உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 27 மார்ச், 2015

காகிதத்தில் தன்னை வரைந்து பார்க்கிறாள்
ப்ரியாகுட்டி
நீள கேசங்களை காற்றில் பறக்கவிட்டு
ரோஜா வண்ணத்தில் சட்டை வரைந்து
நீல நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து
கையில் கைப்பையுடன்
காலில் செருப்பு மாட்டி
உதட்டில் சாயமிட்டு
நெற்றிப்பொட்டு வைத்து
நேர்த்தியாய் வரைந்துகொண்டு போகிறாள்
தன்னை தான் வரைந்த படமென்று
அப்பா
கண்களுக்கு உயிர்கொடுக்கும்படி
திருத்தச்சொல்கிறார்
அம்மா
துப்பட்டா கொடுத்தாள்
கூடுதல் அழகென்கிறாள்
ஆனாலும்
அதையெல்லாம் செய்யாதே
தன் சித்திரத்தை வியந்துகொள்கிறாள்
தன் சித்திரத்திலிருக்கும் தன்னை
பிரபஞ்ச அழகியென பெயர் சூட்டிக்கொள்கிறாள்
பின்னொரு நாளில்
அச்சிறுபடமும் சின்ன சட்டத்தில்
அடைபட்டுப்போன நாளில்
அதைப்பார்த்து பார்த்து வியக்கிறாள்
அறியாமையால் ப்ரியாகுட்டி...