உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 10 ஆகஸ்ட், 2011

ஒரு சொல்.

ஒட்டிய இதழ்களை 
பிரிக்க,
பிரிந்த நம் காதலை 
ஒன்றாக்க,
பிரியத்தின் தவிப்பை
உணரவைக்க,
அழிக்கமுடியா மனக்காயத்திருக்கு
மருந்தாக,
நமக்கான இடைவெளியை
இல்லாமல் ஆக்க,
சொல்லிய வார்த்தை ஆயுதங்களை
மழுமையாக்க,
கண்ணீர் போரின்
காயம் துடைக்க, 
தீராக் கோபத்தின் பின் 
நமக்கான பிரியம் நிரப்ப, 

போதுமாய் இருக்கிறது
மன்னிப்பு என்னும்
ஒரு சொல்..


முந்தையப் பதிவு : அடைமழைக் காதல்.....

அன்புடன் 
ரேவா 


18 கருத்துகள்:

kavithai சொன்னது…

''...நமக்கான இடைவெளியை
இல்லாமல் ஆக்க,...
பல வழிகளில் சாதகமாகவும், பாதகமாகவும் பயன்படுகிறது தான் மன்னிப்பு..
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

காதலர்களுக்கு கை கொடுக்கும் ஒரே வார்த்தை ? மன்னிச்சுகோ.

காதல்ர்கள் மனம் தொடும் வார்த்தை காதல்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஸ்டில் செலக்‌ஷன் நச்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாவ்.............!!!! சூப்பர்.....!!!

எவனோ ஒருவன் சொன்னது…

மன்னிப்பு - ஒரு சொல்லிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் மிக அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை.

Chitra சொன்னது…

very nice.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

மன்னிப்பு...
விட்டுக்கொடுத்தலின் முதல் படி....

மன்னிப்பு...
தொடர் ஊடலுக்காத கடைசிபடி....

வாழ்க்கை இனிக்க விட்டுக்கொடுங்கள்...


அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்..

siva சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
வாவ்.............!!!! சூப்பர்.....!!!

Wednesday, August 10, 2011//

nanum choluvenla..

wow..

beautifull

wonderfull

super..

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

சௌந்தர் சொன்னது…

ம்ம சரி உன்ன மன்னிச்சிட்டேன் பொழச்சு போ...

தமிழ்வாசி - Prakash சொன்னது…

வாவ்..... சூப்பரு

bala சொன்னது…

''காயம் துடைக்க, தீராக் கோபத்தின் பின் நமக்கான பிரியம் நிரப்ப''அருமை தோழியே ! மன்னிப்பு கேட்பதும் கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடாகவே இருக்கும் . வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

மன்னிக்கின்ற மனதில் மனிதம் இருக்கிறது. மறக்கின்ற மனதில் புனிதம் இருக்கிறது.

அழகிய கவிதை ரேவா

தம்பி கூர்மதியன் சொன்னது…

எந்நேரம் பாத்தாலும் மொக்க போட்டுகிட்டு.. அய்யே.. போ!!

நிரூபன் சொன்னது…

மன்னிப்பு எனும் சொல்லினை மனிதர்கள் எவ்வாறு சாதுர்யமாகப் பயன்படுத்தி தம் வாழ்க்கையினை நகர்த்துகிறார்கள், பல ரணங்களிலிருந்து தப்புகிறார்கள் என்பதனை நச்சென்று ஒரு சொல் எனும் விளிப்போடு கவிதை தாங்கி வந்திருக்கிறது.

நிரூபன் சொன்னது…

என் இணைய வேகம், என் நெட் கனெக்சனிற்கு ஏழரை தொடங்கி விட்டது, அதனால் தான் வலைப் பக்கம் வர முடியலை,
நானும் இங்கே மன்னிப்பு எனும் சொல்லைத் தான் யூஸ் பண்ணப் போறேன்.

அவ்.............

நிரூபன் சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் என் பிந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.