உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

இதுவோ(வே) யாம்ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத் தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்

பாரதியும், ஷெல்லியும்
கல்கியும் சாண்டில்யனும்
கூட்டு பொரியலுக்கு
இடையே
கூடவே இருக்கும்..

பெண்ணிய சிந்தனைகள்
பெண் விடுதலை 

பேசிய கவிகளென
ஓரு மூலைக்குள் இருக்க
மூளையற்ற இவரன்பில்
அத்தனையும்
மூச்சிரையாகிக் கிடக்கும்

தொடர்பற்ற எந்தன் எல்லைக்குள்
எல்லைத்தாண்டா பயங்கரவாதம்
தாலியின் வேலியால் கிடைக்கும்

அடையாளமற்று திரியும்
எந்தன் உணர்வுக்கும்
அன்னையர் தினமென்றும்
மகளிர் தினமென்றும்
ஒரு நாள்வந்து தொலைக்கும்

அன்றைக்கும்
ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத்தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்.-ரேவா


 

11 நேசித்த உள்ளங்கள்:

{ ezhil } at: 3/08/2013 12:17 பிற்பகல் சொன்னது…

இன்றைய தினத்தின் உண்மை உரைத்த கவிதை....

{ Seeni } at: 3/08/2013 12:41 பிற்பகல் சொன்னது…

vethaniayai villakaamaa sollideenga...

{ கோவை மு சரளா } at: 3/08/2013 12:42 பிற்பகல் சொன்னது…

'அடையாளமற்று திரியும்
எந்தன் உணர்வுக்கும்'

உண்மை ரேவா நிரப்பபடாத இந்த வேற்று அடுக்குகள் மேலும் சுமைகளை மட்டுமே கொடுக்கிறது பெண்ணுக்கு

{ கோவை மு சரளா } at: 3/08/2013 12:43 பிற்பகல் சொன்னது…

'அடையாளமற்று திரியும்
எந்தன் உணர்வுக்கும்'

உண்மை ரேவா நிரப்பபடாத இந்த வேற்று அடுக்குகள் மேலும் சுமைகளை மட்டுமே கொடுக்கிறது பெண்ணுக்கு

{ rajalakshmi paramasivam } at: 3/08/2013 1:58 பிற்பகல் சொன்னது…

உங்கள் ஆதங்கத்தினை அழகான கவிதையாக்கி விட்டீர்கள்.
நல்ல கவிதை பாராட்டுக்கள்.

{ திண்டுக்கல் தனபாலன் } at: 3/08/2013 6:33 பிற்பகல் சொன்னது…

உண்மை வரிகள்...

{ சே. குமார் } at: 3/13/2013 9:05 பிற்பகல் சொன்னது…

அருமையான கவிதை...

{ சே. குமார் } at: 3/13/2013 9:06 பிற்பகல் சொன்னது…

அருமையான கவிதை...

{ ரேவா } at: 3/15/2013 9:00 முற்பகல் சொன்னது…

ezhil கூறியது...

இன்றைய தினத்தின் உண்மை உரைத்த கவிதை....

என் உணர்வோடு இணைந்து கொண்ட தோழிக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.. தொடர்ந்து உற்சாகமளிக்க வாருங்கள் :)

{ poovizi } at: 3/25/2013 8:23 பிற்பகல் சொன்னது…

அடுக்கு அடுக்காக தொலைக்கமுடியா அடுக்குகள் தானே
நல்ல கவிதை

{ கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் } at: 3/27/2013 5:42 முற்பகல் சொன்னது…


வணக்கம்!

பெண்ணின் நிலையினைப் பேசிடும் இப்பாடல்
கண்ணுள் புகுந்தது காண்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு