
இறுதியாய் முகம் பார்க்கும் மயான சடங்கிற்கும் அழைத்தே செல்கிறாய் அதுவரை அறியாத உயிர் பயமொன்று உள்ளுக்குள் உதறலெடுக்க கனவுகளை எரியூட்டி கண்ணிர் குடமுடைத்து திரும்பிப்பார்க்கமலே அங்கிருந்து கடக்கிறாய் பழக்கப்பட்ட கையசைப்பிற்கும் தோள் சாய்தலுக்கும் வழியின்றி மறைய வரைந்து போகிறாய் சிறு புள்ளியை...