உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 3 ஜனவரி, 2013

தனித்திருத்தலென்பதுமதிப்பீடற்ற விசயங்களைக் கடந்து
விஷமங்கள் அரங்கேறும்
இத்தருணத்தில்
விஷமேறிய பற்களோடு
காத்திருக்கிற கடுச்சொல்லிருந்து...

துரத்திவிடுதலை
துணைக்கழைத்து
தன்னை விடுவித்துகொள்கிற
கணத்தில்
உயிர் உணர்கிற தவிப்புகளிலிருந்து

எப்படியோ மென்மரணமொன்று
இனி மெல்ல மெல்ல நடக்குமென்பதை
உணர்ந்தும்
அந்திசாமத்து பிடிகளிலிருந்து
விடுபடுதலைவிட
கொடுரமானது

தனித்திருத்தலென்பது....


4 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தனித்திருத்தலென்பது....
அருமையான கவிதை ..!

logu.. சொன்னது…

\\தனித்திருத்தலென்பது....

மிக மிக அசாதரணமான ஒன்று..
மிக மிக அவசியமான ஒன்றும் கூட.

நன்றி ரேவா.

ezhil சொன்னது…

தனிமையின் கொடுமை... அருமையான கவிதை

ezhil சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்