உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெற்று மைதானம்
வெற்று மைதானமென
வெறுமை சூழத்தந்தாலும்
ஆடிக்களைத்த நிகழ்வுக்குள்
நிதானமாய் ஓடிவிளையாடுகிற
ஒற்றை பந்து
காதல்...

தோல்விகள் புரிந்தாலும்
தொடர்ச்சியாய் முயற்சிகள்,
அயற்சியை மறைக்க
அவ்வவ்போது
நினைவுகள்..

வலிக்கு வலியென
வழிகொண்டு தொடர
வார்த்தைகொண்டு அடைக்கிறாய்
இப்பெருவெளியை...

உடலுக்கும் உயிருக்குமான
தொடர்பு அறுபடும் நிலையிலான
இறுதி போராட்டத்திலும்
வசதியாய் வந்தமர்கிறாய்
சிறு இடைவெளி கடத்தும்
நிகழ்வுகளில்..

எத்தனை முயன்றும்
கிட்டாத வெற்றியில்
ஒரு பார்வையாளனைப்போல்
காத்திருக்கின்ற காதலுக்கு
சமாதானம்
சொல்லமுடியா வார்த்தைகளை
கைக்கு கொடுக்கின்றேன்

காதலென்பது
எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று....

-ரேவா

10 நேசித்த உள்ளங்கள்:

{ கவியாழி கண்ணதாசன் } at: 5/26/2013 9:00 முற்பகல் சொன்னது…

உங்கள் கவிதை நன்று தொடருங்கள்

{ புலவர் இராமாநுசம் } at: 5/26/2013 9:18 முற்பகல் சொன்னது…காதலென்பது
எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று....

உண்மைதான்!

{ திண்டுக்கல் தனபாலன் } at: 5/26/2013 10:31 முற்பகல் சொன்னது…

வார்த்தை கொண்டு அடைக்கும் வார்த்தைகள் அருமை...

{ Priya } at: 5/26/2013 1:29 பிற்பகல் சொன்னது…

எத்தனை முயன்றும்
கிட்டாத வெற்றியில்
ஒரு பார்வையாளனைப்போல்
காத்திருக்கின்ற காதலுக்கு
சமாதானம்
சொல்லமுடியா வார்த்தைகளை
கைக்கு கொடுக்கின்றேன்

காதலென்பது
எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று....

{ இளமதி } at: 5/26/2013 2:46 பிற்பகல் சொன்னது…

// வலிக்கு வலியென
வழிகொண்டு தொடர
வார்த்தைகொண்டு அடைக்கிறாய்
இப்பெருவெளியை... //

வலிக்கும் வலிக்குமென வார்த்தைகொண்டடைத்த
வலுவான கவிதை!... ரசிக்கின்றேன் உங்கள் சொல்லாடலை...
வாழ்த்துக்கள்!

T m.4

{ ரேவா } at: 5/27/2013 7:23 முற்பகல் சொன்னது…

கவியாழி கண்ணதாசன் கூறியது...

உங்கள் கவிதை நன்று தொடருங்கள்


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..தொடர்ந்து வாருங்கள்..வளரட்டும் என் எழுத்து

{ ரேவா } at: 5/27/2013 7:24 முற்பகல் சொன்னது…

புலவர் இராமாநுசம் கூறியது...காதலென்பது
எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று....

உண்மைதான்!

மிக்க நன்றி ஜயா உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

{ ரேவா } at: 5/27/2013 7:26 முற்பகல் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...

வார்த்தை கொண்டு அடைக்கும் வார்த்தைகள் அருமை...

மிக்க நன்றி அண்ணா தொடர்ந்து தரும் உற்சாக வார்த்தைகளுக்கு...

{ ரேவா } at: 5/27/2013 7:26 முற்பகல் சொன்னது…

Priya கூறியது...

எத்தனை முயன்றும்
கிட்டாத வெற்றியில்
ஒரு பார்வையாளனைப்போல்
காத்திருக்கின்ற காதலுக்கு
சமாதானம்
சொல்லமுடியா வார்த்தைகளை
கைக்கு கொடுக்கின்றேன்

காதலென்பது
எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று....

மிக்க நன்றி சகோ..உங்களின் முதல் வருகைக்கும் விருப்பத்திற்கும்

{ ரேவா } at: 5/27/2013 7:27 முற்பகல் சொன்னது…

இளமதி கூறியது...

// வலிக்கு வலியென
வழிகொண்டு தொடர
வார்த்தைகொண்டு அடைக்கிறாய்
இப்பெருவெளியை... //

வலிக்கும் வலிக்குமென வார்த்தைகொண்டடைத்த
வலுவான கவிதை!... ரசிக்கின்றேன் உங்கள் சொல்லாடலை...
வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி இளமதி உங்களின் வருகைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கும்..தொடர்ந்து வாருங்கள் நட்பே...