உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 30 ஜூலை, 2012

சின்ன சின்னதாய் காதல்..5எத்தனைமுறை
இறுக கட்டியும்
அவிழ்ந்துவிடுகிற மனதை
நானும்,
ஈர்க்கின்ற விழியை
நீயும்,
பெற்றிருக்கின்றோம்
காதலிடம்...காட்டிக்கொடுத்த
கண்முன்-உன்னை
கட்டிப்போடுகிறது
காதல்...

நீயில்லா அறையில்
தனக்கு பிடித்தவாறு
உன்னை நிறைத்துக்கொள்கிறது
என் தனிமை....


ஜன்னலோர இருக்கையாய்
என்னை எப்போதும்
ஈர்த்துகொள்கிறது
உன் விழிகள் :)

உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து
இவ்வரிகள்
ஒவ்வொன்றும்
தன்னை
அலங்கரித்துகொள்கின்றன......


உன்னை கடக்கும் நிமிடங்களில்
ஆசையாய் கைக்கோர்த்து
கொள்கிறது
உன் நினைவு........


இப்போதைக்கு
உன் நினைவுகளை
தின்றே
உயிர்வாழ்கிறது
என் கவிதை............

நம் ஒவ்வொரு சண்டையும்
ஏதோ ஒரு புள்ளியில்
ஆரம்பித்து,
காதல் எனும்
பெரும்புள்ளியில் முடிகிறது... 


தீர்ந்து போனபின்னும்
தீரா தாகத்தை
உணர்கிறாயாயின்
நீ
காதல் முன்
ஆசிர்வதிக்கப்பட்டவன்..
19 கருத்துகள்:

Cpede News சொன்னது…

அருமையான வரிகள்..

உங்கள் பதிவுகளை தமிழ் பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் நண்பரே...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

கவி அழகன் சொன்னது…

Kudi kudi kathal kavithaika alaku

Ramani சொன்னது…

இப்போதைக்கு
உன் நினைவுகளை
தின்றே
உயிர்வாழ்கிறது
என் கவிதை.........../

.தங்கள் அனைத்துக் கவிதைகளும்
எனச் சொல்லலாம்
தென்றலாய் மனம் தடவிப்போகும்
அருமையான காதல் கவிதைகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

tha.ma 1

chezhiyan சொன்னது…

வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

சிட்டுக்குருவி சொன்னது…

சின்ன சின்னதாய் காதல்...சின்ன சின்னதாய் ஆரம்பித்து பெரியதொரு ரசிகனாக என்னை மாற்றிவிட்டது.....

ஒவ்வொன்றையுன் ரசித்தேன்

Suresh Subramanian சொன்னது…

நம் ஒவ்வொரு சண்டையும்
ஏதோ ஒரு புள்ளியில்
ஆரம்பித்து,
காதல் எனும்
பெரும்புள்ளியில் முடிகிறது...

---- super

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான வரிகள்.

/// தீர்ந்து போனபின்னும்
தீரா தாகத்தை
உணர்கிறாயாயின்
நீ
காதல் முன்
ஆசிர்வதிக்கப்பட்டவன்... ///

அருமையாக முடித்தது சிறப்பு. நன்றி.

(த.ம. 3)

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

இந்திரா சொன்னது…

//நீயில்லா அறையில்
தனக்கு பிடித்தவாறு
உன்னை நிறைத்துக்கொள்கிறது
என் தனிமை...//

// இப்போதைக்கு
உன் நினைவுகளை
தின்றே
உயிர்வாழ்கிறது
என் கவிதை............//

அழகான.. யதார்த்தமான வரிகள்.
Welcome Back reva..
:-)

செய்தாலி சொன்னது…

காதல் ..காதல் ..காதல்
ம்ம்ம்
நளினமான
வரிக்கொர்வைகள்
ஆழப் அகப் பொருள்

ரெம்ப அருமையான கவிதைகள் சகோ

மதுமதி சொன்னது…

ஒவ்வொன்றாய் வாசித்தேன்..ரசித்தேன்..

கோவை மு.சரளா சொன்னது…

//தீர்ந்து போனபின்னும்
தீரா தாகத்தை
உணர்கிறாயாயின்
நீ
காதல் முன்
ஆசிர்வதிக்கப்பட்டவன்..//

ரேவா ...........வரி வாரியாய் காதலை குடித்து
குடம் குடமாய் உணர்வுகளை கொட்டி

அபிசேகம் செய்கிறது கவிதை ...........

ஒரு வரியில் விளக்க முடியா உணர்வுகள் .........

முழுதாய் உணர்ந்த பின்னும் தாகத்தோடு நான் ..............

வரலாற்று சுவடுகள் சொன்னது…

அத்தனையும் சூப்பர் என்றாலும் இந்த கவிதை என்னை மிகவும் ஈர்த்தது!

நீயில்லா அறையில்
தனக்கு பிடித்தவாறு
உன்னை நிறைத்துக்கொள்கிறது
என் தனிமை....

கோவி சொன்னது…

திரும்ப திரும்ப படித்தேன். அருமையான வரிகள்..

ஹேமா சொன்னது…

துளித்துளியாய் சேர்த்த காதல் சொட்டுக்கள்.அருமை ரேவா !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உன்னை கடக்கும் நிமிடங்களில்
ஆசையாய் கைக்கோர்த்து
கொள்கிறது
உன் நினைவு.....//

காதல் தேன்சொட்டுகள் ரசமாக கொட்டுகிறது....!

Seeni சொன்னது…

azhakiya varikal!

Athisaya சொன்னது…

உன்னை கடக்கும் நிமிடங்களில்
ஆசையாய் கைக்கோர்த்து
கொள்கிறது
உன் நினைவு........ஃஃஃஃஃ


இதைப்படிக்கையில் நினைவுகள் எங்கோ நிற்று கொள்கின்றன.அருமை சொந்தமே!

athira சொன்னது…

ரேவா இப்போ உங்கள் புளொக் ஆடவில்லை, சந்தோசமாக இருக்கு.

கவிதையின் ஒவ்வொரு வரியும் அழகு, அருமையான கவிதை, இதயம் தொடுகிறது.