
இன்றோடு வருடம் ஆறாக, என் நினைவுதனில் வற்றாது ஓடும் ஒரு பிரவாகமாய் நீ உருவெடுத்திருக்கிறாய், இன்னும் இன்னும் ஆழமாய்.
ஒரே பார்வையில் பருகிவிட முடியா ஆழத்தில் நீ இருக்கிறாய் என்பது மட்டும் திண்ணம்..எப்படி ஆரம்பம் என்ற புள்ளியில் தெளிவில்லையென்றாலும் அமர்களமாய் நீ மனதமர்ந்த காலம்...

இது இப்படித்தான்.. ப்ரியத்தின் பொருட்டு தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற இந்நிமிடங்கள் சொல்லமுடியா மலட்டு தாயின் பாசம் போன்றது... பகிர்தலில் பழக்கப்பட்ட என் பாஷைகள் மொழியறியாது ஸ்வரம்புரியாது இசைத்துக்கொண்டே கிடக்கிறது ஈனஸ்வரத்தில் இந்த மெளனத்திற்கு எத்தனையோ காரணமிருக்கலாம் எடுத்துவைக்கும் காரணம்...

மதிப்பீடற்ற விசயங்களைக் கடந்து விஷமங்கள் அரங்கேறும் இத்தருணத்தில் விஷமேறிய பற்களோடு காத்திருக்கிற கடுச்சொல்லிருந்து... துரத்திவிடுதலை துணைக்கழைத்து தன்னை விடுவித்துகொள்கிற கணத்தில் உயிர் உணர்கிற தவிப்புகளிலிருந்து எப்படியோ மென்மரணமொன்று இனி மெல்ல மெல்ல நடக்குமென்பதை உணர்ந்தும் அந்திசாமத்து...

சட்டென்று நீயெனை கடந்திருக்கலாம் ஆனால் கூடவே வந்த்தில் கூடுதல் மகிழ்ச்சிதான் எனக்கு ஏதேதோ பேசுகிறாய் எல்லா பேச்சுலும் உணர்கிறேன் உன் நேசத்தை கைகளை நீட்டுகிறாய் நட்பென்று சொல்லி பற்றுதல் சுகமெனினும் ஏதோ ஒன்று தடுக்கிறது விடியல் மறந்த பேச்சுகளில் விட்டுக்கொடுத்த சுபாவங்களில் தட்டிக்கேட்கும் ஆளுமையில்...