உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 நவம்பர், 2015

விளங்கக் கேட்கும் ரகசியங்களின் விடியல்

தூக்கம் தொலையும் படி செய்துவிட்ட இரவுகளின் கூரையொழுக பெய்துகொண்டிருக்கிறது நேற்று கதகதப்பு வேண்டும் கனவுகள் நனவிலி மனதின் சுவடு திரும்பும் வழியறியாது பெய்துவிட்ட காரணங்களின் சீலிங் பொத்தல் நிறைய வைத்த பாத்திரத்தின் கொள்ளளவு தெறித்து விழும் துளிகளின் இயலாமை ரசம் பூசிச் சிரிக்கும் கண்ணாடி...

கைகுலுக்கும் சந்திப்பின் தடம்

எதிர்பாராத நேரத்தில் இணைகிறாய் அசெளகர்யங்களின் கைகுலுக்களில் வியர்வை வழிய ஒட்டிக் கொள்கிறது பச்சாதாபம் யூகிக்கமுடியாதபடி நடைபாதை பூக்கற்களில் முளைக்கும் முட்கள் பதம் பார்க்கின்றன காரணக் கால்களை ஊன்றிட வலிக்கும் உண்மை ஒதுங்கத் தேடும் இடத்தில் பொய்யின் நிறம் வரைந்துகொள்கிறது இன்னொரு சந்திப்பிற்கான...

நிகழ்காலக் கூண்டின் பாஷை நெல்மணிகள்

  எதிர்பாரா சந்திப்பின் இருமுனையிலும் கூர்தீட்டப்படுகிற நிகழ்காலம் நிறுத்தி வைக்கிறது விசாரிப்பை பழுத்த புன்னகையில் கழன்றுவிழும் சருகுகள் எழுதித் தீர்க்கிற காற்றின் கையில் இயலாத கைகுலுப்பு நிமிடங்களில் தெளிவுறும் காட்சி நிறுத்தும் கூண்டில் சிதறிய நெல்மணிகள் பறந்து பழகாத பாஷைக்குள் பக்குவப்பட்டுவிட்ட...