சுற்றிலும் கொஞ்சம் சுடுவார்த்தை
சாவகாசமாய் இளைப்பார
நீளும் வாழ்க்கையென
ஒவ்வொருஇரவிலும்,
அவசர அவசரமாய் அழிக்கப்படுகிறது
தோல்வியின் தடயங்கள்...
அதிகார ஆளுமைக்கு பயந்து
பொருளில்லா வாழ்வால்
இருளிடம் நயந்து,
அவன் இருக்கையில் சிரித்து,
இருக் கையால் அணைத்து,
மென் முத்தமொன்றை
புசிக்கையில் ரசிப்பதாய் நடித்து,
சாத்தப்பட்ட அறையின்
சடங்குகள் முடிந்து
தனித்து விடப்படுகின்றேன்...
இந்த தனிமையில் வலி
நெஞ்சைகிழிக்க
வலிதாளாது
துவண்டுவிழுகின்றேன்...
ஒவ்வொருவரின் வரவால்
வாய்பிழக்கச்செய்தது
வாழும் நம்பிக்கையை...
அந்த இருண்ட அறையில்
கசிந்துகொண்டிருந்த
என் கனவுகள் சிலவும்,
அங்கிருந்து அகற்றப்பட,
என்னிடமிருந்து பலவந்தமாய்
பறிக்கப்பட்ட
கறுப்பு பக்கமொன்றை
தேடிக்கொண்டிருகின்றேன்
நான்.....
20 கருத்துகள்:
தினசரி
நிகழும்
நிதர்சனம்
கண் முன் காட்சிபடுத்தபட்டு ..
கண்களை சுருக்கி
உற்றுநோக்க வைக்கிறது
அருமை ரேவா ........
பல கோணங்களில் பயணிக்க வைக்கிறது
அந்த இருண்ட அறையில்
கசிந்துகொண்டிருந்த
என் கனவுகள் சிலவும்,
அங்கிருந்து அகற்றப்பட,
என்னிடமிருந்து பலவந்தமாய்
பறிக்கப்பட்ட
கறுப்பு பக்கமொன்றை
தேடிக்கொண்டிருகின்றேன்
நான்.....
ம்னம்கசக்கிப் போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
சமூக அவலம் சுட்டும் கவிதை. வாழும் வழியற்று சுழலில் சிக்கிய படகு அவள். மூழ்கவும் இயலாமல் கரைசேரவும் இயலாமல் சுழன்றும் உழன்றும் தத்தளிக்கிறது உடற்படகு. அதன் தவிப்பை எழுத்தால் உணர்த்திய விதம் சிறப்பு ரேவா.
//அதிகார ஆளுமைக்கு பயந்து
பொருளில்லா வாழ்வால்
இருளிடம் நயந்து,
அவன் இருக்கையில் சிரித்து,
இருக் கையால் அணைத்து,
மென் முத்தமொன்றை
புசிக்கையில் ரசிப்பதாய் நடித்து,
சாத்தப்பட்ட அறையின்
சடங்குகள் முடிந்து
தனித்து விடப்படுகின்றேன்...///
பெரும்பான்மையான பெண்கள் நிலை.. அருமை சகோதரி..
அருமையான கவிதை!
வரிகள் அனைத்தும் பிடித்தன. குறிப்பிடவில்லை..நன்று..
வரிகளை ரசிக்கும் போதே நெஞ்சத்தில் வலிக்கிறது......
கோவை மு சரளா கூறியது...
தினசரி
நிகழும்
நிதர்சனம்
கண் முன் காட்சிபடுத்தபட்டு ..
கண்களை சுருக்கி
உற்றுநோக்க வைக்கிறது
அருமை ரேவா ........
பல கோணங்களில் பயணிக்க வைக்கிறது
என் எண்ணங்களோடு சேர்ந்து பயணித்த உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் தோழி... மிக்க நன்றி இந்த கேள்விக்கு தாங்கள் தந்த முதல் பதிலிற்கு :)
Ramani கூறியது...
அந்த இருண்ட அறையில்
கசிந்துகொண்டிருந்த
என் கனவுகள் சிலவும்,
அங்கிருந்து அகற்றப்பட,
என்னிடமிருந்து பலவந்தமாய்
பறிக்கப்பட்ட
கறுப்பு பக்கமொன்றை
தேடிக்கொண்டிருகின்றேன்
நான்.....
ம்னம்கசக்கிப் போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஜயா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)
கீதமஞ்சரி கூறியது...
சமூக அவலம் சுட்டும் கவிதை. வாழும் வழியற்று சுழலில் சிக்கிய படகு அவள். மூழ்கவும் இயலாமல் கரைசேரவும் இயலாமல் சுழன்றும் உழன்றும் தத்தளிக்கிறது உடற்படகு. அதன் தவிப்பை எழுத்தால் உணர்த்திய விதம் சிறப்பு ரேவா.
எப்பவும் போலவே அக்காவின் தெளிவான மறுமொழி என்னை மகிழ்வித்தது, நம் எண்ணங்களில் ஒரு சேர பயணிக்கும் பயணிகளை கண்ட பெருமிதம் இந்த மறுமொழியில் கிடைக்கிறது, மிக்க நன்றி அக்கா உங்கள் வருகைக்கு :)
கோவி கூறியது...
//அதிகார ஆளுமைக்கு பயந்து
பொருளில்லா வாழ்வால்
இருளிடம் நயந்து,
அவன் இருக்கையில் சிரித்து,
இருக் கையால் அணைத்து,
மென் முத்தமொன்றை
புசிக்கையில் ரசிப்பதாய் நடித்து,
சாத்தப்பட்ட அறையின்
சடங்குகள் முடிந்து
தனித்து விடப்படுகின்றேன்...///
பெரும்பான்மையான பெண்கள் நிலை.. அருமை சகோதரி..
ஆணென்று அரிதாரம் பூசாமல் நீங்கள் இட்ட மறுமொழியால் மகிழ்ந்தேன் சகோ... தொடரட்டும் இந்த வருகை
வரலாற்று சுவடுகள் கூறியது...
அருமையான கவிதை!
எப்போதும் போல சகோதரரின் அன்பான வருகையால் மகிழ்ந்தேன் :)
மதுமதி கூறியது...
வரிகள் அனைத்தும் பிடித்தன. குறிப்பிடவில்லை..நன்று..
மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)
சிட்டுக்குருவி கூறியது...
வரிகளை ரசிக்கும் போதே நெஞ்சத்தில் வலிக்கிறது......
வலி நிறைக்கும் வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை என்பதை உணர்ந்த சகோவுக்கு நன்றிகள், தொடரட்டும் இந்த வருகை என்னை வளர்க்க :)
இல்லாமையின் வேதனைகள் வரிகளில்...வாழ்த்துக்கள்.
வலி என்பதை அறிந்தும் அதனுள்ளே ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளே சுற்றி வரவே நினைக்கும் பெண்களின் வலி உணர்த்தும்வரிகள் நீண்ட பெருமூச்சொன்றை மட்டுமே பதிலாக்கினேன்.
அழகாகச் சொல்லியிருக்கிறீங்க ரேவா.
Varikal arumai rasithen kavithai
கவிதை கவிதை...
கருத்துரையிடுக