அவரவர் விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே....
என் எழுத்தாய் என் கவியில் இருக்க...
தோற்றது நான் என்று பலர்
எள்ளி நகைக்க...
இதுவே உன் வெற்றி என்று
எனக்கு உத்வேகம் தந்தது
நீ .
பலர் ஆயிரம் விதைக்க,
ஒற்றை கவியில் நான்
என்னை விதைக்க,
தோல்வி என்பது தோற்பதில்
இல்லை,
தோற்ற ஒன்றின்
தோற்றத்தில் இருந்து தொடர்வது,
தொடர்ந்த ஒன்றின் அனுபவத்தில்
இருந்து அமைவது என்று எனக்கு
புரியவைத்தவன் நீ...
உணர்த்திடும் நெஞ்சம் உணரட்டும்
என் மொழியை...
உரைத்திடும் நெஞ்சம்
ஒதுங்கி நிற்கட்டும்....
என்று என் கவிக்கு உணர்ச்சி தந்த
என் நட்பின் கவிதை இலக்கணமே ..
நீ,
காலம் தந்த மாற்றம்,
என் மாற்றம் எல்லாம்
என் நட்பு நீ தந்த தோற்றம்...
தந்த என் மாற்றுத் தாயே ....
என் கவிதையின் ரசிகன் நீ...
என் கவிதையின் காட்சிக்கு கலங்கரை விளக்கம் நீ....
என் கானல் கவிதையின் தூண்டுகோல் நீ...
என்னை தாங்கி பிடிக்கும் ஊன்றுகோல் நீ...
உத்வேகம் தரும் புது இலக்கணம் நீ...
ஆம் பலர் அர்த்தத்தில் அகப்படாத இலக்கண மீறல் நீ!!!
வீழ்வதும், வாழ்வதும்,
அவரவர் விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே...
ஆம்
அன்பு கொண்ட உன் மொழியாலே....
அன்புடன்
ரேவா
4 கருத்துகள்:
என்ன ரேவா ரொம்ப நாளா கவிதைஎதுவும் எழுதலையா
anyway keep going
nandri divyaaa
நல்லா இருக்கு :-)
எவனோ ஒருவன் said...
நல்லா இருக்கு :-)
நன்றி நண்பா
கருத்துரையிடுக