உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 25 ஜூலை, 2011

மழலையின் ஏக்கம்

வணக்கம் நண்பர்களே நலமா? சமீபத்தில்  தமிழ் திரை உலகை பெருமைப் படச் செய்த விஷயம், தமிழ் சினிமா வென்ற தேசிய விருதுகள். இதுவரை தமிழ்  சினிமா பெறாத எண்ணிக்கையில் வென்ற இந்த விருது, அனைவரின் கவனத்தையும், நம் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பிப் பர்ர்க்க வைத்து இருக்கிறது...அதுக்கும் நான் இங்க சொல்லுறதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறேங்களா, சம்மந்தம் இருக்கு, நம் தமிழ் சினிமா வென்ற விருதுகளில் தென்மேற்கு பருவகாற்று என்னும் படம் சத்தம் இல்லாமல், ஒரு சாதனை படைத்தது, அந்த படத்தில் வரும் கள்ளிக் காட்டில் பிறந்த தாயே என்னும் பாடல், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது, என்னை மிக்கவும் கவர்ந்த அந்த பாடலின் தாக்கமே, இந்த பதிவுன்னு இங்க சொல்லிக்கிறேன்.. இந்த பதிவில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் வேலை பார்க்கும் ஒரு தாய், அந்த தாயோட அன்புக்கு ஏங்குற குழந்தைன்னு, அவர்களோட உணர்வுகளை இந்த பதிவில சொல்ல நினைத்தேன்... வழக்கம் போல இந்த பதிவும், உங்கள் பார்வை பயணத்தில் பயணப் பட வைக்கிறேன்..

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே....

நம்ம வீட்டுக் குருவிக்கும்,
வளக்கும் நாயிக்கும், 
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில 
ஆசையா தூங்க, 
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..

உன் அன்புக்கும், உன் தீண்டலுக்கும்,
உன் முத்தத்திற்கும், 
உன் அன்பு மொத்தத்திற்கும்,
எனக்கு வார இறுதி நாள் மட்டும் உண்டு...

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

ஏசி காத்துல வேலை செய்வா,
ஏழு லோகம் தாண்டியும் பேசிடுவா,
அன்பு மகன் என் நினைவு வந்தா,
அலைபேசியில் என் குரல் கேட்ப்பா,
பாவமப்பா...

கணினி பாத்தே அவள் காலம் தொலைப்பா,
என் காலம் வலமாக, அவள் இளமை தொலைப்பா,
நாளைக்கு தருகின்ற தாய்ப் பாலையும்,
புட்டிப் பாட்டிலுல சிறைபிடிப்பா,
தியாகமப்பா....

இரவு வரும்போது போகுறா,
பொழுது விடியும் போது தூங்குறா,
அவ உடம்ப இரும்பாக்கி உழைக்கிறா,
ஆசையாய் அவ மடிசாஞ்சா, 
அலுப்பா இருக்கு கண்ணான்னு அனுப்புறா,

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

அம்மா என் அம்மா 
என் அருகில் இல்லை,
ஆனாலும் அவ பாசமெனக்கு
புரியாமயில்லை,
அவ அன்பைத்தவிர எனக்கு,
எந்த குறையுமில்லை...

அம்மா காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு, 
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு,
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?.....

அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..

காசு பணம் எல்லாம் இருக்குது,
அது என் பாசத்த உங்கிட்ட குறைக்குது,
பணம் கொடுத்து வாங்குன,
வாடகை தாய்கிட்ட (ஆயா )

என் அன்பு முழுவதும் போகுது...
உன் பூ முகம் எனக்கு மறக்குது...

நாலு ஒன்னொன்னும் போகுது,
அது தூரமா உன்ன கட்டுது.
நான் மொத மொத உச்சரிக்கும்
அம்மா என்ற சொல்ல, 
நீ உச்சி முகர்ந்து கேட்கனும்னு தோணுது,
அந்த அம்மா என்ற சொல்லும்,
ஆயாவுக்கு சொந்தமாய் போகுது...

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

64 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

செம தாட் ரேவ் ., இரு படிச்சுட்டு வரேன் ..........

Ram சொன்னது…

இந்த கவிதை //

கவிதையாமாம்.!!!

சௌந்தர் சொன்னது…

நல்ல ஐடியா ரேவா நான் அந்த பாட்டு இன்னும் கேக்கல ஆனா நீ எழுதி இருக்க வரி எல்லாமே சூப்பர்...

ஒவ்வொரு குழந்தையின் ஏக்கம் அப்படியே வரியா சொல்லி இருக்க..!!!

பெயரில்லா சொன்னது…

வணக்கம் நண்பர்களே நலமா?.....// நாங்கலாம் நலம் ., நீ நலமா

Ram சொன்னது…

பதிவுல இவ்வளோ சொல்லுறதுக்கு கரணம், //

கரணம் னா அந்த குரங்குலாம் அடிக்குமே அதுதானே!!

காரணமா.?

Ram சொன்னது…

சோ இந்த பாடலோட தாக்கம் //

என்னது துக்ளக் சோ இந்த பாட்ட தாக்கினாரா.?

Ram சொன்னது…

பாடலோட தாக்கம் தன் //

'தன்' னா.? ஓ 'தான்' அது..

Ram சொன்னது…

எதிர்பாக்குற மழலை இத //

மழலை இவ்வளவு நல்லா வாக்கியம் அமைக்குமா.? அடடா.. ஆச்சர்யகுறி..!!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு,
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு..
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?

//

சத்தியமா இல்ல...

Ram சொன்னது…

வைரமுத்து அவர்கள் எழுதிய, அந்த//

இங்கே காற்புள்ளி அவசியமற்றது..

Ram சொன்னது…

அய்.. குழந்தை ரைமிங்கா பாடுது டோய்... ஹி ஹி

Unknown சொன்னது…

ஹஹஹா:)

Unknown சொன்னது…

ஹஹஹா:செம தாட் ரேவ் )//எப்படிய் உசுபெத்துங்க அக்கா ....சும்மாவே கவிதை கதை படிக்கும்....ம் வாழ்த்துக்கள் ரேவதி.

Prabu Krishna சொன்னது…

லேடி வைரமுத்து தமிழகத்துக்கு ரெடி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிக அருமை!

குழந்தையின் ஏக்கம் அப்படியே வரியாக...

Unknown சொன்னது…

பதிவுலகம் கண்ட கவிதை தாயே
நீ எழுதிய கவிதைகண்டு கண்ணில்
நீரே

உன் பதிவுக்கும் கமெண்ட்டு போட்டுட்டேன்
இன்ட்லிக்கும் ஓட்டு போட்டுட்டேன் தாயே...

Unknown சொன்னது…

பதிவுலகம் கண்ட கவிதை தாயே
நீ எழுதிய கவிதைகண்டு கண்ணில்
நீரே

உன் பதிவுக்கும் கமெண்ட்டு போட்டுட்டேன்
இன்ட்லிக்கும் ஓட்டு போட்டுட்டேன் தாயே...

Unknown சொன்னது…

அழகான நச் கவிதை....ஏக்க பெருமூச்சின் உச்சம்!

பெயரில்லா சொன்னது…

////இரவு வரும் போது போகுறா,
பொழுது விடியும் போது தூங்குறா,
அவள் உடம்ப இரும்பாக்கி உழைக்கிறா,
ஆசையாய் அவ மடிசாஞ்சா,
ஆயாகிட்ட போகச்சொல்லி அனுப்புறா,/// தாய் பாசத்துக்காய் ஏங்கும் ஒரு குழந்தையின் தவிப்பு .. கவிதை அருமை
வரிகள் சந்தத்துடன் அமைந்துள்ளது..

எவனோ ஒருவன் சொன்னது…

அட்டகாசம் ரேவா :-) தேசிய விருதுக்கு இந்தக் கவிதையை அனுப்பி வச்சிடுவோமா?? :-)

எனக்கு பல வரிகளை படிக்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஆனால், அதே நேரம் மனதில் ஒரு வலியும். உங்கள் கவிதைக்கு கிடைத்த வெற்றி இதுவே :-)

இப்ப வைரமுத்துவையும் டார்கட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா ;-) யாரையும் விட்டு வைக்கிறதா இல்ல போல ;-)

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஹா..ஹா... சூப்பரு

Unknown சொன்னது…

நல்லா இருக்கு

பெயரில்லா சொன்னது…

அருமையான யோசனை டா ரேவ் ., படிச்சதும் கண்ணீர் வந்துருச்சு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை கலக்கல்.. av@vikatan.com க்கு சொல்வனம் என டைட்டில் இல் பகிரவும்.. செலக்ட் ஆக வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>காசு பணம் எல்லாம் இருக்குது,
அது என் பாசத்த உன்கிட்ட குறைக்குது...
பணம் கொடுத்து நீ வாங்குன,

டச்சிங்க் லைன்ஸ்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்றை சமூகத்தின் ஏக்கம் தங்கள் கவிதையில் மிளிர்கிறது...

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ,
இன்றைய இயந்திர உலகில் பெற்றோரால் கவனிப்பாரற்றிருக்கும் குழந்தைகளின் நிலயையினையும்,
ஒரு தாய் தன் மகவினைக் காப்பகத்தில் விட்டு விட்டு வேலைக்குச் செல்லுவதால், அப் பிஞ்சு உள்ளத்தில் உருவாகும் ஏக்கம் நிறைந்த- பாசம் பற்றிய ஆதங்கம் கலந்த கவிதையினையும்,
எங்கே நாம் போகின்றோம் எனும் கேள்விக் குறியினை மனதினுள் விதைத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

போளூர் தயாநிதி சொன்னது…

//காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு,
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு..
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?நல்லா இருக்கு

ரேவா சொன்னது…

கல்பனா கூறியது...

செம தாட் ரேவ் ., இரு படிச்சுட்டு வரேன் ..........

ஹி ஹி...

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

இந்த கவிதை //

கவிதையாமாம்.!!!

ஹி ஹி ஏன் உனக்கு இத பாத்தா எப்புடி தெரியுதாம்

ரேவா சொன்னது…

சௌந்தர் கூறியது...

நல்ல ஐடியா ரேவா நான் அந்த பாட்டு இன்னும் கேக்கல ஆனா நீ எழுதி இருக்க வரி எல்லாமே சூப்பர்...

ஒவ்வொரு குழந்தையின் ஏக்கம் அப்படியே வரியா சொல்லி இருக்க..!!!

என்ன ஆச்சு சௌந்தர் உனக்கு, இன்னைக்கு நல்ல புள்ள மாதிரி கமெண்ட் போட்டு இருக்க... ஹ ஹ நன்றி தம்பி

ரேவா சொன்னது…

கல்பனா கூறியது...

வணக்கம் நண்பர்களே நலமா?.....// நாங்கலாம் நலம் ., நீ நலமா

நீ நலமென்றால் நானும் நலமே..........

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

பதிவுல இவ்வளோ சொல்லுறதுக்கு கரணம், //

கரணம் னா அந்த குரங்குலாம் அடிக்குமே அதுதானே!!

காரணமா.?

இந்த குரங்கு அடிக்கும்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

சோ இந்த பாடலோட தாக்கம் //

என்னது துக்ளக் சோ இந்த பாட்ட தாக்கினாரா.?

ஹ ஹ என்ன சொல்லுற கூர்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

பாடலோட தாக்கம் தன் //

'தன்' னா.? ஓ 'தான்' அது..

தவறுகள் திருத்தப்பட்டன நன்றி சகோ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

எதிர்பாக்குற மழலை இத //

மழலை இவ்வளவு நல்லா வாக்கியம் அமைக்குமா.? அடடா.. ஆச்சர்யகுறி..!!

ஹி ஹி

ரேவா சொன்னது…

சங்கவி கூறியது...

//காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு,
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு..
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?

//

சத்தியமா இல்ல...

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

வைரமுத்து அவர்கள் எழுதிய, அந்த//

இங்கே காற்புள்ளி அவசியமற்றது..

நன்றி தம்பி..தவறு திருத்தப்பட்டது

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

அய்.. குழந்தை ரைமிங்கா பாடுது டோய்... ஹி ஹி

ஹி ஹி ஹி ஹி......

ரேவா சொன்னது…

siva கூறியது...

ஹஹஹா:)

ஏன் சிரிக்கிற

ரேவா சொன்னது…

siva கூறியது...

ஹஹஹா:செம தாட் ரேவ் )//எப்படிய் உசுபெத்துங்க அக்கா ....சும்மாவே கவிதை கதை படிக்கும்....ம் வாழ்த்துக்கள் ரேவதி.

நன்றி...நன்றி...நன்றி...

ரேவா சொன்னது…

பலே பிரபு கூறியது...

லேடி வைரமுத்து தமிழகத்துக்கு ரெடி.

என்ன வச்சு காமெடி பண்ணுறேன்களா? நன்றி சகோ உங்கள் வருகைக்கு

ரேவா சொன்னது…

சே.குமார் கூறியது...

மிக அருமை!

குழந்தையின் ஏக்கம் அப்படியே வரியாக...

நன்றி சகோ

ரேவா சொன்னது…

siva கூறியது...

பதிவுலகம் கண்ட கவிதை தாயே
நீ எழுதிய கவிதைகண்டு கண்ணில்
நீரே

உன் பதிவுக்கும் கமெண்ட்டு போட்டுட்டேன்
இன்ட்லிக்கும் ஓட்டு போட்டுட்டேன் தாயே...

நன்றி சிவா..உன் மறுமொழி அத்தனைக்கும்

ரேவா சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

அழகான நச் கவிதை....ஏக்க பெருமூச்சின் உச்சம்!

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

கந்தசாமி. கூறியது...

////இரவு வரும் போது போகுறா,
பொழுது விடியும் போது தூங்குறா,
அவள் உடம்ப இரும்பாக்கி உழைக்கிறா,
ஆசையாய் அவ மடிசாஞ்சா,
ஆயாகிட்ட போகச்சொல்லி அனுப்புறா,/// தாய் பாசத்துக்காய் ஏங்கும் ஒரு குழந்தையின் தவிப்பு .. கவிதை அருமை
வரிகள் சந்தத்துடன் அமைந்துள்ளது..

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

அட்டகாசம் ரேவா :-) தேசிய விருதுக்கு இந்தக் கவிதையை அனுப்பி வச்சிடுவோமா?? :-)

எனக்கு பல வரிகளை படிக்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஆனால், அதே நேரம் மனதில் ஒரு வலியும். உங்கள் கவிதைக்கு கிடைத்த வெற்றி இதுவே :-)

இப்ப வைரமுத்துவையும் டார்கட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா ;-) யாரையும் விட்டு வைக்கிறதா இல்ல போல ;-)

ஹ ஹ அவர டார்கட் பண்ணமுடியுமா நண்பா...சும்மா என் விருப்பத்தை பதிவு செய்தேன்...வழக்கம் போல உன் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் நன்றி நண்பா

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash கூறியது...

ஹா..ஹா... சூப்பரு

நன்றி நன்றி தமிழ்வாசி

ரேவா சொன்னது…

ரியாஸ் அஹமது கூறியது...

நல்லா இருக்கு

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

கல்பனா கூறியது...

அருமையான யோசனை டா ரேவ் ., படிச்சதும் கண்ணீர் வந்துருச்சு

:-(

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

கவிதை கலக்கல்.. av@vikatan.com க்கு சொல்வனம் என டைட்டில் இல் பகிரவும்.. செலக்ட் ஆக வாழ்த்துக்கள்

நன்றி சகோ நீங்கள் சொன்னதுபோல் முயற்சிக்கிறேன்

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

>>காசு பணம் எல்லாம் இருக்குது,
அது என் பாசத்த உன்கிட்ட குறைக்குது...
பணம் கொடுத்து நீ வாங்குன,

டச்சிங்க் லைன்ஸ்

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

இன்றை சமூகத்தின் ஏக்கம் தங்கள் கவிதையில் மிளிர்கிறது...

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

நிரூபன் கூறியது...

வணக்கம் சகோ,
இன்றைய இயந்திர உலகில் பெற்றோரால் கவனிப்பாரற்றிருக்கும் குழந்தைகளின் நிலயையினையும்,
ஒரு தாய் தன் மகவினைக் காப்பகத்தில் விட்டு விட்டு வேலைக்குச் செல்லுவதால், அப் பிஞ்சு உள்ளத்தில் உருவாகும் ஏக்கம் நிறைந்த- பாசம் பற்றிய ஆதங்கம் கலந்த கவிதையினையும்,
எங்கே நாம் போகின்றோம் எனும் கேள்விக் குறியினை மனதினுள் விதைத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

வாங்க சகோ நலமா? நம் பக்கம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி, அதோடு நீண்ட நாள் கழித்து என் தளத்தில் உங்கள் பின்னூட்டம் மகிழ்வைத் தந்தது...தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...

//காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு,
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு..
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?நல்லா இருக்கு

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ... தொடர்ந்து வாருங்கள்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் ரேவா...

அதெப்படி இவ்வளவு கமெண்ட் வாங்குற ரேவா...

நாங்களும் தான் கவிதை எழுதறோம்... ம்ம்ம்.. முகராசி மாதிரி எழுத்துராசியும் வேனும் போல.... :)

கோகுல் சொன்னது…

அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..
\\
இன்றைய பல குழந்தைகளின் ஏக்கம் இது.
பகிர்வுக்கு நன்றி

சேனைத் தமிழ் உலா சொன்னது…

வலிகள் நிரம்பிய வரிகள் கொண்டு எழுதிய கவிதை இதை ரசிக்க எங்களுக்கும் வாய்பை கொடுத்தது ஒரு நல்உள்ளம் உங்களின் கவிதை சேனைத் தமிழ் உலாவில் பகிர்ந்து ரசித்து உங்களின் இல்லம் நாடிவந்தேன் நன்றி சொல்ல.
உங்களின் எழுத்து இன்னும் தொடர வாழ்த்துகிறேன்.

ரேவா சொன்னது…

She-nisi கூறியது...

வாழ்த்துக்கள் ரேவா...

அதெப்படி இவ்வளவு கமெண்ட் வாங்குற ரேவா...

நாங்களும் தான் கவிதை எழுதறோம்... ம்ம்ம்.. முகராசி மாதிரி எழுத்துராசியும் வேனும் போல.... :)

ஹ ஹ அப்படியெல்லாம் எந்த ராசியும் கிடையாது நண்பா...நட்போடு இங்கே வலம் வந்தால், வந்திடும் நல் ராசி... ஹி ஹி....மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

கோகுல் கூறியது...

அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..
\\
இன்றைய பல குழந்தைகளின் ஏக்கம் இது.
பகிர்வுக்கு நன்றி

மிக்க நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும், அன்பான மறுமொழிக்கும்...தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

சேனைத் தமிழ் உலா கூறியது...

வலிகள் நிரம்பிய வரிகள் கொண்டு எழுதிய கவிதை இதை ரசிக்க எங்களுக்கும் வாய்பை கொடுத்தது ஒரு நல்உள்ளம் உங்களின் கவிதை சேனைத் தமிழ் உலாவில் பகிர்ந்து ரசித்து உங்களின் இல்லம் நாடிவந்தேன் நன்றி சொல்ல.
உங்களின் எழுத்து இன்னும் தொடர வாழ்த்துகிறேன்.

நன்றி நேற்று என் தள முகவரியை உங்கள் தளத்தில் பகிர்ந்ததில் இருந்து, எனக்கு இந்த கவிதைக்கு அதிக பார்வையாளர்கள் வந்திருக்கின்றனர்....என் தளமுகவரியை அங்கே பகிராமல் இருந்தால், இது எங்கனம் சாத்தியம்...முதலில் அதற்க்கு மிக்க நன்றி.இயன்றவரையில் தமிழால் இணைந்திடுவோம்...உங்கள் வருகைக்கும், மனமார்ந்த கருத்துரைக்கும் மிக்க நன்றி...உங்களைப் போன்ற நண்பர்களின் வருகையை நோக்கியே ரேவா கவிதைகள்...............

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..
\\.................

ஒவ்வொரு வரிகளும் மனதை கனக்கின்றன ரேவா அருமையான கவிதை

இந்திரா சொன்னது…

மழலையின் ஏக்கம் மனதை நெருடுகிறது.
நல்லதொரு பகிர்வு.
நன்றி.

Praveenkumar சொன்னது…

பாசத்துக்கு ஏங்கும் குழந்தையி்ன் தவிப்பும், குடும்பத்தை சுமக்கும் தாயின் பரிதவிப்பையும் விளக்கும் மிகவும் அருமையான பாடல்வரிகள். இந்த பாடல்கேட்டது இல்லை. ஆனால் நீங்க பகிர்ந்ததன் மூலம் அறிந்தேன். மிகவும் பிரமாதமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.