உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 7 ஏப்ரல், 2011

முதிர் கன்னித் தாயின் பிறவாக் குழந்தைக்காய் இக்கடிதம்.....

அன்பு மகனே !
 உன்னை சுமக்க தகுதியற்ற ஏழைத் தாயின் கடிதம்....

நாதியற்ற உலகில் நான் நாட்களை முதிர் கன்னியாய் கழித்துக் கொண்டு ஏதோ நலமாய் இருக்கின்றேன்...இன்னும் எழுதப்படா என் வாழ்க்கை தீர்ப்பில், திருப்பம் தர உன் தந்தையென
யாரும் வராததால், எனைக் கொத்தி தின்னும் பார்வைகள், என்னுள்  தந்த வலியால் எழுதுகிறேன் இந்த கடிதம்.....

 என்னை உயிர் கொண்டு நிரப்பும், எனக்கான உன் தந்தை, இது வரை என்னை வந்து சேரவில்லை ....இரு சங்கமங்கள் சங்கமிக்காததால் என்னில் ஜனிக்காத என் மகனே, இறைவன் முன் ரச்சிக்கப்பட்ட நீ நலமா?.....

நீ நலமாய் இருப்பாய் என்பது தெரியும்... குழம்பிப் போன உன் தாயின் நிலையை யாரிடம் சொல்ல, அதனாலே எழுதுகிறேன் உனக்கு இக் கடிதத்தை...வறுமையில் பிறந்ததால் வறுமைக்கே வாக்கப் பட்டேன்...நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய், கனவிலே என் நாட்கள் நகர, என் உணர்வை அறியாமல், சுற்றிய சுற்றம் பேசியே, எனை நரகத்தில் தள்ள, மணமாகா   விதவயாய்ப் போனேன்...   
.

என்னுள் நிரம்பிய ஆசைகள், இன்னும் நிறம் பெறவும் இல்லை, உருப் பெறவும் இல்லை.., தினம் தினம் நான் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லிமாளாது என் கண்ணே....விடியலில் இருந்து அடையல் வரைக்கும், பிறர் சகுனப் பார்வையிலே நான் செத்து செத்து பிழைக்கின்றேன்.

.கல்லுக்கு சேலை கட்டினாலும் திருப்பிப் பார்க்கும் சில சதைக்கு அலையும் மனிதர்கள்  மத்தியில், செத்த ஜடமாய் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...நட்பாய்ப் பழகி நாளடைவில் நயவஞ்சக பாம்பாய் பலர் காமம் என்னும் விஷம் கக்க, வீரியம் மிக்க என் மனம் கொண்டே நான் வாழ்ந்து வருகின்றேன்...

என் வயதொத்த எல்லா பெண்ணும் ஆணென்றும் பெண்ணென்றும் தான் மகவைப் பேண, நான் மட்டும் மையிழந்த பேனாவாய் ஓரத்தில் கிடக்கின்றேன்..பூ வைக்கவும் முடியாமல்
புத்தாடை அணியவும் முடியாமல், புறம் பேசும் நாக்குகள் மத்தியில் பொய்யாய் சிரித்தே நாட்களை கழிக்கின்றேன்...
 
.பணம் இல்லா என் வாழ்வில், பரிகாரம் செய்யச் சொல்லி கோவிலுக்கு சென்றாலும், கோவில் சிலைகளைப் பார்பதற்கும் பணம் தேவையாம்... தோஷம் இல்லா என் வாழ்வின் சந்தோஷம் எல்லாம் பணம் என்ற தோஷத்தால் பாலாய்ப் போனது...

பெண் பார்ப்பதாய் பலர் வருகின்றனர்... கொடுத்த உணவோடு ,பார்வையால் எனையும் தின்று விட்டு செல்கின்றனர்.. இப்படி தினம் தினம் நடக்கும் நாடகத்தில் ,உப்பில்லா வாழ்வில் நான் போடும் ஒப்பனைகளே சாட்சி என் வயதிற்கு....  எனைப் பார்த்த யாருக்கும் என்னைப் பிடிக்காமல் இல்லை ஆனால் எல்லோருக்கும் பணம் பிடித்திருக்கிறது...     

புவிதனில் பிறந்த நாள் முதல், புரியாத வாழ்வை, பணம் என்ற மூன்றெழுத்தின் மூலம் புரிந்ததாய் ஒரு கூட்டம் சுற்ற....என் எதிர்பார்ப்பு  எல்லாவற்றிற்கும்  அர்த்தம் இல்லாமல் போகிறது, சீதனம் என்னும்  நிராகரிப்பின் மூலம்...ஆனாலும்  வலி கொண்ட என் வாழ்க்கை மட்டும காத்துக்கிடக்கிறது என் மணக் கோலத்திற்காக...

உயிர் ஜனிக்கும் வலியை விட இவர்கள் எனைப் பார்க்கும் வலி பெரிதாய் தெரிகிறது என் மகனே/மகளே ...என்றேனும் உன் தந்தை, என்னை தன் துணையாய் ஏற்றிட்டால், என்னுள் ஜனிக்க உள்ள என் மகனே/மகளே... இப்பொழுதே சபதம்  கொள்....பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...

அன்பு மகனே / மகளே , உன்னிடம் என் எண்ணத்தை சொல்லிவிட்டதால் என் பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்.... இனி ஒரு சந்திப்பில் நீ என் மடியில் தவழ்வாய் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்
இந்தக் கடிதத்தை....

அன்புடன் 
உன்னை சுமக்க  காத்திருக்கும் 
உன் அன்புத் தாய்....அன்புடன் 
ரேவா

72 கருத்துகள்:

தமிழ்வாசி - Prakash சொன்னது…

///பெண் பார்ப்பதாய் பலர் வருகின்றனர்... கொடுத்த உணவோடு ,பார்வையால் எனையும் தின்று விட்டு செல்கின்றனர்.. இப்படி தினம் தினம் நடக்கும் நாடகத்தில் ,உப்பில்லா வாழ்வில் நான் போடும் ஒப்பனைகளே சாட்சி என் வயதிற்கு.... ///

ரேவா, இந்த நிலை தான் இன்று நிறைய பெண்களுக்கு... ஒவ்வொரு பெண் பார்க்கும் படலத்தின் போதும் ஷோகேஸ் பொம்மையாய்...

எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நான் மட்டும் மையிழந்த பேனாவாய் ஓரத்தில் கிடக்கின்றேன்//

அருமை அருமை...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அன்பு மகனே, உன்னிடம் என் எண்ணத்தை சொல்லிவிட்டதால் என் பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்.... இனி ஒரு சந்திப்பில் நீ என் மடியில் தவழ்வாய் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்
இந்தக் கடிதத்தை....
அன்புடன்
உன்னை சுமக்க காத்திருக்கும்
உன் அன்புத் தாய்....//

கண்ணில் நீர் சொட்ட வச்சிட்டீங்களே ரேவா....

நிரூபன் சொன்னது…

யாரும் வராததால், எனைக் கொத்தி தின்னும் பார்வைகள், என்னுள் தந்த வலியால் எழுதுகிறேன் இந்த கடிதம்.....//

வணக்கம் சகோதரம், நலமா?

ஒரு பெண் சமூகத்தில் எவ்வாறான பார்வைகளூடாக நோக்கப்படுகிறாள் எனும் யதார்த்தத்துடன் கடிதத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள்.

நிரூபன் சொன்னது…

என்னை உயிர் கொண்டு நிரப்பும், எனக்கான உன் தந்தை, இது வரை என்னை வந்து சேரவில்லை ....இரு சங்கமங்கள் சங்கமிக்காததால் என்னில் ஜனிக்காத என் மகனே, இறைவன் முன் ரச்சிக்கப்பட்ட நீ நலமா?.....//

ஒரு முதிர் கன்னியின் வாய் மொழியினையும், அவளது தவிப்பின் பிரதிபலிப்பையும் அப்படியே கண் முன்னே கொண்டு வருகிறீர்கள் சகோதரம்.

நிரூபன் சொன்னது…

நீ நலமாய் இருப்பாய் என்பது தெரியும்... குழம்பிப் போன உன் தாயின் நிலையை யாரிடம் சொல்ல, அதனாலே எழுதுகிறேன் உனக்கு இக் கடிதத்தை...வறுமையில் பிறந்ததால் வறுமைக்கே வாக்கப் பட்டேன்...நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய், கனவிலே என் நாட்கள் நகர, என் உணர்வை அறியாமல், சுற்றிய சுற்றம் பேசியே, எனை நரகத்தில் தள்ள, மணமாகா விதவயாய்ப் போனேன்... //

இது உங்கள் உரை நடைக் கடிதக் காவியம் மூலம் சமூகத்தின் மீது கொடுக்கப்படுகின்ற அடி.
வறுமை, ஜாதகப் பொருத்தம், சீதனச் சீர்வரிசை முதலிய காரணங்கள் தான் முதிர் கன்னிகளின் தோற்றத்திற்கு காரணமாய் அமைகிறது என்பதனைச் சுட்டுகிறீர்கள்.

நிரூபன் சொன்னது…

என்னுள் நிரம்பிய ஆசைகள், இன்னும் நிறம் பெறவும் இல்லை, உருப் பெறவும் இல்லை.., தினம் தினம் நான் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லிமாளாது என் கண்ணே....விடியலில் இருந்து அடையல் வரைக்கும், பிறர் சகுனப் பார்வையிலே நான் செத்து செத்து பிழைக்கின்றேன்.//

இவை சாதாரண வார்த்தைகள் இல்லை, ஒரு பெண்ணின் உள்ளத்தை அப்படியே பிழிந்தெடுத்து வந்து எங்களுக்காய் உயிர்ப் பூட்டிப் பதிவாக்கியிருக்கிறீர்கள்.

நிரூபன் சொன்னது…

கல்லுக்கு சேலை கட்டினாலும் திருப்பிப் பார்க்கும் சில சதைக்கு அலையும் மனிதர்கள் மத்தியில்,//

காமுகர்களைக் சொல்லால் அடித்திருக்கிறீர்கள். சபாஷ்...

இப்படியொரு வித்தியாசமான சிந்தனையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை.

நிரூபன் சொன்னது…

நான் மட்டும் மையிழந்த பேனாவாய் ஓரத்தில் கிடக்கின்றேன்.//

கடிதத்தின் உணர்வை உயிர்ப் பெறச் செய்ய் உருவகத்தைக் கையாள்கிறீர்கள்.

நிரூபன் சொன்னது…

உயிர் ஜனிக்கும் வலியை விட இவர்கள் எனைப் பார்க்கும் வலி பெரிதாய் தெரிகிறது என் மகனே...என்றேனும் உன் தந்தை என்னை தன் துணையாய் எனை ஏற்றிட்டால், என்னுள் ஜனிக்க உள்ள என் மகனே/மகளே... இப்பொழுதே சபதம் கொள்....பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...//

சமூகத்தில் இருக்கும் மூடக் கொள்கைகள் தான் இந்த முதிர் கன்னிகளை உருவாக்குகிறது. ஒரு முதிர் கன்னியின் வாழ்வியற் கோலங்களை உயிர்ப் பூட்டும் வார்த்தைகளால் படைத்திருக்கிறீர்கள்.
படிக்கையில் உங்கள் படைப்பின் வெற்றியான உணர்வின் வரிகள் என் உயிர் மூச்சை அடைப்பது போன்ற தான வலியினைத் தருகிறது.

நீண்ட நாட்களிற்குப் பின்பு நீங்கள் தந்திருக்கும் வெரைட்டிப் பதிவு.

மனதினுள் பல எண்ண அலைகளை எழுப்பி, மௌனிக்கச் செய்கிறது.

ஹேமா சொன்னது…

ஒரு பெண்ணாய் உணர்ந்து எழுதியதால் அடுத்தவர்கள் அதிகமாக உணர்ந்துகொள்ளக்கூடியதான எழுத்தமைப்பு.பாராட்டுக்கள் தோழி !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

SAD FEELING.DIFFERENT THOUGHT.WELL WRITTEN

எவனோ ஒருவன் சொன்னது…

இப்படி ஒரு களத்தை தேர்ந்தெடுத்ததற்காக என் முதல் பாராட்டுக்கள் தோழி. அருமையான முயற்சி. வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. அப்பெண்ணின் மனதில் இருக்கும் வலியை மிக அழுத்தமாக அழகாக கூறி இருக்கிறீர்கள். அத்தாயின் மடியில் மிக விரைவில் குழந்தை தவழ வேண்டும் என்ற எண்ணம் இம்மடலை வாசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது உறுதி. இது போன்ற நிலை எந்த பெண்ணிற்கும் வரக் கூடாது என்று இல்லாத கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

Chitra சொன்னது…

உயிர் ஜனிக்கும் வலியை விட இவர்கள் எனைப் பார்க்கும் வலி பெரிதாய் தெரிகிறது என் மகனே...என்றேனும் உன் தந்தை என்னை தன் துணையாய் எனை ஏற்றிட்டால், என்னுள் ஜனிக்க உள்ள என் மகனே/மகளே... இப்பொழுதே சபதம் கொள்....பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...

......அவர்கள் மனதின் வலியின் உச்சத்தை இந்த வரிகள் தொடுகின்றன.

தம்பி கூர்மதியன் சொன்னது…

இப்படியொரு பதிவு.!

எதிர்பார்க்காத ஒன்று..

//இரு சங்கமங்கள் சங்கமிக்காததால் என்னில் ஜனிக்காத என் மகனே, இறைவன் முன் ரச்சிக்கப்பட்ட நீ நலமா?.....//

அருமையான வரிகள்.. என்னில் ஜனிக்காத என் மகனே.! உண்மையில் நெகிழ்ந்தேன்..

தம்பி கூர்மதியன் சொன்னது…

//மணமாகா விதவயாய்ப் போனேன்... //

இதன் பெயர் இதயத்தின் வலியா.? சகோ.!! இன்னும் ஆயிரம் முறை கேட்பேன் எங்ஙனம் தோன்றியது இது.?

தம்பி கூர்மதியன் சொன்னது…

//கல்லுக்கு சேலை கட்டினாலும் திருப்பிப் பார்க்கும் சில சதைக்கு அலையும் மனிதர்கள் மத்தியில்//

செருப்படி.!!

ஏ ஆண் வர்க்கமே.!
தேவையா இது.?
உன் மோகத்திற்கான கூலி இது.!!

தம்பி கூர்மதியன் சொன்னது…

//நட்பாய்ப் பழகி நாளடைவில் நயவஞ்சக பாம்பாய் பலர் காமம் என்னும் விஷம் கக்க,//

இதை தான் சமுதாய வளர்ச்சினு சொல்றாங்களோ.!

தம்பி கூர்மதியன் சொன்னது…

//புறம் பேசும் நாக்குகள் மத்தியில் பொய்யாய் சிரித்தே நாட்களை கழிக்கின்றேன்... //

நாக்குகள் பேசுவது பேசிதான் இருக்கும் என இவ்விசயத்தில் விட்டிட முடியாது.. ஒவ்வொரு பேச்சும் பல்வேறு ஏச்சு கணைகளாகும்..

தம்பி கூர்மதியன் சொன்னது…

//கோவில் சிலைகளைப் பார்பதற்கும் பணம் தேவையாம்... //

கலியுகம்..

தம்பி கூர்மதியன் சொன்னது…

//பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...//

கவிதை..

தம்பி கூர்மதியன் சொன்னது…

//அன்புடன்
உன்னை சுமக்க காத்திருக்கும்
உன் அன்புத் தாய்...//

சகோ! அருமையான வார்த்தை ஜாலங்கள்.. ஒவ்வொரு வரியும் உரைநடையில் அமைக்கப்பட்ட கவிதை.. நெகிழ்ந்தேன்.. கற்பனையாய் இருக்கும்(இருக்கவேண்டும்..) இந்த பதிவு அருமை..

siva சொன்னது…

ஒரு ஒரு வரிகளும்
மனதை
நெருடுகிறது..

siva சொன்னது…

ரேவதி ஒரு ஒரு பதிவும்
ஒரு விதமாய்
ஒரு தெலுங்கு படம் போல
ஒரு காமெடி பதிவு போட்ட அடுத்து
செண்டிமெண்ட் பதிவு....

நீ எங்கயோ போய்விட்டாய்
வாழ்க என் தோழி..

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

///பெண் பார்ப்பதாய் பலர் வருகின்றனர்... கொடுத்த உணவோடு ,பார்வையால் எனையும் தின்று விட்டு செல்கின்றனர்.. இப்படி தினம் தினம் நடக்கும் நாடகத்தில் ,உப்பில்லா வாழ்வில் நான் போடும் ஒப்பனைகளே சாட்சி என் வயதிற்கு.... ///

ரேவா, இந்த நிலை தான் இன்று நிறைய பெண்களுக்கு... ஒவ்வொரு பெண் பார்க்கும் படலத்தின் போதும் ஷோகேஸ் பொம்மையாய்...

உண்மைதான் நண்பரே...பேச வார்த்தைகள், எதிர்பாக்க ஆசைகள் இருந்தும், இன்னும் பெண்கள் சாவிகொடுக்கும் பொம்மைகள் தான்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ்வாசி நண்பரே...

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

நான் மட்டும் மையிழந்த பேனாவாய் ஓரத்தில் கிடக்கின்றேன்//

அருமை அருமை...

நன்றி நண்பரே, அன்பான உங்கள் வருகைக்கும், வழக்கம்போல் உங்கள் மறுமொழிக்கும்...

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//அன்பு மகனே, உன்னிடம் என் எண்ணத்தை சொல்லிவிட்டதால் என் பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்.... இனி ஒரு சந்திப்பில் நீ என் மடியில் தவழ்வாய் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்
இந்தக் கடிதத்தை....
அன்புடன்
உன்னை சுமக்க காத்திருக்கும்
உன் அன்புத் தாய்....//

கண்ணில் நீர் சொட்ட வச்சிட்டீங்களே ரேவா....

அப்படியா நண்பரே.... இதுபோல எத்தனையோ பெண்கள் விழி நீரை வெளியே காட்டாமல் வாழ்த்து கொண்டிருக்கின்றனர்.... நன்றி மனோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

ரேவா சொன்னது…

நிரூபன் said...

யாரும் வராததால், எனைக் கொத்தி தின்னும் பார்வைகள், என்னுள் தந்த வலியால் எழுதுகிறேன் இந்த கடிதம்.....//

வணக்கம் சகோதரம், நலமா?

ஒரு பெண் சமூகத்தில் எவ்வாறான பார்வைகளூடாக நோக்கப்படுகிறாள் எனும் யதார்த்தத்துடன் கடிதத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள்.

நலம் சகோ... தாங்கள் நலமா?...ஆமாம் சகோ..வெகு .யதார்த்தத்துடனே இக் கடிதத்தைத் தொடங்கியிருக்கிறேன் :-)

ரேவா சொன்னது…

நிரூபன் said...

என்னை உயிர் கொண்டு நிரப்பும், எனக்கான உன் தந்தை, இது வரை என்னை வந்து சேரவில்லை ....இரு சங்கமங்கள் சங்கமிக்காததால் என்னில் ஜனிக்காத என் மகனே, இறைவன் முன் ரச்சிக்கப்பட்ட நீ நலமா?.....//

ஒரு முதிர் கன்னியின் வாய் மொழியினையும், அவளது தவிப்பின் பிரதிபலிப்பையும் அப்படியே கண் முன்னே கொண்டு வருகிறீர்கள் சகோதரம்.

நன்றி சகோ...நானும் பெண் என்பதால், எனக்கும் அந்த தவிப்பு புரியும் சகோ

ananth சொன்னது…

.இன்னும் எழுதப்படா என் வாழ்க்கை தீர்ப்பில், திருப்பம் தர உன் தந்தையென
யாரும் வராததால், எனைக் கொத்தி தின்னும் பார்வைகள், என்னுள் தந்த வலியால் எழுதுகிறேன் இந்த கடிதம்.....

நலமா ரேவா?.... நேரமின்மையால் உங்கள் வலைத்தளம் வர முடியவில்லை... பதிவுகள் எல்லாம் அருமை...உங்கள் எழுத்தின் போக்கில் மாற்றம் தெரிகிறது...இந்த பதிவு கண்ணில் நீர் வரச் செய்து விட்டது... தொடர்ந்து இது போன்று எழுதுங்கள் ரேவா...

ananth சொன்னது…

கல்லுக்கு சேலை கட்டினாலும் திருப்பிப் பார்க்கும் சில சதைக்கு அலையும் மனிதர்கள் மத்தியில், செத்த ஜடமாய் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...நட்பாய்ப் பழகி நாளடைவில் நயவஞ்சக பாம்பாய் பலர் காமம் என்னும் விஷம் கக்க, வீரியம் மிக்க என் மனம் கொண்டே நான் வாழ்ந்து வருகின்றேன்...

செம லைன்ஸ்... நான் உங்க கிட்ட இருந்து இந்த மாதிரி பதிவுகள் எதிர்ப்பாக்கல ரேவா... ...மனதை என்னவோ பண்ணுகிறது இந்த வரிகள்...

ananth சொன்னது…

பெண் பார்ப்பதாய் பலர் வருகின்றனர்... கொடுத்த உணவோடு ,பார்வையால் எனையும் தின்று விட்டு செல்கின்றனர்..

இத படிக்கும் பொது மனது பாரம் அதிகமாகி விட்டது போல ஓர் உணர்வு

ananth சொன்னது…

இப்பொழுதே சபதம் கொள்....பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...

ஹான்ட்ஸ் ஆப் யூவர் டேலன்ட்...எண்டிங் டச்சிங்....

ரேவா சொன்னது…

நிரூபன் said...

நீ நலமாய் இருப்பாய் என்பது தெரியும்... குழம்பிப் போன உன் தாயின் நிலையை யாரிடம் சொல்ல, அதனாலே எழுதுகிறேன் உனக்கு இக் கடிதத்தை...வறுமையில் பிறந்ததால் வறுமைக்கே வாக்கப் பட்டேன்...நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய், கனவிலே என் நாட்கள் நகர, என் உணர்வை அறியாமல், சுற்றிய சுற்றம் பேசியே, எனை நரகத்தில் தள்ள, மணமாகா விதவயாய்ப் போனேன்... //

இது உங்கள் உரை நடைக் கடிதக் காவியம் மூலம் சமூகத்தின் மீது கொடுக்கப்படுகின்ற அடி.
வறுமை, ஜாதகப் பொருத்தம், சீதனச் சீர்வரிசை முதலிய காரணங்கள் தான் முதிர் கன்னிகளின் தோற்றத்திற்கு காரணமாய் அமைகிறது என்பதனைச் சுட்டுகிறீர்கள்.

கண்டிப்பாக சகோ... நீங்கள் மேற்ச சொன்ன காரணங்களே முதிர்கன்னிகள் உருவாக காரண மானவைகள்...

ரேவா சொன்னது…

நிரூபன் said...

என்னுள் நிரம்பிய ஆசைகள், இன்னும் நிறம் பெறவும் இல்லை, உருப் பெறவும் இல்லை.., தினம் தினம் நான் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லிமாளாது என் கண்ணே....விடியலில் இருந்து அடையல் வரைக்கும், பிறர் சகுனப் பார்வையிலே நான் செத்து செத்து பிழைக்கின்றேன்.//

இவை சாதாரண வார்த்தைகள் இல்லை, ஒரு பெண்ணின் உள்ளத்தை அப்படியே பிழிந்தெடுத்து வந்து எங்களுக்காய் உயிர்ப் பூட்டிப் பதிவாக்கியிருக்கிறீர்கள்.

உண்மைதானே சகோ... இவை தினம் தினம் பெண் வாழ்வில் நடக்கின்ற விடயங்கள் தானே சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

கல்லுக்கு சேலை கட்டினாலும் திருப்பிப் பார்க்கும் சில சதைக்கு அலையும் மனிதர்கள் மத்தியில்,//

காமுகர்களைக் சொல்லால் அடித்திருக்கிறீர்கள். சபாஷ்...

இப்படியொரு வித்தியாசமான சிந்தனையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை.

நானும் இப்படி ஒரு பதிவு எழுதுவேன் என்று நினைக்கவே இல்லை...வெகுநாட்களாய் எனக்குள் ஒட்டிக்கொண்டிருந்த சோகம் இன்று இந்த பதிவின் மூலம் முற்று பெற்றதாய் உணர்கின்றேன்...ஆனாலும் சொல்லப் படாத சோகங்கள் பெண் வாழ்வில் நிறைந்து தான் கிடக்கின்றன...நன்றி சகோ இந்த மறுமொழியில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்...

ரேவா சொன்னது…

நிரூபன் said...

நான் மட்டும் மையிழந்த பேனாவாய் ஓரத்தில் கிடக்கின்றேன்.//

கடிதத்தின் உணர்வை உயிர்ப் பெறச் செய்ய் உருவகத்தைக் கையாள்கிறீர்கள்.

ஹி ஹி நன்றி சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

உயிர் ஜனிக்கும் வலியை விட இவர்கள் எனைப் பார்க்கும் வலி பெரிதாய் தெரிகிறது என் மகனே...என்றேனும் உன் தந்தை என்னை தன் துணையாய் எனை ஏற்றிட்டால், என்னுள் ஜனிக்க உள்ள என் மகனே/மகளே... இப்பொழுதே சபதம் கொள்....பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...//

சமூகத்தில் இருக்கும் மூடக் கொள்கைகள் தான் இந்த முதிர் கன்னிகளை உருவாக்குகிறது. ஒரு முதிர் கன்னியின் வாழ்வியற் கோலங்களை உயிர்ப் பூட்டும் வார்த்தைகளால் படைத்திருக்கிறீர்கள்.
படிக்கையில் உங்கள் படைப்பின் வெற்றியான உணர்வின் வரிகள் என் உயிர் மூச்சை அடைப்பது போன்ற தான வலியினைத் தருகிறது.

///நன்றி சகோ...எனக்கும் சொல்லத்தெரியா ஒரு வலியும் அதே நேரத்தில், மகிழ்ச்சியும் ஒன்றாய் சேர்ந்து கொண்டது உங்கள் பின்னூட்டம் கண்டதும்....///

நீண்ட நாட்களிற்குப் பின்பு நீங்கள் தந்திருக்கும் வெரைட்டிப் பதிவு.

//ஆமாம் சகோ,,,மிக நீண்ட நாட்களுக்கு பிறகு..////

மனதினுள் பல எண்ண அலைகளை எழுப்பி, மௌனிக்கச் செய்கிறது.

அலைகளுக்கு பின் ஏதேனும் மாற்றம் ஏற்படுமெனில் மகிழ்ச்சியே சகோ...நன்றி நன்றி நன்றி சகோ....உங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும்...மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

ஹேமா said...

ஒரு பெண்ணாய் உணர்ந்து எழுதியதால் அடுத்தவர்கள் அதிகமாக உணர்ந்துகொள்ளக்கூடியதான எழுத்தமைப்பு.பாராட்டுக்கள் தோழி !

ஆம் தோழி, ஒரு பெண் அனுபவிக்கும் வாழ்க்கை காட்சிகளை, வார்த்தைகளில் காட்டத்தான் நினைத்தேன்... மிக்க நன்றி தோழி, உங்கள் முதல் வருகைக்கும் முத்தான உங்கள் மறுமொழிக்கும்...தொடர்ந்து வாருங்கள்...:-)

ரேவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

SAD FEELING.DIFFERENT THOUGHT.WELL WRITTEN

நன்றி நண்பரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

இப்படி ஒரு களத்தை தேர்ந்தெடுத்ததற்காக என் முதல் பாராட்டுக்கள் தோழி. அருமையான முயற்சி. வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடி.

///மிக்க நன்றி நண்பா..////

அப்பெண்ணின் மனதில் இருக்கும் வலியை மிக அழுத்தமாக அழகாக கூறி இருக்கிறீர்கள்.

////இது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இருக்கும் வலிதான் நண்பா ///

அத்தாயின் மடியில் மிக விரைவில் குழந்தை தவழ வேண்டும் என்ற எண்ணம் இம்மடலை வாசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது உறுதி.

////இங்கு இருக்கும் அநேகம் கோடி பெண்களுக்காகவே இந்த பதிவு...சீதனம் எதிர்பாரா மவராசன் சீக்கிரம் பிறக்கட்டும் இப் புவிதனிலே...எம் ஏழைப் பெண்களுக்காய்/////

இது போன்ற நிலை எந்த பெண்ணிற்கும் வரக் கூடாது என்று இல்லாத கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

நானும் அன்பெனும் ஆண்டவன் பெயரில் வேண்டிக்கொள்கிறேன்...சிக்கிரம் ஆண்ணைப் பெற்றோர் எல்லோர் மனதும் மாறிப் போக வேண்டுமென்று...மிக்க நன்றி நண்பா...உன் உற்சாக மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

Chitra said...

உயிர் ஜனிக்கும் வலியை விட இவர்கள் எனைப் பார்க்கும் வலி பெரிதாய் தெரிகிறது என் மகனே...என்றேனும் உன் தந்தை என்னை தன் துணையாய் எனை ஏற்றிட்டால், என்னுள் ஜனிக்க உள்ள என் மகனே/மகளே... இப்பொழுதே சபதம் கொள்....பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...

......அவர்கள் மனதின் வலியின் உச்சத்தை இந்த வரிகள் தொடுகின்றன.

உண்மைதான் சகோ...வலி உணர்ந்தோருக்கே, வாழும் வழி தெரியும்...

நன்றி சகோ உங்கள் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

இப்படியொரு பதிவு.!

எதிர்பார்க்காத ஒன்று..

//இரு சங்கமங்கள் சங்கமிக்காததால் என்னில் ஜனிக்காத என் மகனே, இறைவன் முன் ரச்சிக்கப்பட்ட நீ நலமா?.....//

அருமையான வரிகள்.. என்னில் ஜனிக்காத என் மகனே.! உண்மையில் நெகிழ்ந்தேன்..

வணக்கம் சகோ... இப்படியொரு மறுமொழி உங்களிடம் நானும் எதிர்பார்க்கா ஒன்று... ஹ ஹ சும்மா... நன்றி நன்றி நன்றி சகோ

ரேவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரேவா சொன்னது…

ரேவா said...

தம்பி கூர்மதியன் said...

//மணமாகா விதவயாய்ப் போனேன்... //

இதன் பெயர் இதயத்தின் வலியா.? சகோ.!! இன்னும் ஆயிரம் முறை கேட்பேன் எங்ஙனம் தோன்றியது இது.?

சகோ, வெகு நாட்களாய் முதிர் கன்னிகளின் கனவுகளைப் பற்றி கவிதையாய் எழுத நினைத்து இருந்தேன்.... ஆனால் இப்போது மடலாய் தொடுத்து விட்டேன்..கண்டிப்பாக இது பொருள் "இ"ல்லா கன்னிகளின் இதயத்தின் வலியே என்பேன் சகோ..

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//கல்லுக்கு சேலை கட்டினாலும் திருப்பிப் பார்க்கும் சில சதைக்கு அலையும் மனிதர்கள் மத்தியில்//

செருப்படி.!!

ஏ ஆண் வர்க்கமே.!
தேவையா இது.?
உன் மோகத்திற்கான கூலி இது.!!

உண்மை தானே சகோ

ரேவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//நட்பாய்ப் பழகி நாளடைவில் நயவஞ்சக பாம்பாய் பலர் காமம் என்னும் விஷம் கக்க,//

இதை தான் சமுதாய வளர்ச்சினு சொல்றாங்களோ.!

ஹி ஹி அப்படிக் கூட சொல்லலாம்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//புறம் பேசும் நாக்குகள் மத்தியில் பொய்யாய் சிரித்தே நாட்களை கழிக்கின்றேன்... //

நாக்குகள் பேசுவது பேசிதான் இருக்கும் என இவ்விசயத்தில் விட்டிட முடியாது.. ஒவ்வொரு பேச்சும் பல்வேறு ஏச்சு கணைகளாகும்..

கண்டிப்பாக சகோ...அடித்தல் கூட மறந்து விடலாம்..ஆனால் வார்த்தையால் வதைத்தால் மறத்தல் என்பது முடியவே முடியாது....

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//கோவில் சிலைகளைப் பார்பதற்கும் பணம் தேவையாம்... //

கலியுகம்..

ஆமாம், ஆமாம், சகோ கலியுகமே தான் :-)

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...//

கவிதை..

ஹி ஹி நன்றி சகோ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//அன்புடன்
உன்னை சுமக்க காத்திருக்கும்
உன் அன்புத் தாய்...//

சகோ! அருமையான வார்த்தை ஜாலங்கள்.. ஒவ்வொரு வரியும் உரைநடையில் அமைக்கப்பட்ட கவிதை.. நெகிழ்ந்தேன்.. கற்பனையாய் இருக்கும்(இருக்கவேண்டும்..) இந்த பதிவு அருமை..

நன்றி சகோ. உங்கள் மறுமொழிக்கு.. ஆனால் மறக்காமல் ஒரு விடயத்தை சொல்கின்றேன், இந்தப் பதிவு எங்கணம் கற்பனையாய் இருக்க கூடும் சகோ... நான் சந்தித்த பெரும்பாலான பெண்களின் வாழ்க்கைச்சூழல் இதுவே சகோ...இவையனைத்தும் நாம் தொடத் தயங்கும் சுடும் உண்மைகள்.... நன்றிகள் பல உங்களுக்கும், உங்கள் ஆதரவிற்கும்...

ரேவா சொன்னது…

siva said...

ஒரு ஒரு வரிகளும்
மனதை
நெருடுகிறது..

நன்றி நண்பா

ரேவா சொன்னது…

siva said...

ரேவதி ஒரு ஒரு பதிவும்
ஒரு விதமாய்
ஒரு தெலுங்கு படம் போல
ஒரு காமெடி பதிவு போட்ட அடுத்து
செண்டிமெண்ட் பதிவு....

நீ எங்கயோ போய்விட்டாய்
வாழ்க என் தோழி..

நன்றி நண்பா...உன் ஆதரவான அன்புக்கு....உன் நட்பின் மறுமொழியில் உற்சாகம் கொண்டேன் :-)

ரேவா சொன்னது…

ananth said...

.இன்னும் எழுதப்படா என் வாழ்க்கை தீர்ப்பில், திருப்பம் தர உன் தந்தையென
யாரும் வராததால், எனைக் கொத்தி தின்னும் பார்வைகள், என்னுள் தந்த வலியால் எழுதுகிறேன் இந்த கடிதம்.....

நலமா ரேவா?.... நேரமின்மையால் உங்கள் வலைத்தளம் வர முடியவில்லை... பதிவுகள் எல்லாம் அருமை...உங்கள் எழுத்தின் போக்கில் மாற்றம் தெரிகிறது...இந்த பதிவு கண்ணில் நீர் வரச் செய்து விட்டது... தொடர்ந்து இது போன்று எழுதுங்கள் ரேவா...

நல்ல நட்பு என்னை சுற்றி இருக்கும் போது நான் என்றும் நலமே....தாங்கள்?...நன்றி நண்பா, என் மாற்றம் எல்லாம் என் நட்புகள் தந்ததே...இந்த பதிவு காயப் படுத்த அல்ல...காயம்பட்ட கன்னிகளின் கானல் காலங்களை எடுத்துச் சொல்லவே நன்றி உங்கள் மறக்காத வருகைக்கு

ரேவா சொன்னது…

ananth said...

பெண் பார்ப்பதாய் பலர் வருகின்றனர்... கொடுத்த உணவோடு ,பார்வையால் எனையும் தின்று விட்டு செல்கின்றனர்..

இத படிக்கும் பொது மனது பாரம் அதிகமாகி விட்டது போல ஓர் உணர்வு

:-(

ரேவா சொன்னது…

ananth said...

பெண் பார்ப்பதாய் பலர் வருகின்றனர்... கொடுத்த உணவோடு ,பார்வையால் எனையும் தின்று விட்டு செல்கின்றனர்..

இத படிக்கும் பொது மனது பாரம் அதிகமாகி விட்டது போல ஓர் உணர்வு

நன்றி..நன்றி..நன்றி.. நண்பா.

ரேவா சொன்னது…

ananth said...

இப்பொழுதே சபதம் கொள்....பொல்லாத இந்த உலகில் இல்லாத ஒரு உயிர்க்கே நீ துணையாய் இருப்பேன் என்று...

ஹான்ட்ஸ் ஆப் யூவர் டேலன்ட்...எண்டிங் டச்சிங்....

மிக்க நன்றி நண்பரே

பலே பிரபு சொன்னது…

கவிதை நயம் மிகுந்த கடிதம்.
மிக சோகமான விஷயம்.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

மிகவும் அழுத்தம் தரும் வரிகள்... அழுத்தமாய் கோர்த்து வார்த்திருக்கிறீர்கள்....

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

கவிதை நயம் மிகுந்த கடிதம்.
மிக சோகமான விஷயம்.
நன்றி சகோ....உங்கள் வருகைக்கும் .மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

மிகவும் அழுத்தம் தரும் வரிகள்... அழுத்தமாய் கோர்த்து வார்த்திருக்கிறீர்கள்....

நன்றி சகோ....உங்கள் வருகைக்கும் .மறுமொழிக்கும்

வேங்கை சொன்னது…

அன்பு ரேவா,

ரொம்ப ரொம்ப ஆழமான, அர்த்தமுள்ள வரி(லி)கள் ...

எந்த வரிகளை பாராட்டுவது என்றே தெரியவில்லை
அத்தனையும் அருமை ....( உண்மையான நிகழ்வுகள்)

இன்னும் உயர என் வாழ்த்துக்கள் ...

நிரூபன் சொன்னது…

அக்காச்சி, வணக்கம், எப்பூடி நலமா? எங்கே போயிடீங்க?
உங்களுக்கு என் உளம் கனிந்த இனிய தமிழ்ப் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

siva சொன்னது…

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி

தம்பி கூர்மதியன் சொன்னது…

ரொம்ப பிஸியா.? பதிவையே காணும்.?

ரேவா சொன்னது…

வேங்கை said...

அன்பு ரேவா,

ரொம்ப ரொம்ப ஆழமான, அர்த்தமுள்ள வரி(லி)கள் ...

எந்த வரிகளை பாராட்டுவது என்றே தெரியவில்லை
அத்தனையும் அருமை ....( உண்மையான நிகழ்வுகள்)

இன்னும் உயர என் வாழ்த்துக்கள் ...

மிக்க நன்றி நண்பரே..தாமதமான மறுமொழிக்கு மனிக்கவும்

ரேவா சொன்னது…

நிரூபன் said...

அக்காச்சி, வணக்கம், எப்பூடி நலமா? எங்கே போயிடீங்க?
உங்களுக்கு என் உளம் கனிந்த இனிய தமிழ்ப் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

அது என்ன அக்காச்சி, ஹி ஹி போங்க சகோ...நான் நலம்....மிக்க நன்றி சகோ

ரேவா சொன்னது…

siva said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி

நன்றி நண்பா... உனக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
தாமதமான மறுமொழிக்கு மனிக்கவும்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

ரொம்ப பிஸியா.? பதிவையே காணும்.?

ஹி ஹி வணக்கம் சகோ...பிசிலாம் இல்லா சகோ.... தாமதமான மறுமொழிக்கு மனிக்கவும்

பெயரில்லா சொன்னது…

ரேகா நிஜமாக கண்ணில் நீர் வந்துவிட்டது .