ஒவ்வொரு வருடத்தின் இறுதியும் அச்சுறுத்துவதாய் இருக்கும் மாயக் குகையின் கைவிளக்காய் இருக்கிறது..
கடந்து வந்த கரடுமுரடான பயணங்கள் பலவற்றிலும் கை சேர்ந்த அனுபவம், துணிச்சலின் துணையோடு புத்தாண்டிற்குப் போக பணிக்க,
இன்னுமொரு குகை, புரியாத குகை வாழ்க்கை, வாழ்க்கை அங்கே நிறுத்தி வைத்திருக்கும் புலனாகா சூட்சுமங்களோடு, உடன் பயணிப்பவர் மொழியறிய, குணம் புரிய, கையகப்படுத்திய சிக்கி முக்கிக் கல் உரசலில் பெறப்போகும் வெளிச்சங்களென, ஒரு டைனோசரின் மிச்சத்தை சுமந்தலையும் பல்லியாய் நமை மாற்றி வைத்திருக்கும் இவ்வாழ்க்கையை வியப்போடு பார்க்கிறேன்.
நாம் கண்டெடுத்த மொழியும், கற்றுத் தேர்ந்த அறிவும் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய சக்கரமே, வெளிச்ச உரசல்களுக்கு விடையாய் போக, அறிவு கண்டெடுத்த இச்சக்கரம் விதவிதமாய் நமை குழைத்து பாண்டமாக்கி உலவ விட, அதில் சேகரமாகிய விசயங்களைக் கொண்டு தான் திருந்தங்களெனும் ஏர், மன வயலை உழுகிறது...விதைக்கும் அனுபவங்களிலிருந்து முளைக்கும் ஒவ்வொரு பயிரெனும் வெற்றியின் நடுவில் நமை அசைத்துப் போடும் தோல்வியின் களை வளர்ந்துகொண்டே தானிருக்கிறது.. களையத் தெரிந்தவனையும் காலம் கொண்டாடிக்கொண்டேதானிருக்கி
சக்கரம் ஓடி ஓடி நம்மை கொண்டு வந்திருக்கும் இத்தூரம் பயணக் களைப்பை கொடுக்க, இளைப்பார கிடைக்கும் நிழல் தான் இவ்வருடத்தின் இறுதி நாளெனும் நினைப்பு வேரென எழுகிறது மனதிற்குள்...
மனம் இந்த வருடத்தின் ஒட்டுமொத்த காட்சியையும் குகையோவியமாய் மனதிற்குள் வரைந்து பார்க்கிறது.
எத்தனை எத்தனை நிறமான மனிதர்கள், அவர்களில் தான் எத்தனை விதமான குணங்கள் இத்தனையும் தாண்டி செஞ்சாந்து நிறத்தில் திலகமிட்டு விடும் அனுபவத்தைக் கொடுத்த இவ்வருடத்தை, பிரிய தோழமையை வழியனுப்பையில் உண்டாகும் மூச்சடைப்போடு வழியனுப்பி வைக்கிறேன்...
இவ்வருடம் முழுதும் வாழ்க்கையை உயிரோடு தான் நகர்த்தியிருக்கிறேன் என்பதற்
என் ப்ரிய தோழனே போய் வா...
நேரம் கிடைக்கையில் எல்லாம் என் மனக் குரங்கு உன் கிளை தேடி வரும்......
நிச்சயம் உன் கிளைகள் எனக்காய் சில விசயங்களை ஒளித்தே வைத்திருக்குமென்பதை, புத்தன் மறைத்து வைத்திருக்கும் புன்னகைக்குள் இருக்கும் ஈரமெனக்கு உணர்ந்துகிறது..
போய் வா நண்பா....
எனை நீ அழைத்து வந்திருக்கும் இக்காலத்திற்காய் நன்றி...
மீண்டும் என்றேனும் ஒரு நாளில் கோப்பை தேனீரோடு என் அருகமர்வாய்...கதைபேசிச்
இப்போது உனக்கு சொல்லிக் கொள்வதெல்லாம்
குழந்தை மொழியோடே
ஒரு குட்டி டாட்டா....................
போய் வா நண்பா..
-ரேவா
2 கருத்துகள்:
வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
அதுதான் மாயக்குகைக்கு கைவிளக்கும் இருக்கும் போது எதற்கு பயம் தோழி.. வென்றெடுப்போம் 2014 ஐ... இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக