பூங்கொத்து நின் பார்வை களி நடனம் உன் சிரிப்பு ஊழிக்கூத்து உன் கோவம் மேகக்கூட்டம் உன் ஊடல் மழைச்சாரல் நின் தீண்டல் கோப்பை தேனீர் உன் அணைப்பு பெருங்கடல் உன் நேசம் நான் என்பவள் உன் வரைக்கும்...
அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
7 கருத்துகள்:
நான் உனக்காக மட்டுமே ....என்று சொல்லுங்கள்
அருமையாகச் சொன்னீர்கள்
பஞ்ச பூதங்களின்
மென்மையான மறுபுறம் தானே பெண் என்பவள்
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 2
என்னவொரு வர்ணிப்பு...!
வாழ்த்துக்கள்...
https://www.youtube.com/watch?v=TlcEG4pnAPo
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com
கவிதை அருமை....
வாழ்த்துக்கள்.
அழகு
கருத்துரையிடுக