உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

♥ ♥ ♥ தீராக் காதல் ♥ ♥ ♥


பேரழகிக்காய் எழுதிய  
கவிதை 
நான்....
என் கவிதையை 
அழகாகாக்கிய 
பேரழகி
நீ....


மழைநேரம்  மண்வாசனையை
எழுப்பி விடுவது போல,
இரவுகளில் உன்னைப்பற்றிய
கனவுகள் என் காதலை 
எழுப்பி விடுகிறது...


மழையில் நனைவது
பிடிக்கும் என்றாள்,
அவள் துப்பட்டா தூரலில்
குடைபிடித்தபடியே..   


குளிக்கச் செல்லும் முன் 
கொஞ்சி விட்டுச் செல்கிறாள்
அவள்,
ஈர முத்தங்களை தண்ணீர்
வாங்கிக்கொள்ளும் என
குளிக்காமலே செல்கின்றேன் 
நான்...
 


உன் அழகைப் பற்றி 
ஆயிரம் கவிதை 
எழுதிவிடுகின்றேன்..
ஆயினும் உன்னைப் போல 
அழகான கவிதை 
இதுவரை பிறக்கவே இல்லை...


சண்டைகளுக்குப் பின்
சமாதானம் தேடும்
வார்த்தைகளை விட,
சலனமே இல்லாமல் நீ
கொடுக்கும் நெற்றி முத்தத்தில்
அடிமையாகிறது என் காதல்.

 நீயும் நானும் பாதியாய்
நம்மில் 
மீதியாய்  இருக்கிறது
காதல்...


எனக்காக கவிதை
எழுதி கொடு என்றவளிடம்,
பரிசாய் பதில் கவிதை 
கொடு என்றால்,
இதழ்களை இணைத்து
கவிபடைத்து செல்கிறாள்
கன்னத்தில்...

 

நீ கொஞ்சிப் பேசும்
அழகை எல்லாம், 
மிஞ்சி விடுகின்றன
உன் முத்ததிற்கான 
என் கெஞ்சல்கள்...

என் இரவுகள் 
கனவுகளை சுமப்பது 
போல
என் நாட்குறிப்பு உனக்கான 
கவிதையை சுமக்கிறது 
காதலோடு...தெரியாத சண்டைகளில்,
புரியாத சமாதானத்தில், 
இடைவேளை தரும்
பிரிவுகளில்,
என மெல்ல 
தலை தூக்குகிறது
நம் காதல்...
 

 யார் முதலில்
பேசுவது,
என்ற சண்டையிலே,
சத்தமில்லாமல் 
சண்டையிட்டுக் கொள்கிறது
நம் காதல்...


12 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

எல்லாக் கவிதைகளையும் ரசித்தேன். அதுவும் படங்களோடு கவிதை போட்டது கவிதைக்கு இன்னும் அழகு சேர்த்தது :-)

நீயும் நானும்
பாதியாய்
நம்மில் மீதியாய்
இருக்கிறது
காதல்...

நான் மிகவும் ரசித்தேன் :-)

சரி எப்படி இப்படிலாம் யோசிப்பீங்கன்னு இன்னும் சொல்லவே இல்ல ;-)

பிரணவன் சொன்னது…

இன்று தான் உங்கள் தளத்திற்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்தது. . . கவிதை மிக அருமை. . .
உன் அழகைப் பற்றி
ஆயிரம் கவிதை
எழுதிவிடுகின்றேன்..
ஆயினும் உன்னைப் போல
அழகான கவிதை
இதுவரை பிறக்கவே இல்லை... எனக்கு பிடித்த வரிகள். . .

suryajeeva சொன்னது…

காதல் எழுதிய வார்த்தைகள்

siva சொன்னது…

சூப்பர்..அழகான கவிதை அருமை தொடருங்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உன் அழகைப் பற்றி
ஆயிரம் கவிதை
எழுதிவிடுகின்றேன்..
ஆயினும் உன்னைப் போல
அழகான கவிதை
இதுவரை பிறக்கவே இல்லை...//


வாவ் ரேவா'யா கொக்கா ம்ம்ம்ம் அட்டகாசம், தேன் கவிதைகள்...!!!

விக்கியுலகம் சொன்னது…

கவிதை கவிதை சூப்பர்!

தினேஷ்குமார் சொன்னது…

அனைத்தும் அருமை ,,,,

சே.குமார் சொன்னது…

கவிதைகளில் காதலும்
அதற்கான படங்களில் காதலின் காதலும்
வழிகின்றது... அவ்வளவும் காதல் தேன் சிந்தும் கவிதைகள்.

Nirosh சொன்னது…

ரசனைமிக்க கவிதைகள் வாழ்த்துக்கள்...!

அப்படியே எனது தளத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்..!

பெயரில்லா சொன்னது…

காதல்... ஊடல்.. மற்றும் கவிதை எல்லாம் நல்லாயிருந்தது..

பெயரில்லா சொன்னது…

இப்படி சின்ன சின்ன கவிதைகளை கோர்த்து மிக அழகாக ஒரு கவிமாலை படைத்திருப்பது மிக அழகாக இருக்கிறது..


வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

கருத்துரை இட்ட அத்துணை நட்புக்கும் நன்றிகள் :)