உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 3 நவம்பர், 2012

அவள் அப்படித்தான்

அவளைப்போலவே நீங்களும் வரைந்திருக்கலாம் உங்களின் எண்ணங்களிற்கான ஒரு வட்டத்தை... இதுவரை அவள் வரைந்துகொண்ட அவளின் கட்டுப்பாடுகளைக் குறித்த கவலையோ அதிலிருந்து மீளவேண்டுமென்ற தவிப்போ தோன்றவேயில்லை அவளுக்கு மேலும் மேலும் அவளை நெருங்கும் யாரும் அவளை நெருங்காதிருக்க கட்டுப்பாடுகளின் வட்டத்தை நெருக்கிக்கொண்டே...