உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 29 ஜூலை, 2013

முத்தவழிச்சாலை

  இருபக்கமும் அடர்ந்திருக்கும் அவ்வசீகர சாலை ஆரம்பத்தில் குறுகளாகி ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில் லாவக ஓட்டம் பிடிக்க அழுத்தம் நிறைந்த பகுதிக்குள் தடையின்றி செல்ல நீலியின் கைகள் ஏதுவாய் அமைய தூரமாய் செல்லச்செல்ல செல்ல கைகளாய் மாறிய நிழல் உதிர்ந்த காரணங்களையெல்லாம் கிளையேற்றி பார்க்கும்...

சனி, 27 ஜூலை, 2013

என் டைரிக்குறிப்பில் நீ...

காலத்தின் முகம் அணிந்துகொண்டவனுக்கு,  நானிருக்கும் வரை நலமாய் இருப்பாய் என்ற எண்ணத்திலே எழுத்துகளின் ஊடே உனக்கொரு வலை பின்கிறேன்...எழுத்தில் உன் முகம் பார்க்க, எழுதிட சுகம் சேர்க்கும் உன் நினைவுகளே உற்சாகமெடுத்து ஓடவைக்கட்டும் இனி வரும் வரிகளை..எழுத மறந்து போன நாட்களில்...

வெள்ளி, 26 ஜூலை, 2013

வீட்டுக்கதவு

  எல்லோர் வீட்டின் கதவுகளும் திறந்தே தான் கிடக்கிறது உள்ளே வருவதற்கான அனுமதி மட்டும் உரிமையாளறென்ற பெயரில் நிறுத்தற்குறிவைக்க குறியுடைத்து உள் நுழைபவர்களைப்பற்றிய கவலையோ நம் குறிப்புகளை அவர்கள் படிப்பதில் கிடைத்த சிலாகிப்பை அறிவதில் ஆர்வமோ அந்தரங்கமென ஆட்டிவிக்கும் ரகசியங்களின்...

செவ்வாய், 16 ஜூலை, 2013

ஜோடி தூரிகை

  எதை எதையோ கொடுத்து பேச வைக்கிறாய் யாருமற்ற இவ்வெளியில் சொற்கள் சூரியனாகி சுட்டெரிக்க நீ கொடுத்துப்போன குரல் ஆன்மாவில் பெருங்குரலெடுத்து பாடிக்கொண்டே திரிய கைவிளக்குகளாகிப்போன காரணங்கள் காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த காதலது காத்திருப்பில் கரைய மிச்சமிருக்கும் காலத்தை காட்சிபடுத்த...

செவ்வாய், 2 ஜூலை, 2013

பயணங்கள் முடிவதில்லை......

                      பயணங்கள் எப்போதும் அழகானவை அதை ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல் அழகாக்கிப்போக  நம் எல்லாப்பயணத்திலும் ஏதோவொன்று சேர்ந்தே நம்மோடு பயணிக்கிறது. பயணங்களில் ஜன்னலோரத்து மழைதூரலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தும் சுகானுபவம்...

திங்கள், 1 ஜூலை, 2013

காதலியல்

யாருமற்ற இடம் ஏதுமற்ற மொழி எப்போதும் பிடிக்கும் உனக்கு. உன் மொழி உடைக்க நீட்டித் தருகின்றேன் சிறு இடைவெளியை.. கைகோர்த்துக்கொள்கின்ற இருளுக்குள் இரவல் வாங்கிக் கொள்கிறாய் என் கைகளை... மெளனம் நிறைந்த பாதையை கடந்து வெகுதூரம் பயணிக்கிறது உன் பார்வை இப்போது மழை வேண்டுமென்று உன் மொழி உடைய குடைவேண்டுமென்ற...