♥ ♥ ♥ உயிரினும் மேலான காதலுக்கு.....♥ ♥ ♥

♥ நம் முதல் சந்திப்பில் மௌனமாய் நீ கடந்தாலும், உன் காதல் புரியாமல் இல்லை என் இதயத்திற்கு...

எனக்கும் கவிதை தேவைப்படுகிறது

யாரோ ஒருவனுக்காய் உள்ளிருக்கும் ரகசிய ஆசை முடிச்சுகளை நான் அறியாமல் அவிழ்க்கிறது என் கவிதை....

வா இப்போதே காதலிப்போம்...

அம்மா என் பெயர் சொல்லி அழைக்கும் போதெல்லாம் மறக்காமல் வந்து விடுகிறது உன் நினைவு...

மழலையின் ஏக்கம்

வணக்கம் நண்பர்களே நலமா? சமீபத்தில் தமிழ் திரை உலகை பெருமைப் படச் செய்த விஷயம்,

அவன் நினைவோடு நான்....

அடர் இருளில், யாருமற்ற சாலையில், என் கைகளில் பத்து விரல்கள் முளைத்த நேரம்....ஆம் என் அருகில் அவன்.....இருளோடு பயம் கொண்ட நானே,

உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

எனக்குள் தான் நீ...

26 நேசித்த உள்ளங்கள்



இதுவரை
உன் பெயர்  நான் அறிந்ததில்லை,
வாய்வலிக்க உன்னோடு
வாயாடிப் பார்த்ததில்லை..
அணு அணுவாய் எனை இம்சிக்கும் 
சிணுங்கலின் இனிமை அறிந்ததில்லை..
எப்போது உன் அழைப்புவரும்
என்ற சிந்தனையில்  சிக்கவில்லை...
அன்பு வைத்து பின் அழுதுவடிக்கும்
அனுபவம்  வாய்க்கவில்லை.
சம்பிராதாய குறும்செய்திகளில்
என் கைப்பேசி  நிறையவில்லை..
எனக்கு மட்டும் என்ற சாட்டையடிகளின்
வலி கொஞ்சமும் உணர்ந்ததில்லை..
உனக்காய் என் சுயம் மறைக்க
இதுவரை நானும் பழகவில்லை
பொய் சொல்லி பின் சிக்கும்
செல்லச்சித்திரவதைகளில் சிக்கவில்லை..
உன் முகவரி தெரியாது
முகவுரையும் அறியாது
கேட்டு தெரிந்துகொண்ட
விக்கிரமாதித்தன் கதை வேதாளமாய்
கவியெழுதும்போதெல்லாம்
காதல் மரத்தில் ஏறிக்கொள்கிற
இந்த மனதிற்கு ஏற்றவனை
இதுவரை நான் காணவில்லை..
என்றாலும்
” நீ ”
எனக்குள் தான் இருக்கிறாய்...






புரியாத செயல்

21 நேசித்த உள்ளங்கள்


கர்ணகொடூரமாய் நிகழ்ந்துவிடுகிறது
இந்நாட்களில்
இதுபோன்றதொரு
சம்பவம்.......

எவ்வளவு மென்மையானவற்றையும்
புறந்தள்ளிவிடுகின்றது
புரிந்தவரின் புரியாத
இந்த செயல்...

இந்த செயலுக்குப் பின்
எதோ ஒரு வலியும்
மூர்க்கத்தனமும்
மூர்ச்சையாகித்தான் கிடக்கின்றது...

ஏமாற்றபட்டதன் வலியும்,
ஏமாந்துபோனதன் கோவமும்,
நீண்ட நேர நினைவுத்தேடலும்,
கண்ணீரில் கொண்டுவந்து
முடிக்கின்றது..

முடிந்ததாய் நினைத்திருந்த
வேளையில்,
நம் பலவீனங்கள்
பழைய பிரியங்களை
கண்முன்னே
பிரிந்துப்போடுகின்றது...

பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்தபின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
.



இங்கே மாப்பிள்ளை வாங்கப்படும்.....

15 நேசித்த உள்ளங்கள்



                  இணையத்தில் படிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு கணவன்கள் விற்க்கப்படும்ங்கிற நகைச்சுவை தாங்கிய ஒரு பதிவ படிக்க முடிஞ்சது... பெண்களை எப்பவும் திருப்தி படுத்தவே முடியாதுங்கிற ஒன்லைன் ஸ்டோரி....படிச்சதும் பெண்கள் மட்டும்தான் இப்படியான்னு எப்பவும் ஏற்படுற கோவத்தோட உதட்டோர புன்னகையுமா அந்த தளத்தை விட்டு வெளிய வந்தேன்..அதே இடத்தில ஆண்களை பொருத்தி பார்த்தேன், எதிர்பார்ப்பு ரெண்டு தரப்புக்குமே பொதுவான ஒன்னுதானே... அன்பான ஆண்களை பெண்கள் தேடுனா, அழகான அன்பான பெண்களை ஆண்கள் தேடுவாங்க... சோ இங்க யாரையும் எதுலையும் திருப்தி படுத்த முடியாது, அவங்க அவங்களா நமக்கு கிடைச்சத வச்சு திருப்தி பட்டுக்கிட்டா தான் உண்டு....

கணவன்கள் விற்கப்படும்...... ஹஹா தலைப்பு நல்லா இருக்கா... ஆண்கள் கல்யாணச்சந்தையில விற்கப்படும் கடைச்சந்தை பொருளா போயிட்டாங்களா? இல்லை பெண்கள் தான் தனக்கு வர்ற மனுசன கடைச்சந்தை பொருளா மாத்திட்டாங்களா? ஒன்னும் புரியல...

ஆனாலும் காலம் காலமா நடந்துகிட்டு இருக்கிற விவாதம் தான் இந்த கல்யாணச்சந்தை...கடவுளே தன் கல்யாணத்துக்கு வரதட்சணை வாங்கினார்ன்னு சில தகவல்களை நம்மளும் கேள்விப்பட்டுருப்போம்... நான் வரதட்சணை வாங்க மாட்டேன்னு ஒரு முற்போக்கான ஆணாளையும் சொல்ல முடியாது, வரதட்சணை கொடுக்க மாட்டோம்ன்னு ஒரு பொண்ணாலையும் சொல்ல முடியாது....... ஏனா சமூகம் எந்த ஒரு ஆரோக்கிய நகர்வுக்கு பின்னாலையும் ஒரு அதிபாதாள குழியத்தேண்டி போட்டு எவண்டா மாட்டுவான்னு ஒக்காந்திருக்கும்..... நான் இப்படி நடக்கனும்ன்னு சொன்னா ஏன் அப்படி நடக்கக்கூடாதான்னு கேள்விய சுருக்கு கயிறா நம்ம கழுத்துல கட்டிவிடும்...இப்படி அடுத்தவங்க கேள்விக்கு பயந்தோ இல்லை அந்த பயத்த நமக்கு சாதகமா எடுத்துக்கிட்டோ தான் இந்த சந்தை வியாபாரம் இன்னமும் களைகட்டிகிட்டுயிருக்கு.........

ஆண் பிள்ளைகள் பெற்றவங்க என்னமோ நாடாளும் அரசர்கள் மாதிரியும், பெண் பிள்ளைகளை பெற்றவங்க என்னமோ அவங்களுக்கு வரி கட்டி உயிர் வாழும் சிற்றரசர்கள் மாதிரியுமான அமைப்ப நாம பழக்கப்படுத்தி வழக்கப்பட்ட இந்த சமூகம் (முன்னோர்கள்) நமக்கு தந்திட்டு போயிடுச்சு....இன்னுமும் இந்த வழக்கம் நம்ம விட்டு போகலைன்னு தான் சொல்லலாம்...

இன்னைக்கு கல்யாண சந்தையில, ஒரு ஜோடி புதுசா இணைச்சாலும் காசு, புடிக்கலைன்னு பிரிஞ்சாலும் காசு...பணத்தை சுத்தியே இந்த பந்தத்தை நாம கட்டிப்போட்டுட்டோமா? இல்லை என்கிட்ட இருக்குங்கிறத காட்டி இல்லாதவங்களையும் இருக்கிறமாதிரி காட்டிக்க வைக்கிறோமா?

ஆனாலும், அர்த்தமுள்ள வாழ்க்கைங்கிறது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணத்தில தான் கிடைக்குது... இத கேலிக்கூத்தா ஆண்கள் எண்ணலாம், ஆனாலும் பெண் சரியில்லாத எந்த ஒரு இடமும் நரகம் தான், ஆனா பெண்ணுக்கு அப்படியில்லை ஒரு ஆண் எப்படி இருந்தாலும் அதோட எந்த பாதிப்பும் இல்லாம அவ சுத்தி இருக்கிற இடத்த பாத்துக்க முடியும்... (சில நேரங்களில் சில கருத்துகள் மாறுபடலாம்)..

எந்த வித ரத்த சம்மந்தமும் இல்லாம ஆத்மார்த்தமா உருவாகிற ஒரு உறவ இன்னைக்கு விலை பேசும் நிலைக்கு மாத்துனதுக்கு யார் தான் காரணம்...... 

இளைங்கலை படிச்சா ஒரு ரேட்டு, முதுகலை படிப்பு முடிச்சா ஒரு ரேட்டு, வசீகரமா இருந்தா ஒரு ரேட்டு, பையன் படிச்சு பாரின்ல இருந்தா டபுள் ரேட்டுன்னு ஆண்களை பெத்தவங்க அவங்களுக்கு கல்யாண் புரட்டி போராட்டம் மாதிரி பிரைஸ் டேக் போட,

பொண்ணுங்கள பெத்தவங்களும், பையன் தனியா இருங்காரா, கல்யாணம் முடிச்சதும் தனிக்குடித்தனம் வந்துருவாரா? ஒரு பையனா இருக்காரா? கம்பெனில இங்கிரிமென்ட் கிடைக்குமான்னு அவனையும் ஒரு பணம் பார்க்கும் மிஷனா தான் பார்க்குது..

இந்த நிலை என்னைக்கு மாறும், மாறனும்ன்னு நினைச்சா,  மாற்றம் முதலில் நம்மகிட்ட இருந்து வரனும் அப்போ தான் அது ஆரோக்கியமான மாற்றமா இருக்கும்... இன்னைக்கு வரதட்சணை வாங்குனா இவ்வளவு வாங்கிட்டான்னும் , வாங்கலைன்னா பையனுக்கு ஏதோ குறைன்னு நினைச்சுடுவாங்கன்னும் சொல்லுறாங்க அப்போ தன் தேவைக்கு சமூகத்தின் மேல பழி போடுற மனப்பாங்கு தான் நம்மில் பலருக்கும்... இது பெண் வீட்டாருக்கும் பொருந்தும்...

ஆனாலும் ஒரு வியாபார ரீதியில இந்த உறவுபாலத்தை நாம கட்டிபோட்டுக்க அனுமதிக்கக்கூடாதுங்கிறது மீ ஆசை...முடிஞ்சவரை மனிதர்களின் மனங்களுக்கு மதிப்பு கொடுக்க கத்துகிட்டு, இந்த பணத்தை ஒரு பெரிய அங்கமா கல்யாண உறவுக்குள்ள கொண்டுவராம இருப்போம்...

எது எப்படியோங்க, இன்னைக்கு இருக்கிற நிலை ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை...ஆண்களே எங்க கண்ண மூடிட்டு உங்களுக்கு என்ன விலைன்னு நீங்களே யோசிச்சு பாருங்க.. உங்க விலைக்கு எப்படி பொண்ணு மாட்டும்?....!?!!!!!!?? உங்க விலைக்கு தகுந்த பொண்ணு கிடைக்க இது வியாபாரம் இல்லை விபச்சாரமும் இல்லை........ வாழ்க்கை பாஸூ.... சோ?.... மீ டோன் டெல் அட்வெஸ்....


அம்மா அம்மிணிகளே எங்க அப்படியே கொஞ்சம் உள்ளுக்குள்ள இருக்கிற மனச கொஞ்சம் தூசி தட்டி கேட்டுப்பாருங்க, பையன பெத்த அம்மா அப்பா கூட இருக்கக்கூடாது, பையன் கூட பாரின்ல போய் செட்லாகி ராயலா ஒரு வாழ்க்கை வாழனும்னு நினைக்கிறேங்களா? பையன் சைடு சொந்தம் மட்டும் ஆகவே ஆகாதுன்னு நினைக்கிறேங்களா?... அப்போ சீக்கிரம் ஜீவன் தாரா பாலிசி மாதிரி, ஒரு முதியோர் இல்லத்தையும் ஒரு அட்வான்ஸ் புக்கிங்க் பண்ணிடுங்க....................

 
நம்ம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திரும்பக்கிடைக்கும்.... 
ஹி ஹி இது டவுரிக்கும் பொருத்தும், பின்னாடி டவுசர் கிளியிறப்ப புரியும்............. வரட்டா.................



எனக்கு பிடித்தது தனிமை...

12 நேசித்த உள்ளங்கள்



சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தபட்ட
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு
என் மேல் ...

நலம் விரும்பிகளையும்,
நட்புகளையும்,
எனக்கென இருந்த உறவுகளையும்
வெளித்தள்ளிவிட்டு 
ஒய்யார நடை நடந்துவருகின்றது
என் அறையெங்கும்...

தினம் வரும்
நலம்விசாரிப்புகளிலிருந்து,
நேசம் பரிமாறிடும் காதலிலிருந்து,
அன்பு தாங்கி வந்த
அத்தனை பேரையும்
வெறுப்பை சுமந்து செல்லும் படி
செய்கிறது...

கவிதைகளை கைக்கு
கிடைக்கசெய்துவிட்டு
காதலை தள்ளி வைக்கின்றது....

காலர நடக்கச்செய்துவிட்டு
நான்கு சுவர்களுக்கு நடுவே
கட்டிபோட்டுவிடுகிறது...

இப்போதெல்லாம்,
சுவர் பல்லியும்,
தேநீர் குவளையும்,
சில புத்தகங்களும்,
சில பல கவிதைகளுமே
சொந்தமென்றான பின்,

உண்மையாய் பழகி
உயிரினில் வைத்து
உரிமை பாராட்டுவதாய் நினைத்து
 உதறித்தள்ளும்  உறவுகளை விட
இந்த தனிமை
எனக்கு
பிடித்துதான் இருக்கின்றது...


                      முந்தைய பதிவு : என் பார்வையில் வழக்கு எண் 18/9


என் பார்வையில் வழக்கு எண் 18/9

6 நேசித்த உள்ளங்கள்




வணக்கம் உறவுகளே, இதுவரை கவிதை பதிந்த என் தளத்தில் ஒரு ரசிகையாய் என் தளத்தில் வழக்கிற்க்கான தடத்தை பதிந்திட எண்ணியதன் விளைவே இந்த பதிவு...இது விமர்சனம் அல்ல, பல கோலோச்சும் சாம்ராட்கள் இருக்கும் இடத்தில் அது எனக்கு சாத்தியமும் இல்லை, ஆயினும் என்னை பாதித்த விடயங்களை ஒரு பெண் பார்வையில் பதிந்திட உந்திய விசயங்களை என் எழுத்தில் ஏற்றுகின்றேன்.........

காலையிலும், மாலையிலும், இல்லை நாம் நடந்து போகும் வீதிகளிலும் நாம் கேள்விபட்ட ஒரு செய்தியாய் கதைகளம் விரிகின்றது..... ஒரு பெண் முகத்தில் தீரவக வீச்சு.. அதன் காரணகர்த்தாக்களை தேடும் வேட்டையில் கதை நகர, ஒரளவு யூகித்தலை கதை உண்டு பண்ணிவிடிகின்றது, பின் நம் யுகம் தவறென்பதையும் கதைகளம் நிருபித்துவிடுகிறது...

சினிமா பற்றிய தொழிட்நுட்ப அறிவு எனக்கு இல்லை.. இருப்பினும் நம்மை எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் இருந்த இடத்திலே அறைந்து போடுகின்ற வித்தையை இயக்குனர் பாலாஜி சார் நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்... புதுமுகங்கள் என்று சொல்ல முடியா நடிப்பை வேலு மற்றும், சின்னசாமியாய் வந்து போகும் சிறுவன் தந்துவிட்டு போகின்றனர்...

கதைபற்றி ஓரளவு கேட்டும் பார்த்தும் ஆகிவிட்ட நிலையில் அனைவரும் அறிந்த கதையை இங்கு பகிர்ந்திடாது, என்னை பாதித்த இடத்தை பகிர்கின்றேன்... இன்றைய காலகட்டத்தில் இரண்டே வகை ஆண்கள் தான் காசுக்கும் காமத்திற்க்கும் ஆசைபட்டு காதல் என்ற பெயர் சொல்லி இளமையின் திமிரில் திரிபவர் ஒரு ரகம், இன்னொன்று தாயின் சாயலில் தனக்கான தேடலை கண்டுவிட்டு அவர்களுக்காகவே வாழ்கின்றவர்கள் இன்னொரு ரகம் (இது பெண்ணுக்கும் பொருந்தும்...)

இந்த இரண்டு ரக ஆண்களையும் இயக்குனர் கண்முன் படைத்துவிடுகின்றார்... பக்கத்துவீட்டு சிறுவன் மீது காட்டுகின்ற அன்பை தன் தாய் தன் மீது காட்டும் அன்பு போல் பாவித்து தன் தாய்க்கு சமமாய் ஜோதியை எண்ணி அவளுக்காகவே வாழத்துணிகின்ற ஆண்....

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் அத்தனையும் கண்முன்னே வந்துவிட்ட நிலையில், இந்த வளர்ச்சியை நாம் சரியாக பயன்படுத்துகின்றோமா? என்ற கேள்விக்கு  இல்லை என்பதன் பதிலாய், பணக்கார கதாநாயகனாய் வந்து போகும் தினேஷ் என்ற நடிகரின் செயல் நம் கண்ணுக்கு கிடைக்கிறது..இதே இடத்தில் அந்த பெற்றோரின் அலட்சியமும், நாம் எப்படி இருக்கவேண்டும் என்ற உதாரணத்தை எடுத்துகாட்டிவிட்டு செல்கின்றன...

இன்று நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும் தைரியம் அவ்வளவு சீக்கிரம் எவருக்கும் வந்துவிடுவதில்ல.. அப்படியே வந்தாலும் அது ஈரானிய படங்களோடு நின்றுவிடுகின்ற அவலம் இந்த படத்தில் தீர்ந்தது.. சினிமாவை பணம் பார்க்கும் தொழிற்சாலையாய் பார்த்து பழக்கப்பட்ட பலர் கண்ணுக்கு இந்த சமூதாயத்தை பற்றிய அக்கறை இருத்தாலும் பணம் என்ற மாயை அனைத்தையும் மறைத்துவிடும்..இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கின்ற பல ஆபாச பதிவுகள் இன்றைய இளைய தலைமுறையை எத்தளவுக்கு சீரளிக்கும் அதற்கு பெற்றவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று பாடம் சொல்லும் கதை தான் வழக்கு எண் 18/9... புதிய பாணியில் யாரும் முயற்சி பண்ணாத கேமிரா அமைப்பு என்று கேள்விபட்டேன் அது என்னவோ உண்மைதான். கதை நடக்கும் இடத்திற்கு நாமும் சேர்ந்து பயணிப்பதை போன்ற உணர்வை தருகிறது அந்த உணர்வை தந்த விஜய் மில்டன் சாருக்கு நன்றி... இசை கதையோடே இணைத்திருக்கின்றது..ஒரு குரல் கேட்குது, வானத்தையையே எட்டிப்பிடிப்பேன் இந்த இரு பாடல்களும் இன்னும் முனுமுனுக்க செய்கின்றன...

ஆர்த்தியாய் வந்து போகும் 12ம் வகுப்பு பெண் நாயகன் தினேஷ் வைத்திருக்கும் மொபைல்க்கு ஆசைப்படுவது சற்று நெருடலாய் தெரிந்தாலும் இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படும் சிறுபிள்ளைத்தனம் இன்னும் இருக்கின்ற நிலையில் இனக்கவர்ச்சி எந்த அளவுக்கு நம் வாழ்வை மாற்றிப்போட்டுவிடும் என்பதற்க்கான ஆர்த்தியின் கதாபாத்திரம், அதோடு இன்றைய தலைமுறைக்கே இருக்கும் அசாத்திய தைரியத்தால் தினேஷ்னின் மெமரிகார்டை எடுத்துவிட்டு அவன் நட்பை தவர்ப்பது போன்ற இடங்கள் இன்னும் பெண்கள் எவ்வள்வு பாதுகாப்பாய் இருக்கவேண்டும் என்பதை காட்டுகின்றது...

அடுத்து வேலு என்ன நடிப்புடா சாமி, போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்படும் காட்சியாகட்டும், மற்ற அதிகாரிகளால் அடிக்கப்பட்டு, உயர் அதிகாரியாய் வரும் அந்த பாம்பின் பேச்சுக்கு மயங்கும் இடமாகட்டும், ஜோதியின் முகமாற்று சிகிச்சைக்காய் தன் 10வருட வாழ்வை இழக்க தயாராய் இருந்த இடமாகட்டும், உணர்வுகளில் ஒன்றாகி அவரின் தனிமையின் வலியை  நமக்கு தந்து விட்டு செல்கிறார்... எதார்த்தமாய் சென்ற கதைக்களம் முடிவில் சற்று சினிமாத்தனம் திணிக்கப்பட்டது என்று தான் சொல்லவேண்டும்.....

அரசியல்வாதியாய் வரும் அந்த முகம் தெரியாத நபர் எப்போதும் பெண்களோடு சல்லாபம் செய்யும் காட்சியும் சினிமாத்தனமா தான் எனக்கு தெரிந்தது....பழிக்கு பழி தீர்வாகது என்ற போதிலும் ஜோதி அந்த போலிஸ் அதிகாரி மீது தீராவகம் வீசியது கண்டு ஏனோ என்னை அறியாமல் கைதட்டிவிட்ட இடம்... ஜோதியின் மீதும் அவர் கதாபாத்திரம் மீதும் அப்போது தான் எனக்கு மதிப்பு வந்தது...

இறுதியாய் இந்த படம் பார்வையாளருக்கு செல்லவேண்டிய விஷயங்களை சரியாய் சொல்லியதா என்றால் ஆம் என்றே சொல்வேன்... நம் இளைய தலைமுறை பயணப்பட வேண்டிய தூரம் அதிகம், அதற்கு பெற்றோர்களின் பங்கும், இந்த இணையத்தின் பங்கும் அதிகம்... இன்றைய தலைமுறைக்கு நல்லதை சொல்லித்தருவதை முன் கெட்டதின் தாக்கத்தை முதலில் செல்லித்தந்துவிட வேண்டும், பெண் பிள்ளையை பெற்றவரும், பெண் பிள்ளைகளும் இன்றைய கட்டத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு தீர்வு சொல்லும் கதை தான் வழக்கு எண் 18/9...இன்றைய தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்க்கு தூக்கி நிறுத்திய படம் இது என்று சொல்வதில் பெருமையே...

கதை வழக்கிற்க்கு தீர்வு சொல்லியாகிவிட்டது, வாழும் காலத்திற்க்கான் தீர்ப்பை நாம் தான் வழங்க வேண்டும்...வாகை சூடவா படத்திற்கு அடுத்தாற் போன்ற ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்............... நன்றி உறவுகளே.


Related Posts Plugin for WordPress, Blogger...