ஊமையின் கனவில்
நித்தம் வருகிறது ஒரு குரல்
முற்றிலும் பழக்கப்பட்டதாய்
மாறிப்போன நாளொன்றின் துவக்கத்திலிருந்து
உறக்கம் கெடுக்கிறது அக்குரல்
பேசத்தெரிந்தவாறு
பேசிச்சிரித்தவாறு
அழுகையின் அந்தம் சொன்னவாறு
அவனோடே உரையாடலைத்தொடர்ந்தவாறு
தன்னை நிலைத்து வைக்கிறது
அக்குரல்
பசிக்கு உணவாய்
பழக்கத்தின் நட்பாய்
ஆதரவின் அன்னையாய்
அக்குரலை
தன் குரலாய் நினைக்கத்தொடங்கிய
ஊமைச்சிறுவனின்
உலகம் வார்த்தைகளால் நிறைந்திருக்க
பேசத்துடிக்கும் அச்சோடி கண்களில்
நீங்களும் தேடியெடுக்கலாம்
அக்குரலை
ஏளனமற்ற புன்னகையை கொடுத்தவாறே...
3 கருத்துகள்:
// பசிக்கு உணவாய்
பழக்கத்தின் நட்பாய்
ஆதரவின் அன்னையாய் //
அருமை........!
அருமை...
உணர்வுபூர்வமான கவிதை
உணர்வுப்பூர்வமான கவிதை....
கருத்துரையிடுக