உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 27 ஜூலை, 2013

என் டைரிக்குறிப்பில் நீ...
காலத்தின் முகம் அணிந்துகொண்டவனுக்கு,

 நானிருக்கும் வரை நலமாய் இருப்பாய் என்ற எண்ணத்திலே எழுத்துகளின் ஊடே உனக்கொரு வலை பின்கிறேன்...எழுத்தில் உன் முகம் பார்க்க, எழுதிட சுகம் சேர்க்கும் உன் நினைவுகளே உற்சாகமெடுத்து ஓடவைக்கட்டும் இனி வரும் வரிகளை..எழுத மறந்து போன நாட்களில் எங்கோ இருந்து எழுதிடச்சொல்கிற இந்த போக்கு எனக்கொன்றும் புதிதில்லையென்றாலும் வாழ்க்கையின் சூழ்ச்சியில் வஞ்சிக்கப்பட்டவர்களில் நாமும் ஒருவரென்பதை இதுவரை சந்திக்காத விழிகளின் கிடைக்கின்ற இருளில் உண்ர்வோம்...

திரும்பிப்பார்த்தலென்பது எப்போதும் லயிப்பான விசயமாய் இல்லாது போகும் இக்காலச்சூழலில் இக்கடிதம் கண்ணில் படும் போதெல்லாம் ரசிப்பிற்கு விருந்துவைக்கும் விசயமாய் மாறிப்போகட்டும் நம் வாழ்க்கைப்பக்கங்களுக்கு.. பிறப்பு குறித்த பிரபஞ்ச ரகசியங்களை உடைக்குமொரு நிகழ்வு இதுவரை நிகழவேயில்லையென்பது நிகழ்ந்தவரை கிடைத்த நகர்வில் இருக்க, எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய்யென யாதொன்றும் தெரியாதிருக்க, எனை எதை எதையோ செய்யவைக்கிறாய், சின்னதாய் பொய்கோலம் பூண வைக்கிறாய்.. விசித்திர விரிப்புகள் மத்தியில் ஒய்யார  வந்தமர அருபமாய் இருக்கும் என் மனதில் அடிக்கொரு முறை உனை அளவெடுத்துக்கொள்கிறேன்.. எப்போதேனும் எனை நினைப்பாயா? எனைக்குறித்து உன் கொள்ளளவு என்னவாய் இருக்கும் .. உன் நண்பனின் பொல்லாத மனைவியோடு என்னையும் ஒப்பிட்டுக்கொள்வாயா? இல்லை உன் தோழியின் நேசத்திற்குரியவனைப்போல் என்னிடம் நடந்துகொள்ளவேண்டுமென ஒத்திகைசெய்துகொள்வாயா? யாதொன்றிலும் எனக்கு தெரிவில்லையென்றாலும் ஆண்னென்பதின் பதம் என் அப்பாவிற்கடுத்து உன்னிடம் தான் நான் தேடத்தொடங்கவேண்டும்..

தனிமையின் நிறமெனக்கு எப்போதும் பிடித்தது, அது தரும் சுகந்தமும் ஆறுதலும் எனக்கு எதுவுவொன்றும் தந்துவிடாது அதேபோல் உனக்கெப்படி என்னைப்போல் அதிகம் பேசுவாயா? இல்லை அளவெடுத்து வார்த்தைகளை விடுவாயா? பெண் என்பவள் உன் பார்வைக்கு எப்படி?  நீ என்பதில் நான் எதுவரைக்கும்? இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன, உனக்கும் அப்படியாய் இருக்கலாம்.இந்த கேள்விகள் தான்  நான் இருக்கிறேன் என்பதற்கான என் இறுப்பினை உறுதிசெய்யும் காரணிகளாய் இருக்க, என் எதிர்ப்பார்ப்பு உன் வருகைக்கானதாய் மட்டுமென்பதை அறிந்துகொள்.


எழுத்தின் வாயிலாய் உன் முகம் தேடத்தொடங்கியிருக்கும் இந்நாட்களில் இக்கடிதம் உனக்கும் எனக்குமான முதற் புள்ளியை வைத்துவிட்டு கள்ளத்தனமாய் 
சிரிக்கிறது...

,4 கருத்துகள்:

ராஜி சொன்னது…

உனக்கும் எனக்குமான முதற் புள்ளியை வைத்துவிட்டு கள்ளத்தனமாய் சிரிக்கிறது.
>>
அப்புறம் நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்கும்:-(

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கேள்விகளை கேட்டு விட்டு சிரிக்கும் உள்ளம் ரசனை... வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரசித்தேன்...

சே. குமார் சொன்னது…

எழுத்தின் வாயிலாய் உன் முகம் தேடத்தொடங்கியிருக்கும் இந்நாட்களில் இக்கடிதம் உனக்கும் எனக்குமான முதற் புள்ளியை வைத்துவிட்டு கள்ளத்தனமாய் சிரிக்கிறது...

---------

அருமை.... அருமை...