிக்க போற பசங்க தான்  பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு பணம் குடுக்கனும்னு, நீங்க ஏன் பசங்களுக்கு வரதட்சணை,கொடுக்கிறேங்கனு  என் வெள்ளைக்கார தோழி கேட்க பதில் தெரியாம நான் மௌனமாகிட்டேன்...(அவ நம்பர்லாம் கேக்ககூடாது பிச்சு பிச்சு)
இப்போ என் தோழி நலமா இருக்கா  இருந்தாலும் உயிர் போனா வருமா?
பணம் தான் தேவைனா கல்யாணம் பண்ணிக்காம பணத்தைமட்டும் சேக்கலாமே.. ஏன் ஏன் எதற்கு  இந்த விலை...

 வரதட்சணை பத்தி  உண்மையான கருத்துக்கணிப்பு என்ன சொல்லுதுனா, ஆரம்பிச்சுட்டா பொம்பள ரமணானு சொல்லாதிங்க....
வரதட்சணை சாவு நம்ம இந்தியாவுல ரொம்ப அதிகம்.. அதோட எந்த பகுதில அதிகம் தெரியுமா ஆதாங்க  இந்த படிச்சவுங்க அதிகமா இருக்கி றாங்கல்ல, அதான் நம்ம தாஜ்மஹால் இருக்கே ஆங்..... டெல்லி தான்...அதே மாதிரி வரதட்சணை சாவு இல்லாத மாநிலம் எது தெரியுமா படிப்பு வாசனை ரொம்ப கம்மிய இருக்கிற நம்ம அருணாச்சலப்பிரதேசம்...

இதுல வரதட்சணை உயிரிழப்புகள் ஒரு வருடத்திருக்கு பன்னிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம்... இல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்.... புளிய பாதுகாக்கிறத விட்டுட்டு பொண்ணுங்கள பாதுகாப்போம்னு  forward மெசேஜ் அனுப்புனா பத்தாது...

எதுக்கு படிக்கிறோம், நல்ல டவுரி வாங்கவா... இல்லையே, நாம நாகரிக வளர்ச்சி அடையாம இருந்தாக்குட நாம நாமளா இருந்திருப்போம்போல, நண்பர்களே யோசிங்க சாவு கொடுமைதான், ஆனா வரதட்சணை சாவு ரொம்ப கொடுமை, இல்லாமையால அவங்க சாகிறது பெறும் கொடுமை  இல்லையா..எவ்வளவோ .கனவுகளோட இருக்கிற பொண்ணுங்களுக்கும், பொண்ணப்பெத்தவங்களுக்கும் இந்த நிலை கொடுமை இல்லையா....யோசிங்க....
எங்க போறேங்க எவ்ளோ வரதட்சணை வாங்கலாம்னு யோசிக்கவா?

(இந்த பதிவை எழுத எனை தூண்டிய சகோதரர் கார்த்திக்குமார் http://muraimaman.blogspot.com/ கு என் மனமார்ந்த நன்றி.... என் புது முயற்சி... பிடித்திருந்தால் பாராட்டலாமே!!!! )




செவ்வாய், 25 ஜனவரி, 2011

தூங்காத என் இரவுகள்


நிசப்தம் இல்லா நடுநிசியில்
யாவரும் உறங்கிப்போக,
ன் நினைவுகளில், 
ன் தூக்கம் நான் தொலைத்து ,
ண்ணீர்த்துளிகள் காரணமின்றி
ன் தலையணை நனைக்க,
தேதோ காரணம் சொல்லி
ன்னை நான் தேற்ற 
முயல்வதற்குள் 

ப்படியும் விடிந்து
விடுகிறது
தூங்காத என் இரவுகள்.... 



ன்புன்
ரேவா 

சனி, 22 ஜனவரி, 2011

*****என் உறவு*****

( இரண்டு  வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு புத்தகத்தில் இளம் விதவையின் காதல்ங்கிற தலைப்பில் ஒரு கவிதை படித்தேன்... அந்த கவிதை மாதிரி நாமும் ஒரு கவிதை எழுதனும்கிற எண்ணத்தை  உருவாக்கினது, அதோட வெளிப்பாடு தான் இந்த கவிதை.... 2009 இல் எழுதிய இந்த கவிதைய இப்போ  பதிவு செஞ்சுருக்கேன்.... பிடிச்சிருந்தா உங்க கருத்த சொல்லிட்டு போங்க நண்பர்களே...)

* காட்சிக்கு களங்கமாய்
தெரிந்தாலும்
நிலவும் அழகுதான்....
உன்னோடான என்
காதல் காலமும் அழகு தான்....

* இனம் தெரியா காலத்தில்
இனச்சேர்க்கைக்கு என்னை
திருமண பந்தத்தில்
இணைத்திட, என்னில்
இணைந்திட என் இணையும்
என் இதயத்தில் நுழைவதற்குள்
சிதைக்கு விருந்தாகி போனான்... 

*  ஆனால் என் உறவே...
உற்றோரும், உள்ளோரும்
அவரவராய் இருந்திட இறந்து போன
என் இதயதிருக்கு இதம் தந்ததது
உன் காதல் தான்..

* பார்த்து பழகிய
நாட்களில் இருந்தே
முன்னுரை எழுதாமலும்
முகவரி புரியாமலும்
நீண்டு கொண்டே போகிறது
உனக்கும் எனக்குமான
நம் பெயரிடப்படாத உறவு....

*ண்பன் என ஒருவன்
நயவஞ்சகம் புரிந்திட
நினைக்கையில் , நாசுக்காய்
என்க்குறைத்து என்னை
நெறிப்படுத்திய
அன்றிலிருந்து ஆரம்பம் ஆனது
நம் உறவு....

*வறு என்று நீ
ஒதுங்கும் நேரத்திலும்,
தயக்கமற்று நீ
நெருங்கி வரும் நேரத்திலும்,
எனக்குள் ஒரு தீர்வை
தருவது உன்
ஆழபார்வை மட்டுமே!!!!!

* குழந்தையாக ஒரு நாள்...
குமாரனாக ஒரு நாள்...
மண்டியிட்டு ஒரு நாள்...
மவுனமாக ஒரு நாள்...
கொஞ்சல்கள் சில நாள்....
எனக்கான கெஞ்சல்கள் பல நாள்...
புரிந்து பல நாள் ....
புரியாமல் சிலநாள்......
என நீண்டு செல்லும்
எல்லா நாட்களிலும்
நீங்காமல் நிறைத்திருப்பது
உன் நினைவுதானடா.........

* பிழையென பலர்
பார்வைக்கு பட்டாலும்,
தவறே என்று சிலர்
தர்கமே செய்தாலும்
நிலவும் அழகுதான்....
உன்னோடான என்
உறவும் அழகு தான்....



அன்புடன்
ரேவா

நம் காதல்


* ன்னில் நான் உனைக்காண,
உன்னுள் நீ எனைக்காண
நம்முள் வளர்ந்தது 
நம் காதல்

ப்போதெல்லாம்  நான்
அதிகம்   கண்ணாடி 
பார்க்கின்றேன்...
என்னுள் ஒரு பேரழகு 
காதலாய் 
குடிகொண் டிருப்பதால்!!!!!


அன்புடன் 
ரேவா

வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஒரு தலைக்காதல்

 
** எதையோ எழுத பயணித்து 
எதிலோ வந்து முடியும் 
என் கவிதை
பயணிப்பது என்னமோ 
ஒரு வழிப்பாதை தான்....
காதலோடு உன்பெயரையே 
எழுதிக்கொண்டிருப்பதால்....


** நன்றி சொல்கிறேன்...
நீ தூக்கி எரிந்தபின்னும்
துளிர்விடும், 
என் காதல் கவிதைகளுக்கு...
** கோவத்தை நீ எப்போது   
கொடுத்தாலும், அதையுட்க்கொண்டு
அன்பு  எனும் ஒளிச்சேர்க்கை மூலம் 
காதல் தருவேன்...
காலத்தோடு ஏற்றுக்கொள்.... 
என் காதலை...
 
** நிமிட இடைவெளியில் கூட 
உன்னை நினைக்க மறப்பதே 
இல்லை என் இதயம்...
ஆம்!!!!
என் காதலாக நீ  இல்லாவிடிலும் 
காலம்தோறும் என் காதல்
நினைவுகளை
என் இதயத்தில் சுமக்க 
தயாராக இருக்கின்றேன்....
ஒரு தலைக் காதலோடு...

 அன்புடன்
ரேவா 

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நம் விவாகரத்து..



* கண்ணியமான காதலர் 
நாம் என்று ஊர் சொல்ல...
நாலடிச்சுவரை இரண்டாய் 
பிரித்து நீ வேறாய் நான் 
வேறாய் வாழ்வதை யாரறிவார்...

* காதலில் செல்ல கோவமும்,
சின்ன சின்ன சந்தேகங்களும்
அழகாய் தோன்ற, 
இன்று நம் மணவாழ்வில்
காதலும் காணாமல்  போக..
கோவமும், சந்தேகமுமே
உன்னை பலமாய் ஆட்கொண்டுளுள்ளது
என்பதை நான் அறிவேன்..
* அன்பாய் உணவு பரிமாற...
தோல்வியில் உன் தோள்சாய்ந்து 
என் துயர் சொல்ல,
உனக்காய் நான், நமக்காய் நம் குழந்தைகள் 
என்று ஊர் மெச்ச வாழ்வோம் என்று 
சொன்ன நம் உரிமைகள் எங்கே????
* உன்னால் பலமற்று போன 
என் மனதிற்கு அறுதல் 
எல்லாம் நம் காதலின் 
மீதங்களாய் போன நாம் குழந்தைகள்தான்..

* நீ நீயாகவே இருக்க,
நான் நானென்பதை தொலைத்ததின் 
விளைவு நம் விவாகரத்து...

* மூத்தவன்  என்னிடமும்,
இளையவள் உன்னிடமும்,
நம்மிடம் இல்லாத காதலால் 
பிரிக்கப்பட, நிர்கதியாய் 
நிற்பது நம் மீதத்தின் 
எதிர்கால வாழ்க்கைதான்... 

* இனி நாம் காதலர் இல்லை 
கணவன் மனைவியும் இல்லை...
நலம் விசாரிக்கும் உறவும் இல்லை...
என் குழந்தைக்கு நீ தாய் 
உன் குழந்தைக்கு நான் தந்தை...
எங்கே சென்றது நம் காதல்.
..
உன்னை பார்க்காத நாட்கள் எல்லாம் 
நரகத்தின் வாசல் நின்றேன் என்று
சொன்னாயே????
எங்கே சென்றது நம் காதல்...
உன்னோடு காலமெல்லாம் காதலோடு வாழ்வேன்
என்றாயே எங்கே சென்றது நம் காதல்???...
** ஆளுமைகள் ஆட்சி செய்தால் 
அன்பென்பது தொலைந்து போகும்...
குடும்பமும் குழைந்து போகும் 
என்பதை புரிய நான் கொடுத்த
விலை நம் மணமுறிவு... 

* நமக்காய் காத்திருக்கும் கடமைகள் 
ஒருபக்கம்...
மரணத்தில் பிடியில் மாட்டும் வரை 
உன் பிரிவு தரும் வலி
ஒரு பக்கம்...
நம் குழந்தைக்கு நல்ல பெற்றோராய்
இருக்க தவறிப்போன வேதனை 
ஒரு பக்கம் 
என என் எல்லா பக்கங்களும் 
வலி கொண்டு நிரப்பிய என் காதல் தேவதையே!!!

** கண்ணியமான காதலர் 
நாம் என்று ஊர் சொல்ல...
நாலடிச்சுவரை இரண்டாய் 
பிரித்து நீ வேறாய் நான் 
வேறாய் வாழ்வதை யாரறிவார்..

* ஆளுமைகள் ஆட்சி செய்தால் 
அன்பென்பது தொலைந்து போகும்...
குடும்பமும் குழைந்து போகும் 
என்பதை புரிய நான் கொடுத்த
விலை நம் விவாகரத்து..



அன்புடன் 
ரேவா

வெள்ளி, 14 ஜனவரி, 2011

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...





பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
தித்திக்கும் இனிய தமிழர் 
திருநாள் வாழ்த்துக்கள்...
*************
தைமகள் எல்லா வளங்களையும் 
எல்லோர்க்கும் குறைவில்லாது 
கொடுக்கட்டும்....

அன்புடன் 
ரேவா 

புதன், 12 ஜனவரி, 2011

உன்னால் கற்றுக்கொண்டோம்

* வெற்றியும் தோல்வியும் மாறிமாறி 
நம்மை உருமாற்ற
நம் உயர்வுக்குத்தான் எதுவும் என்பதை 
அனுபத்தில் கற்றுக்கொண்டோம் 

* விழிநீர் வடிந்தாலும் உமிழ்நீர் கொட்டி உரசிப்பாக்கும்
சதைபிண்டங்கள் மத்தியில்...
விழுகின்ற நீரை துடைக்கின்ற கரங்களும் 
உண்டென்பதை புரிதலில் கற்றுக்கொண்டோம்

* தோற்றிடும் போதெல்லாம் தேற்றுவோர் 
நான் என்று மார்தட்டி,
நாம் தோற்றதை சொல்லிச் சொல்லி 
தூற்றுவோர் மத்தியில், 
நம் தோல்வியின் 
வேர்தனை தூர்வாரும் உறவும் 
உண்டென்று கற்றுக்கொண்டோம் 

* கூர்கொண்ட ஆயுதமின்றி,
கூர்மளிங்கிய நாவும் கூட காயப்படுத்துமென்பதை
கூறுகெட்ட நம்  நாவின்  வழியே கற்றுக்கொண்டோம் 

 * றந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்  
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்
என்பதை வித்தகர்கள் விதைத்திட 
விதையின் வழியே கற்றுக்கொண்டோம் 

* ள்ளொன்று வைத்து புறம் ஒன்று 
பேசுவோர் தன்னை புன்னகையின் துணைகொண்டு
 புறம் தள்ள கற்றுக்கொண்டோம் .

* ன்பாய் பேசி ஆலகால விஷம் கக்கும்
 கொடியோரிடமும் அமுதுண்டு என்பதை 
அவரருகிலிருந்து கற்றுக்கொண்டோம் .

* வனவனாய் இருக்க தோற்றுப்போய்
முகமூடி தனை அணித்து முகவரிதொலைத்த 
மூடர்கள் முகத்திரைகளைய கற்றுக்கொண்டோம் ..

* காதலில் விழுந்து விழி நீர் தேங்கி
தவிக்கும் நேரத்திலெல்லாம்,
காதல் என்பது  பொறுமையாய் பொருத்தரிதலில் 
உண்டென்பதை நட்பின் மூலம்  கற்றுக்கொண்டோம்

* பேய்மழையாய் இருந்தாலும் 
கடைசி துளி வந்தே நின்று போகும்...
போராட்டமே வாழ்வென்றாலும் 
சின்ன சின்ன சந்தோசங்கள் நம்மை கரைசேர்க்கும் 
என்பதை பொறுமையோடு கற்றுக்கொண்டோம்

* யிர்சக்தியை ஒன்றாய் குவித்து
உண்மையும், உழைப்பையும் ஒன்றாய் திரட்ட
கிடைத்திடும் வெற்றி என்பதை
உன் சக்தி கொண்டு கற்றுக்கொண்டோம்....
ஆம் எம்  உயர்வுக்கு உயிர் சேர்த்த 
" மனமே" ... உன்னால் கற்றுக்கொண்டோம் ..

(நல்லோர் மனதிற்கும் , தன் பிம்பம் இதுவென அறிந்திடும் 
மனதிற்கும் , என் கவியில் காதலை கடந்து பயணப்பட என்னை உந்திய மனதிற்க்குமாய் இக்கவிதை.... புது முயற்சி பிடித்திருந்தால் மனம் விட்டு பாராட்டலாமே...)
அன்புடன் 
ரேவா 

வாழ்வது மெய்யடா

Collage Images Free Image Hosting Photo Sharing


காதலே!

நான் வாழும் நேரத்திலும்
நீ இன்றி
நான் வீழும் நேரத்திலும்,
உன் காதலோடு நான்
வாழ்வது மெய்யடா.......

*ன் நினைவோடு
நீ நின்ற இடத்திலும்,
நீ ரசித்த பொருளையும்
உன் நினைவாய் வைத்து
நான் ரசிக்கும் என் காதல்
மெய்யடா..............

* நீ முதன் முதலாய்
எனக்காய் கொடுத்த
பரிசையும் உன் நினைவாய்
எனக்குள் வைத்து, அந்த
பொருளோடு உன்
இஸ்பரிஸம் காணும்
என் காதல் மெய்யடா............

* நான் தூங்கும் நேரத்திலும் ,
தூக்கம் இன்றி
நான் துவளும் நேரத்திலும்
அன்னை மடியாய்
எனக்கு அறுதல் தரும்
உன் நினைவுகளோடு
நான் வாழ்வது மெய்யடா....

* த்தமின்றி நான்
அழுகின்ற நேரத்திலும்,
சத்தமாய் நான்
சிரிக்கின்ற நேரத்திலும்,
சாதனையாய் என்
எழுத்துகள் வரமறுக்கின்ற
நேரத்திலும்,
வரமளிகின்ற உன் புகைப்படத்துடன்
நான் கலந்துரையாடும்
என் காலம் மெய்யடா.......

*னிமையில்
உன் நினைவில் தவிக்கும்
நாட்களிலும்,
தவமாய் உன்னருகில் நான்
இருக்கும் நேரத்திலும்,
உனக்கு மட்டும் என்னுயிர்
என்று நான் என்னும்
என் எண்ணம் மெய்யடா....


காதலே!
நான் வாழும் நேரத்திலும்
நீ இன்றி
நான் வீழும் நேரத்திலும்,
உன் காதலோடு நான்
வாழ்வது மெய்யடா......


அன்புடன்
ரேவா

புதன், 5 ஜனவரி, 2011

நினைவிருக்கா????


*முதன் முதலாய் என்னைப்பார்த்தபின் 
 என் அலைபேசி, எண்கள் கேட்டு
நீ என் தோழியை நச்சரித பொழுதுகள்
உனக்கு நினைவிருக்கிறதா??

* வாங்கிய எண்ணில்
உன் எண்ணங்களை வகைப்படுத்தி
நீ அனுப்பிய குறும்செய்திகள்
நினைவிருக்கிறதா....

* குட்டி போட்ட பூனை போல
என்னை சுற்றி சுற்றி
வந்து நீ ஆர்ப்பரித்த அந்த ஆனந்த
தருணங்கள் நினைவிருக்கா?

* உன் காதலை வழிமொழிந்து
என் காதலை நானும் சொல்ல
வானுக்கும் பூமிக்கும் நீ குதிக்க, 
நீ செய்த  சேஷ்டையை  வேடிக்கை பார்த்த
அந்த பஸ் நிறுத்த போலீஸ்
அதிகாரி உன்னை கண்டித்தது
நினைவிருக்கா?

* உதடு கடித்து சிரிக்கும், உன் சிரிப்பு 
அழகு என்ற உரைத்தபோது,
இரட்டைபொருள்தரும் ஒற்றை கவிதை
சொல்லி சிரித்தாயே... அந்த
இதம் தரும் நாட்கள் நினைவிருக்கிறதா???

* என் முதல் ஊதியத்தை
ஆர்வமாய் உன்னிடம் கொடுக்க....
காலரை தூக்கி விட்டு... அன்பு ஆணாதிக்கம்
புரிந்த அந்த அந்திநேரம் நினைவிருக்கா?

* கோபத்தில் நான் பொறிந்து
தள்ள, அமைதியாய் கேட்டுவிட்டு,
பின் என் அமைதிகுலைத்து
நீ பேசாமல் என்னை தவிக்க விட்ட
நாட்கள் நினைவிருக்கா????


* நான்  அனுப்பிய குறுச்செய்தியை
இன்றும் அழிக்காமல்...
என் சுவாசம் இது
என்று  காத்து என் காது கடித்த
காலம் நினைவிருக்கா?

* நம் காதலை நம் பெற்றோர்
அறிய, உன் வாழ்கை நான் என்று
அவர்கள் முன் என் கைப்பற்றி
நடந்தது  நினைவிருக்கா?

* ஊரார் முன்னிலையில்
என்  கரம் நீ  பற்றிய அந்த
இதம் தரும் இனிய நாட்கள் நினைவிருக்கா??

காதலே!!!
இந்த காதலில்,
எங்கே பரவசப்பட்டோம்,
எங்கே பயணித்தோம்  என்று
தெரியாமல் வெகு தூரம் சென்று விட்டோம்...
இந்த இனிய நாட்கள் நயமாய் நகர்ந்தாலும்....

இன்று!!!!நீ என்னை
பார்ப்பதும் அறிதாகி...
உன்கை பற்றி உலவுதலும் அறிதாகி...
உரையாடலும் குருஞ்ச்செய்தியாய் சுருங்கிப்போக..
பொருள் தேடி வாழ்வின் உயர்வு தேடி  நீ
பறந்து கொண்டே இருக்கிறாய்  ..
இன்பச்சுமைதாங்கும், சுமைதாங்கியாய்
நீ சுழன்று கொண்டே இருக்கிறாய்..

ஆனாலும் என் காதல் கணவனே!!!!
சொல்லிவை,
உன் செல்லத் தோழியிடம்,
என்னை விட அதிகநேரம்
அவளிடம் தான் இதழ் பொருத்தி
உறவாடுகிறாயாம்..
என்னை பார்த்து ஏளனமாய்
கணிசிமிட்டி என் காது கடிக்கிறாள்
 உன் கைபேசி...

என்னை விட உன் அன்பு தோழன்தான்
உன்னை அதிகம் சுமக்கிரானாம்,,
உன் இருசக்கரவாகனம்,
என்னை இருமாப்புடன் பார்த்து சிரிக்கிறது..

என்னை உன் இதயத்தில் வைத்ததை விட
உன் கண்களை இணையத்தில் தான் அதிக நேரம்
வைக்கிறயாம்... உன் கையோடு இருக்கும்
உன் லேப்டாப் சொல்கிறது...

உயிரற்ற பொருளோடு
உறவாடும் என் உயிரானவனே!!!!
உன் உறவான என்னோடு
உறவடாது எனை ஏங்கவைத்தல்
நியாயமா என் காதலே!!!!

என் காதலே!!!!இந்த காதலில்,
இன்று!!!!
பார்ப்பதும் அறிதாகி...
உன்கை பற்றி உலவுதலும் அறிதாகி...
உரையாடலும் குருஞ்ச்செய்தியாய் சுருங்கிப்போக..
பொருள் தேடி வாழ்வின் உயர்வு தேடி  நீ
பறந்து கொண்டே இருக்கிறாய்  ..
இன்பச்சுமைதாங்கும், சுமைதாங்கியாய்
நீ சுழன்று கொண்டே இருக்கிறாய்..
இதில் என்னை நினைவிருக்கா????


அன்புடன்
ரேவா

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

என் காதல் எதிர்பார்ப்பு

 
* காதலாய் முதல் முதல்
என் இதயம் தொட்ட 
என் கள்வனே!!!

* ன் இதயம் உன்னிடம்  மாறிய
காலம் முதலே உன்னோடான
என் காதல்  எதிர்ப்பார்புகள்
நீளத்துடங்கின..

* ழுகையில் ஆரம்பித்து
புரிதலில் தொடங்கி,
அரவணைப்பில் முடியும்
என் வாழ்வின் பக்கங்கள்
உன் வரவையே
எதிர்பார்த்து  காத்திருக்கின்றன....

* செல்ல சினேகிதா!!!
உன் காதல் சொல்லி நீ
எனக்காய் காத்திருந்த காலம்
எல்லாம் கர்ஜனையோடு 
உன்னை வெறுப்பதாய்
என் அழகோடு நான் கர்வம் கொண்டேன்...

* ன் காத்திருத்தலின் வேகம்,
உன் அன்பின் ஆழமும் 
என்னையும் காதல் கொல்லச்செய்தது ...

* ன் வழிவரும்வரை
என் விழிப்பார்வைக்கு
காத்திருந்த நீ.,
இன்று விழிமேல் வழிவைத்து
காத்திருந்தும் வேலையின் பெயர் சொல்லி
என்னை காக்கவைப்பதேன் 
காதலா?



ன் எதிர்பார்ப்பெல்லாம்  
* தலை சாய்ந்து படுக்கும்
போது... அரவணைக்கும் தோளாய்
கோதுகின்ற விரலாய்,
 உன் நேசம் எனக்காய் இருக்க  வேண்டும்...

* ண்டையின் போது சமாதான 
தூதுவனாய் உன் முத்தம்
எனக்காய் இருக்க வேண்டும்...

* லுவலக நேரத்தில் 
அலுக்காமல்  உன் அலைபேசியில் 
எனை அழைத்து அன்புகதை
நீ  பேசிடவேண்டும் ...
* விரும்பிய நேரத்தில்
என் விழிகள் தேடும் தூரத்தில்
உன் பிம்பம்.நான் காண வேண்டும்.

* சோதனைகள் வந்தாலும்..
சாதனைகள் புரிந்தாலும்
உன் தோள்சாய்ந்து
நான் வெற்றி கூச்சலிட
நட்பாய் நீ எனக்கு வேண்டும்...

தோல்வியின் வேதனையிலும்...
வெற்றியின் பாதியிலும்
பலம் தரும் பாதுகாவலாய்
நீ எனக்கு வேண்டும்..

* றவாய் வந்து என் உணர்வில்
கலக்கும் என் உயிராய் நீ எனக்கு வேண்டும்..

* நான் வாழ்கின்ற வரைக்கும் 
என் காதல் மரணம் தொட்டு முடியும் 
வரைக்கும் உன் காதல் எனக்காய் வேண்டும்... 

* ன் இதயம் கவர்ந்த கள்வனே !!!!
உன்னோடான என் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றத்தை தந்தாலும்.. 
எதிர்பார்க்காமல் என்
எதிர்கால வாழ்வை
வாழ கற்றுத்தந்தது உன்னோடான
என் எதிர்பார்ப்பு...
ஆம்!!!!
* ன்பு கொண்ட நெஞ்சில் எல்லாம்
ஆயிரம் அசைகள் இருக்கும்
என்றால்...
ஆன்பால் எனைவென்ற என்
ஆடவனே!!!
நீயின்றி நீளும் என் நாட்களின்
எதிர்பார்ப்பெல்லாம்....
உன் குரல் கேட்டு
என் பொழுது விடியவேண்டும்...
உன் மடியில்
என் இரவு முடியவேண்டும்...

ன்புன் 
ரேவா

சனி, 1 ஜனவரி, 2011

மறந்து போன கவிதை.



* கவிதையாய்!!!!!
நீ என்னை கடந்து போகும் போதெல்லாம்
நியாபகம் வருகிறதடி,
என்னை வளப்படுத்த
நான் சேமித்து வைத்த
உந்தன் நினைவுகளும்....
உனக்காய்  எழுதி
உன்னிடம் கொடுக்க
மறந்து போன எந்தன்
கவிதையும்!!!!!!

 * என்னை விட்டு சென்ற பின்னும் 
விடாமல் துரத்தும்
உன் நினைவுகளும், 
உன் கவிபேசும் கண்களும்,
உனக்காய் நான் எழுதி 
உன் விழி பார்க்காமல் 
மறித்து போன 
என் கவிதையும் ,
என் பெண் கவிதை 
உன்னை
நினைத்து கொண்டே இருக்கும்


அன்புடன் 
ரேவா