
ஊமையின் கனவில் நித்தம் வருகிறது ஒரு குரல் முற்றிலும் பழக்கப்பட்டதாய் மாறிப்போன நாளொன்றின் துவக்கத்திலிருந்து உறக்கம் கெடுக்கிறது அக்குரல் பேசத்தெரிந்தவாறு பேசிச்சிரித்தவாறு அழுகையின் அந்தம் சொன்னவாறு அவனோடே உரையாடலைத்தொடர்ந்தவாறு தன்னை நிலைத்து வைக்கிறது அக்குரல் பசிக்கு உணவாய் பழக்கத்தின் நட்பாய்...

அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது அதனாலென்ன ஆண்டொன்று கூடும்பொழுதெல்லாம் அவசரப்பிரிவு நோயாளியின் வாழ்வை குறித்த பயமென தொற்றிக்கொண்டே வருகிறது நாட்களின் நகர்வை பற்றிய இருள்... இன்னதென்று சொல்லாமல் இதனாலென தள்ளாமல் தட்டப்படும் கதவுகளை திறந்தே வைத்திருக்க சலிப்புற்ற வார்த்தைகள் சருகுகளாய் பெருநிலத்தில்...

திறவுகோலது கையிலே இருக்க திறந்திடும் முன்னே நின்றிடு வார்த்தைகளாலான அறையெனது உனக்கு பிடித்தச்சொற்களை உருவுவதில் தொடங்கி நீடித்துகொள் எனதறையில் தொடர்ந்தென்னை வார்த்தைகளால் தோற்கடி தோற்பதில் தான் ப்ரியத்தின் உயிருள்ளதென்பதை நானுணர்ந்ததைப் போல் நீ உணர் உணவாகும் வரை உயிர் தேடலென்பது தொடருமென்பது...