உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 15 ஆகஸ்ட், 2012

சின்ன சின்னதாய் காதல்..6


கயிறறுந்த பட்டமாகிறது
மனது
நீ பட்டாம்பூச்சியை துரத்திக்கொண்டு
ஓடுகையில் :)

உன்னிடமிருந்தே பெறப்படுகிறது
இந்த காதலும்
அதற்கீடான
எந்தன் கவிதையும்...

அடுக்கடுக்காய் சொல்லப்படும்
அத்தனை பொய்களிலும்
அழகாய் சிரித்து கொள்(ல்)கிறது
இந்த பொல்லாத கவிதை.........

நீயும் நானுமாய்
நடந்த இடங்களை
கடந்து செல்கிறேன்
நீயற்ற உன் நினைவோடு..........

நான் எதைக்கொடுத்தாலும்
எப்படி
உடனே திருப்பித்தருகிறாய்

கவிதைகளாய் :)

கைகளில் மழை நீரை ஏந்தி
விளையாடும் பிள்ளை போலவே
மாறிப்போகிறேன்
உன்னை என் கவிதையில் ஏற்றி....

எந்த மழையும்
நம்மை நனைப்பதாய் இல்லை
நம்மை சேர்த்துவைத்த
அந்த மழையைத்தவிர :)

உன் முத்தங்களை வெல்ல நினைத்து
மொத்தமாய் தோற்றுப்போன
இந்த கவிதைக்கு
என்ன பெயர் வைப்பது?....


என் மெளனங்களை
உடைத்தெரிய
எப்படி முடிகிறது,

உனக்கும்
இந்த மழைக்கும் :)

நம் ஒவ்வொரு சந்திப்பும்
புத்தகத்தின் கடைசி பக்கங்களின்
புதைந்திருக்கும் முடிவைப்போன்றது
சுபமாய் இருந்தாலும்
சுலபமாய் இருந்துவிடுவதில்லை :)

எதிர்பாரா இந்த மழை
மண்வாசனைக்கு பதில்
உன் வாசனை தருவதேன்?...

எதை எழுதினாலும்
அதை பாதியிலே
நிறுத்திவிடுகிறது
பாழாய் போன
உந்தன் நினைவு.... :)

என் எழுதுபொருளில்
நீயிருக்கிறாய்
என்பதற்காகவே எழுதப்படுகின்றன
இவ்வரிகள் ஒவ்வொன்றும் :)


ஒவ்வொரு புரையேறுதலுக்கு
பின்னும்
புரையோடிப்போன
உந்தன் நினைவுகள் மீட்டெடுக்கின்றன
என்னை...........

வாசித்துமுடித்து விடு
இல்லை
வாரிக்குடித்து விடு

அதுவரை
தாகம் தீராது
இந்த கவிதைக்கு
 

15 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அன்பு வரிகள்... அருமை...
படத்திற்கேற்ற கவிதையா...?
கவிதைகேற்ற படமா... ?

பாராட்டுக்கள்... நன்றி... (TM 1)

MARI The Great சொன்னது…

எப்பா எத்தனை..... அத்தனையும் கவித :)
(TM 2)

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

படங்களோடு கவிதையும் பேரழகு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதைகள் மின்மினியாய் சிரிக்கின்றன என்றால் படங்கள் பட்டாம்பூச்சியாய் கவர்கின்றன.

செய்தாலி சொன்னது…

உங்கள் முகலூளில்
ஏற்கனவே ரசித்தது என்றாலும்
மீண்டும் வாசிக்கையில் ரசிக்கையில்
இதாமாகிறது மனது

அருமையான கவிதைகள் சகோ

சசிகலா சொன்னது…

வரிகளோடு லயித்து கிடக்கிறது மனம்.

ஆத்மா சொன்னது…

ஒவ்வொரு சிதறலாய் ரசித்தாலும் ஒட்டுமொத்தமாய் ரசிக்கும் போது இன்னும் விய்க்கவைக்கிறது உங்கள் கவிப் புலமையை

ஜெயசரஸ்வதி.தி சொன்னது…

சிறு புன்முறுவல் எட்டி பார்த்தது ...
வாசிக்கையில் ...:-)

Athisaya சொன்னது…

அப்பப்போ முகநூலில் ஒற்றையாய் கண்டாலும் சேர்மானமான் பார்க்கையில் நிறைந்த திருப்தி சொந்தமே!வாழ்த்துக்கள்.


இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

ஆஹா அருமை ரேவா, பெரிய பெரிய கவிதைகளை விட, இப்படிக் குட்டிக் குட்டிக் ஹைக்கூக்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன, ஒவ்வொன்றும் டச் பண்ணுகிறது....

வெற்றிவேல் சொன்னது…

கைகளில் மழை நீரை ஏந்தி
விளையாடும் பிள்ளை போலவே
மாறிப்போகிறேன்
உன்னை என் கவிதையில் ஏற்றி..

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம, அருமை. தொடருங்கள்...

Unknown சொன்னது…

பல வருடங்களுக்கு பிறகு
வாழ்த்துக்கள் REVA

Unknown சொன்னது…

அனைத்தும் அருமை
ஹைக்கு ரேவா
கலக்குங்க

Rasan சொன்னது…

ஆரம்பம் முதல் இறுதி வரை அருமையாகவுள்ளது.
// வாசித்துமுடித்து விடு
இல்லை
வாரிக்குடித்து விடு

அதுவரை
தாகம் தீராது
இந்த கவிதைக்கு //
தொடருங்கள் தோழி.

அன்பு உள்ளம் சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் சிறப்பாக அமைந்திருந்தது தொடர
வாழ்த்துக்கள் தோழி .