உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

தேடல்
பெரும் காத்திருப்பில்
சேர்ந்துவைத்திருக்கிறேன்
வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும்
இதுவரை பிடிக்காத சண்டைகளுக்கான
காரணங்களையும்..

பதற்றமிக்க
இத்தனிமைபிரதேசத்தில்
மெளனத் தீ கொழுந்துவிட்டெறிய
கனவுச் சிறகசைத்து
உனை அடைந்திடுவேன்
தணிக்கைகளற்று...

இல்லா உருவமொன்றை
அருவமாய் ஏற்றாகிவிட்டது
இல்லாமைக்குள் இருப்புகொண்டு
தவிக்கின்ற இளமைக்குள்
விலை வைக்கா
கூட்டம் தேடி அலைகிறது
இந்நாட்கள்

வேகத்தடைகளென
முளைக்கின்ற உறவுதனையும்
சமவெளி நோக்கி
இழுத்துச்செல்ல முயலுகையில்
முந்திக்கொண்டு நிற்கிறதாங்கோர்
தனிமை

நிலம் உறிஞ்சிய மிச்சம் போக
வேர்கால்களில் சேமிக்ககிடைக்கின்ற
சிறுதுளியில்
சில்லிட்டு துளிர்விட
எப்படியும் உனைத்தேடி அடைதலில்
வேர்விடுவேன்
இம்முறை...

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தேடலை ரசித்தேன்...

கீதமஞ்சரி சொன்னது…

விரக்தியும் வேதனையும் வெளிப்படும் தனிமையோடும் சிறு சமரசம் செய்துகொண்டு வலம் வருகின்றன தணிக்கையற்றக் கனவுகள்... சிறுதுளியிலும் துளிர்விடுவேன் என்ற நம்பிக்கையில் தழைக்கிறது வாழ்க்கை!

மனந்தொட்ட கவிதை. பாராட்டுகள் ரேவா.

poovizi சொன்னது…

சமவெளி நோக்கி
இழுத்துச்செல்ல முயலுகையில்
முந்திக்கொண்டு நிற்கிறதாங்கோர்
தனிமை//

arumai

கவிதை நாடன் சொன்னது…

அருமை அருமை ரசித்தேன் ........

வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

ரேவா சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...

தேடலை ரசித்தேன்...


உங்களின் தொடர் வருகைக்கும் உறசாகமான மறுமொழிக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ, தொடரட்டும் வருகை...

ரேவா சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...

விரக்தியும் வேதனையும் வெளிப்படும் தனிமையோடும் சிறு சமரசம் செய்துகொண்டு வலம் வருகின்றன தணிக்கையற்றக் கனவுகள்... சிறுதுளியிலும் துளிர்விடுவேன் என்ற நம்பிக்கையில் தழைக்கிறது வாழ்க்கை!

மனந்தொட்ட கவிதை. பாராட்டுகள் ரேவா.

மிக்க நன்றி கீதாக்கா எதையும் எதிர்ப்பார்க்காதது அன்புமட்டுமேன்னு படிச்சிருக்கேன், அத உங்க மறுமொழியில் பார்க்கிறேன். வலைப்பக்கம் முழுவதுமாய் ஒதுங்கி இருக்கிற காலத்திலும் உங்களை போன்றோரின் மறுமொழி தான் துள்ளலை தருகிறது.. தொடர்ந்து வாருங்கள் அக்கா, உங்களின் தொடர் வருகைக்கும், உற்சாக மறுமொழிக்கும் நன்றிகள்

ரேவா சொன்னது…

poovizi கூறியது...

சமவெளி நோக்கி
இழுத்துச்செல்ல முயலுகையில்
முந்திக்கொண்டு நிற்கிறதாங்கோர்
தனிமை//

arumai

மிக்க நன்றி சகோ உங்கள் முதல் வருக்கைகும், மறுமொழிக்கும், தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

கவிதை நாடன் கூறியது...

அருமை அருமை ரசித்தேன் ........

வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

மிக்க நன்றி உங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும்.. தொடரட்டும் வருகை :)

இளமதி சொன்னது…

ஒருதுளி நீரிலும் துளிர்விடும் மரமாய் உன் நினைவொன்றுடன்மட்டும் உனை தேடிச் சேரும் தேடல்... அருமை ரசித்தேன் தோழி!

அழகிய கவிதை. வாழ்த்துக்கள்!