
வணக்கம் என் வலையுலக உறவுகளே.. அனைவரும் நலமா? வலைப்பக்கம் விட்டு வெகுவாய்
ஒதுங்கி இருந்த இவ்வேளையில்,மெயிலிலும், முக நூலின் வாயிலாகவும் என்னை
எழுதத்தூண்டி, மீண்டும் புதிதாய் என்னை பயணப்படுவதற்கான உத்வேகத்தை
கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... என்ன ரேவா திடீர்ன்னு
கவிதையில்லாம வலைப்பக்கம்...

ஒன்று இரண்டாக இரண்டு நூறாக கூடிக்கொண்டே போகிறது உன்னைக் குறித்த என் கேள்விகள், எல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் புன்னகையை பதிலெனக் கொடுத்தாலும் போதுமானதாய் இல்லை கேள்வியின் கோரப்பசிக்கு. கொஞ்சமாய் அதை -நீ மென்று விழுங்க பதில் தொண்டை நெறிக்கும் முன் துடித்து விழிக்குதுன் சுயமுகம் இதுவரை காட்டியவை கூட்டிச்சென்ற...

பெரும் காத்திருப்பில் சேர்ந்துவைத்திருக்கிறேன் வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும் இதுவரை பிடிக்காத சண்டைகளுக்கான காரணங்களையும்.. பதற்றமிக்க இத்தனிமைபிரதேசத்தில் மெளனத் தீ கொழுந்துவிட்டெறிய கனவுச் சிறகசைத்து உனை அடைந்திடுவேன் தணிக்கைகளற்று... இல்லா உருவமொன்றை அருவமாய் ஏற்றாகிவிட்டது இல்லாமைக்குள்...

யாருக்கும் கேட்காதபடி தனக்கானதொரு மொழியெடுத்து விழியறுக்கிறது உனதிந்த மெளனம் பிடித்த அத்தனையிலும் பிடித்தமற்று நீள்கிறது எனதிந்த நாட்கள் ஒரே நேரத்தில் சொல்லத்துணிந்த சொற்களின் நகர்வுக்கான இக்காத்திருப்பென்பது காட்சிபடுத்தமுடியா ஏதோ ஒரு அழிவை கண்முன்னே நிறுத்துகிறது பார்வைகளில் கடந்து போவது...

இருப்பின் வாயிலை
உடைத்து வெளியேறுகிறது
நம்பிக்கையின் விருட்சம்
இன்னதென்று சொல்லத்தெரிய
ஓப்பீடுகளால்
உடைந்த மெளனத்தின் கணத்தை
உதடுகளால் கடந்து செல்வது
அவ்வளவு சுலபமில்லாது போயினும்
வெறித்து தொடரும்
எல்லோரின் பார்வைக்கு பின்னும் இன்னும் பருகப்படாமலே இருக்கிறது நீங்களறியா உண்மையின் ஒரு துளி...