உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

என் வீட்டு ரோஜா

 பதியமிட்டு வளர்க்காமல்
பாதுக்காத்து வைக்காமல்
நாளுக்கு இருமுறையென
நிரூற்ற வேண்டாமல்
தெருவோரக்கடையொன்றில்
வாங்கிவந்தேன்
பல வண்ண ரோஜா

தினச்செயலாக
ஒவ்வொரு இடமாய்
இடம் மாறும்

அப்பாவின் பேப்பர் வெயிட்டாக
தம்பியின் வாகனச்சாவி அறையாக
அம்மாவின் பலசரக்கு சீட்டை
தாங்கிய ஒன்றாகவென
பலவாறு உருமாறினாலும்
தனக்கான வேலைகளை முடித்து
அதன் இடம் வருகையில்
மலர்வாசம்
என் வீட்டிலும்.


-ரேவா


 

6 நேசித்த உள்ளங்கள்:

{ செய்தாலி } at: 6/03/2013 12:09 பிற்பகல் சொன்னது…

ம்ம்ம் ..அருமை

{ திண்டுக்கல் தனபாலன் } at: 6/03/2013 12:09 பிற்பகல் சொன்னது…

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

{ இளமதி } at: 6/03/2013 12:12 பிற்பகல் சொன்னது…

பட்டு வண்ன ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்...

அருமை உங்க ரோஜாக்கள்!
மணமில்லாவிட்டாலும்
மகிழ்வினை வீசுகிறதே!...

ரசித்தேன். வாழ்த்துக்கள்!

த ம. 2

{ வை.கோபாலகிருஷ்ணன் } at: 6/03/2013 4:24 பிற்பகல் சொன்னது…

//அப்பாவின் பேப்பர் வெயிட்டாக
தம்பியின் வாகனச்சாவி அறையாக
அம்மாவின் பலசரக்கு சீட்டை தாங்கிய ஒன்றாகவென பலவாறு உருமாறினாலும் தனக்கான வேலைகளை முடித்து அதன் இடம் வருகையில் மலர்வாசம் என் வீட்டிலும்.//

அருமையாக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

மிகவும் ரஸித்தேன்

மணமில்லாவிட்டாலும் எல்லோருக்கும் மகிழ்வினை வீசுகிறதே! ;)

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

{ MANO நாஞ்சில் மனோ } at: 6/03/2013 10:58 பிற்பகல் சொன்னது…

மலர்வாசம் வலைத்தளத்திலும்....!

{ Seeni } at: 6/04/2013 12:37 முற்பகல் சொன்னது…

mmmm....


rasanai...