உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 16 ஜூலை, 2013

ஜோடி தூரிகை


 Photo: எதை எதையோ 
கொடுத்து பேச வைக்கிறாய்
யாருமற்ற இவ்வெளியில் சொற்கள் 
சூரியனாகி சுட்டெரிக்க 

நீ கொடுத்துப்போன குரல்
ஆன்மாவில் பெருங்குரலெடுத்து 
பாடிக்கொண்டே திரிய

கைவிளக்குகளாகிப்போன 
காரணங்கள்
காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த

காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும் 
ஜோடி தூரிகை...
எதை எதையோ
கொடுத்து பேச வைக்கிறாய்
யாருமற்ற இவ்வெளியில் சொற்கள்
சூரியனாகி சுட்டெரிக்க

நீ கொடுத்துப்போன குரல்
ஆன்மாவில் பெருங்குரலெடுத்து
பாடிக்கொண்டே திரிய

கைவிளக்குகளாகிப்போன
காரணங்கள்
காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த

காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும்
ஜோடி தூரிகை...

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... படமும் சிந்திக்க வைக்கின்றன...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

// காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும்
ஜோடி தூரிகை... //

Good lines...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகு..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அவசரமா எழுதுனாப்ல இருக்கேம்மா என்னாச்சு ?

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...

அருமை... படமும் சிந்திக்க வைக்கின்றன...

வாழ்த்துக்கள்...


மிக்க நன்றி சகோ... உங்களின் வருகைக்கும் வழக்கம் போன்ற அன்பான வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

சங்கவி கூறியது...

// காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும்
ஜோடி தூரிகை... //

Good lines...


மிக்க நன்றி உங்களின் மறுமொழிக்கும், வருகைக்கும் :)

Unknown சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

அழகு..




மிக்க நன்றி உங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

அவசரமா எழுதுனாப்ல இருக்கேம்மா என்னாச்சு ?


அண்ணா அவசரமா எழுதலண்ணா, முக நூலில் பதிவு செய்த கவிதைகளைத்தான் இப்போ என் தளத்தில் பதிகிறேன்... உண்மைச்சொல்லணும்னா சமீபங்களில் நான் எழுதிய கவிதைகளில் எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை இது தான்...

ரொம்ப நன்றி அண்ணா :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை...

படமும் அழகு...