உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 2 ஏப்ரல், 2011

அவனின் சுவடுகள்....



 * காலத்தின் மாற்றத்தால்
ஆழ்மனதில் உறங்கிப் போன
அவன் நினைவுகள்,
அமைதியான ஓர்
நாளில் அரவமில்லாமல்
அரங்கேறியது...

* ஆம்,
என் பழைய பொருட்களை
சுத்தம் செய்ய எத்தனிக்கையில்,
அவனறியாமல் நான் கைப்பற்றிய
அவன்  கைக்குட்டை...
அவன் இதழ் பற்றிய சிகரெட் துண்டு...
அவன் கையெழுத்து அடங்கிய
அவன் குறிப்பேடு.,
கரையான் அறித்த
அவன் நிழற்படம்,
என,
அவன் நினைவுகள்
நிரப்பிய, 
என் பழையபெட்டியில்
பத்திரமாய்
அவனின் சுவடுகள்...

முந்தையக் கவிதை : யார் நீ?....


அன்புடன் 
ரேவா

34 கருத்துகள்:

Pranavam Ravikumar சொன்னது…

கவிதை மிக அழகு !

Unknown சொன்னது…

:)
oh avaru sigret elam pidipparo...?

Chitra சொன்னது…

அவன் நினைவுகள்
நிரப்பிய,
என் பழையபெட்டியில்
பத்திரமாய்
அவனின் சுவடுகள்...


....அருமையான கவிதை.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அவன் நினைவுகள்
நிரப்பிய,
என் பழையபெட்டியில்
பத்திரமாய்
அவனின் சுவடுகள்...//

நியாபக ஏக்கம் அருமை அருமை...

பெயரில்லா சொன்னது…

சுவடுகள் தாண்டியும் நினைவுகள் என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கட்டும் ரேவா.. :)

எவனோ ஒருவன் சொன்னது…

நினைவுகள் ரொம்ப பாவம் எப்பவும் பழைய பெட்டி தாங்க கிடைக்குது. ஏன் நாம அது புதுசா வச்சு பாதுக்காக்க கூடாது???? :-)

கவிதை அருமை தோழி. தொடர்ந்து கலக்குங்க :-)

karthikkumar சொன்னது…

நான் கைப்பற்றிய
அவன் கைக்குட்டை...
அவன் இதழ் பற்றிய சிகரெட் துண்டு...
அவன் கையெழுத்து அடங்கிய
அவன் குறிப்பேடு.,/// இதெல்லாம் பொண்ணுக கூட சேத்தி வெப்பீங்க்ளா....:))

சௌந்தர் சொன்னது…

அவன் கைக்குட்டை...
அவன் இதழ் பற்றிய சிகரெட் துண்டு...
அவன் கையெழுத்து அடங்கிய
அவன் குறிப்பேடு.,
கரையான் அறித்த
அவன் நிழற்படம்,
என,/////

எல்லாம் இங்க இருக்கும் போது அவர் மட்டும் எங்க போனார்...????

ரேவா சொன்னது…

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

கவிதை மிக அழகு !

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் இனி தொடர்ந்து வாருங்கள் :-)

Ram சொன்னது…

நானும் வந்துட்டேன்.!!

என்னா எழுதியிருக்கீங்க.?

ஓ..
//அமைதியான ஓர்
நாளில் அரவமில்லாமல்
அரங்கேறியது...//

அடடே நினைவுகளா.. பல நாளில் என் நிம்மதியை போக்கும் எதிரியாச்சே அவன்..

//அவன் கைக்குட்டை...
அவன் இதழ் பற்றிய சிகரெட் துண்டு...
அவன் கையெழுத்து அடங்கிய
அவன் குறிப்பேடு.,
கரையான் அறித்த
அவன் நிழற்படம்,//

ஓ. இதுதானா காதல்.?

ரேவா சொன்னது…

siva said...

:)
oh avaru sigret elam pidipparo...?

ஐயோ நண்பா, பொண்ணுக்கு பொதுவா பசங்க சிகரெட் பிடிச்ச பிடிக்காது..ஆனா தனக்கு
பிடிச்ச பையன், நமக்கு பிடிக்காதத செஞ்சாலும் ரசிச்சு பத்திரபடுத்துறது தானே காதல்... அதான்...என்னவர் சிகரெட்லாம் பிடிக்க மாட்டார் .. குடிச்சா பிச்சு பிச்சு....

ரேவா சொன்னது…

Chitra said...

அவன் நினைவுகள்
நிரப்பிய,
என் பழையபெட்டியில்
பத்திரமாய்
அவனின் சுவடுகள்...


....அருமையான கவிதை.

நன்றி நன்றி தோழி உங்கள் மறுமொழிக்கு :-)

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//அவன் நினைவுகள்
நிரப்பிய,
என் பழையபெட்டியில்
பத்திரமாய்
அவனின் சுவடுகள்...//

நியாபக ஏக்கம் அருமை அருமை...

நன்றி மனோ :-)

ரேவா சொன்னது…

Balaji saravana said...

சுவடுகள் தாண்டியும் நினைவுகள் என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கட்டும் ரேவா.. :)

நினைவுகள் என்றும் நம்மில் நிலைத்திருக்கும் அசைக்க முடியா பலம் தானே... நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் .........

தல தளபதி சொன்னது…

//என் பழையபெட்டியில்
பத்திரமாய்
அவனின் சுவடுகள்...//

ஏன் இந்த கஞ்சத்தனம்! ஒரு புது பெட்டிதான் வாங்குறது?

தல தளபதி சொன்னது…

நீ இன்னும் அந்த அப்ப்ரூவல எடுக்கலையா?!!

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

நினைவுகள் ரொம்ப பாவம் எப்பவும் பழைய பெட்டி தாங்க கிடைக்குது. ஏன் நாம அது புதுசா வச்சு பாதுக்காக்க கூடாது???? :-)

கவிதை அருமை தோழி. தொடர்ந்து கலக்குங்க :-)

நண்பா புது பெட்டி போடலாம் உண்மைதான்... ஆனா என் கவிதைக் கருவின் நோக்கம், காலத்தால் மாறிப் போன பழைய காதலை பற்றியது... புதுசா அவன் நினைவுகளை சேமித்து வைக்கும் பெட்டகம் காலம் ஆச்சுனா பழசா போகும் தானே...தூசி தட்டி எடுக்கப் பட்டது பழைய பெட்டி மட்டும் அல்ல,,,, காலம் புறம் தள்ளிய காதலுமனு சொல்லிருக்கேன்.. ஹி ஹி நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்........

ரேவா சொன்னது…

karthikkumar said...

நான் கைப்பற்றிய
அவன் கைக்குட்டை...
அவன் இதழ் பற்றிய சிகரெட் துண்டு...
அவன் கையெழுத்து அடங்கிய
அவன் குறிப்பேடு.,/// இதெல்லாம் பொண்ணுக கூட சேத்தி வெப்பீங்க்ளா....:))

ஹி ஹி சேத்து வைக்கிறது பெண்களுக்கு கை வந்த கலை, ஆணி பிரதர்... இது உங்களுக்கு தெரியாதா?..........

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

அவன் கைக்குட்டை...
அவன் இதழ் பற்றிய சிகரெட் துண்டு...
அவன் கையெழுத்து அடங்கிய
அவன் குறிப்பேடு.,
கரையான் அறித்த
அவன் நிழற்படம்,
என,/////

எல்லாம் இங்க இருக்கும் போது அவர் மட்டும் எங்க போனார்...????

சகோ நான் தான் முந்தையப் பதிவிலே சொன்னேன்ல, அவர் வேர்ல்ட் கப் மேட்ச் க்கு போயிருக்காருனு... ஹி ஹி

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

நானும் வந்துட்டேன்.!!

என்னா எழுதியிருக்கீங்க.?

ஓ..
//அமைதியான ஓர்
நாளில் அரவமில்லாமல்
அரங்கேறியது...//

அடடே நினைவுகளா.. பல நாளில் என் நிம்மதியை போக்கும் எதிரியாச்சே அவன்..

///எல்லோருக்கும் அப்படி தான்... சிலநேரங்களில் நினைவுகள் நாம் படுத்துறங்கும் அன்னை மடியும் கூட ...////

//அவன் கைக்குட்டை...
அவன் இதழ் பற்றிய சிகரெட் துண்டு...
அவன் கையெழுத்து அடங்கிய
அவன் குறிப்பேடு.,
கரையான் அறித்த
அவன் நிழற்படம்,//

ஓ. இதுதானா காதல்.?


ஒ உங்களுக்கு காதல் னா தெ(பு) ரியாதுல?... சாரி... ஐயோ.... உங்க ப்ரோபைல் போட்டோ தான் குழந்தைனா நீங்களுமா?....நன்றி உங்கள் வருகைக்கு...
--

ரேவா சொன்னது…

தல தளபதி said...

//என் பழையபெட்டியில்
பத்திரமாய்
அவனின் சுவடுகள்...//

ஏன் இந்த கஞ்சத்தனம்! ஒரு புது பெட்டிதான் வாங்குறது?

ஹி ஹி உன்ன மாதிரி நண்பன் வாங்கித் தருவான்னு தான் காத்திருக்கேன்... என்ன சொல்லுற ஜெய் ?...

ரேவா சொன்னது…

தல தளபதி said...

நீ இன்னும் அந்த அப்ப்ரூவல எடுக்கலையா?!!

நான் எடுக்கமாட்டேன் பா :-0

logu.. சொன்னது…

\\காலத்தின் மாற்றத்தால்
ஆழ்மனதில் உறங்கிப் போன
அவன் நினைவுகள்,
அமைதியான ஓர்
நாளில் அரவமில்லாமல்
அரங்கேறியது...\\

அருமை..

சித்தாரா மகேஷ். சொன்னது…

கவிதை அருமை...என்றும் உங்கள்சித்தாரா மகேஷ் தேனின் மகிமை

நிரூபன் சொன்னது…

காலத்தின் மாற்றத்தால்
ஆழ்மனதில் உறங்கிப் போன
அவன் நினைவுகள்,
அமைதியான ஓர்
நாளில் அரவமில்லாமல்
அரங்கேறியது...//

வணக்கம் சகோதரம்,
அவனின் சுவடுகள். தலைப்பே கவிதைக்கு அணிச் சேர்த்து, விட்டுச் சென்ற ஞாபகங்களின் தடயத்தினைக் கவிதை நிச்சயம் சொல்லும் எனக் கட்டியம் கூறி நிற்கிறது.

நிரூபன் சொன்னது…

காலத்தின் மாற்றத்தால்
ஆழ்மனதில் உறங்கிப் போன
அவன் நினைவுகள்,
அமைதியான ஓர்
நாளில் அரவமில்லாமல்
அரங்கேறியது...//

நினைவுகள் வரும் நேரத்தை, நாளிகையினை நிதர்சன வார்த்தைகளினூடாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
மனதில் கடுமையான சோகம் ஏற்படும் போதோ அல்லது, மனதில் மௌனங்கள் வட்டமடித்து, அமைதியினை நாடும் போதோ தான் இந்த நினைவுகள் தமது சிறகினை விரிக்கத் தொடங்குகின்றன, இதனை அழகாக விபரித்திருக்கிறீர்கள்.

நிரூபன் சொன்னது…

என் பழைய பொருட்களை
சுத்தம் செய்ய எத்தனிக்கையில்,
அவனறியாமல் நான் கைப்பற்றிய
அவன் கைக்குட்டை...
அவன் இதழ் பற்றிய சிகரெட் துண்டு...
அவன் கையெழுத்து அடங்கிய
அவன் குறிப்பேடு.,
கரையான் அறித்த
அவன் நிழற்படம்,
என,
அவன் நினைவுகள்
நிரப்பிய,
என் பழையபெட்டியில்
பத்திரமாய்
அவனின் சுவடுகள்...///

நினைவுகளை நினைக்கத் தொடங்கினால் மூச்சு விட முடியாத படி அந் நினைவுகளே எம்மை ஆட் கொண்டு விடும் என்பதற்குச் சான்று பகரும் வகையில்; மேற் கூறப்பட்ட வரிகளினூடாகத் ததும்பும் உங்களின் சொல்லாடல்ளே கட்டியம் கூறி நிற்கின்றன.

நிரூபன் சொன்னது…

அவனின் சுவடுகள், இன்றும் மனதினுள் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒரு காதலின் கோடுகளின் நினைவின் வெளிப்பாடாய் மலர்ந்திருக்கின்றன.

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

கவிதை அருமை...என்றும் உங்கள்சித்தாரா மகேஷ்

நன்றி தோழி

ரேவா சொன்னது…

வணக்கம் சகோதரம்,
அவனின் சுவடுகள். தலைப்பே கவிதைக்கு அணிச் சேர்த்து, விட்டுச் சென்ற ஞாபகங்களின் தடயத்தினைக் கவிதை நிச்சயம் சொல்லும் எனக் கட்டியம் கூறி நிற்கிறது.


உண்மைதான் சகோ.... இந்த கவிதை முழுக்க முழுக்க பழைய நினைவுகளை பற்றியது :-)

ரேவா சொன்னது…

நினைவுகள் வரும் நேரத்தை, நாளிகையினை நிதர்சன வார்த்தைகளினூடாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
மனதில் கடுமையான சோகம் ஏற்படும் போதோ அல்லது, மனதில் மௌனங்கள் வட்டமடித்து, அமைதியினை நாடும் போதோ தான் இந்த நினைவுகள் தமது சிறகினை விரிக்கத் தொடங்குகின்றன, இதனை அழகாக விபரித்திருக்கிறீர்கள்.


நன்றி சகோ என் உள்ளக் கருத்தை உள்ளவாறு புரிந்து கொண்டதற்கு
--

ரேவா சொன்னது…

நினைவுகளை நினைக்கத் தொடங்கினால் மூச்சு விட முடியாத படி அந் நினைவுகளே எம்மை ஆட் கொண்டு விடும் என்பதற்குச் சான்று பகரும் வகையில்; மேற் கூறப்பட்ட வரிகளினூடாகத் ததும்பும் உங்களின் சொல்லாடல்ளே கட்டியம் கூறி நிற்கின்றன.


உண்மைதானே சகோ...

ரேவா சொன்னது…

நிரூபன் said...

அவனின் சுவடுகள், இன்றும் மனதினுள் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒரு காதலின் கோடுகளின் நினைவின் வெளிப்பாடாய் மலர்ந்திருக்கின்றன.

நன்றி நன்றி நன்றி சகோ...உங்கள் மறுமொழிகளுக்கு

ரேவா சொன்னது…

logu.. said...

\\காலத்தின் மாற்றத்தால்
ஆழ்மனதில் உறங்கிப் போன
அவன் நினைவுகள்,
அமைதியான ஓர்
நாளில் அரவமில்லாமல்
அரங்கேறியது...\\

அருமை..

நன்றி நண்பா