உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 நவம்பர், 2015

நிகழ்காலக் கூண்டின் பாஷை நெல்மணிகள்


 
எதிர்பாரா சந்திப்பின் இருமுனையிலும்
கூர்தீட்டப்படுகிற நிகழ்காலம்
நிறுத்தி வைக்கிறது விசாரிப்பை

பழுத்த புன்னகையில் கழன்றுவிழும் சருகுகள்
எழுதித் தீர்க்கிற காற்றின் கையில்
இயலாத கைகுலுப்பு

நிமிடங்களில் தெளிவுறும் காட்சி
நிறுத்தும் கூண்டில் சிதறிய நெல்மணிகள்

பறந்து பழகாத பாஷைக்குள்
பக்குவப்பட்டுவிட்ட சிறகுகள்
சிறைச்சாலை

திறந்துகிடக்கும் அனுமதிப்பில்
திருத்தங்கள் விருத்தங்களாக
விழக்காத்திருக்கும் தாயத்தில்
எதிர்காலம்
-ரேவா


0 கருத்துகள்: