உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 4 ஜூலை, 2011

அவன் நினைவோடு நான்....





            அடர் இருளில், யாருமற்ற சாலையில், என் கைகளில்  பத்து விரல்கள் முளைத்த நேரம்....ஆம் என் அருகில் அவன்.....இருளோடு பயம் கொண்ட நானே, அவன் இருக்கும் நினைவால் இறுமாப்போடு வர, சிறு குழந்தைப் போல, பயம் கொண்டு என் கரம் பற்றிய அந்த நேரம், நட்பின் கதவினை உடைத்து எனக்குள் காதல் பிறந்த தருணம் அது....

       அந்த இருளுக்குள்ளும், என் இதயத்தில் சந்தோச இடியோசை....இந்த நிமிடம் இப்படியே முடிந்துவிட உள்ளுக்குள் மணியோசை...ஏதாவது பேசுவான் என்று நினைத்து, படபடக்கும் அவன் விழியை கவனிக்கையில் உணர்ந்தேன்...களவு போனது நான் மட்டும் அல்ல, அவனும் தான் என்று....

            என் விருப்பம் சொல்ல நினைத்த நேரத்தில் எல்லாம், ஏதோ ஒன்று தடுக்க, தப்பி பிழைத்தேன் நட்பின் முகவரியில்....இன்று அவன் கைத்தலம் பற்றிய நேரம்....மணவறைக் கோலங்கள் கண்ணில் தெரிய, சொல்லத் தெரியா சந்தோஷம் கொண்டேன்...

              இதுவரை பயணித்த பாதை, இன்று  புதிதாய் தோன்றியது  போல் உணர்வு...இதுவரை கடிந்து கொண்டே சென்ற, என் வீதியின் நீளம், இன்று சுகமாய் தெரிந்தது...எப்போதும் குலைத்து பயமுறுத்தும் நாயின் சப்தமும், சங்கீதமானது ..கண்ணில் பட்டதை எல்லாம் ரசித்தேன்...இன்றே புதிதாய் பிறந்ததாய் நினைத்தேன்..இதுவரை முளைக்காத சிறகெல்லாம், இன்றே முளைத்ததாய் உணர்ந்தேன்...

           அவன் செல்லும் நேரம் வந்தது....கைபிடிக்குள் இருந்த காதல், நட்பாய் மாறி நலம் விசாரித்து சென்றது...பத்திரமாய் செல்..போனதும் எனக்கு போன் பண்ணு...என்ற வார்த்தையில், விழித்துக் கொண்டது என் கனவு...இம்ம்ம் என்று பதில் சொல்லி, அவன் வீடு கடந்து நடந்தேன்...ஓசைகள் அற்ற வீதி, காற்றோடு கலந்து வரும் மண் வாசம், துளி துளியாய் கோலமிட ஆயத்தமான மழை,  அழகாய் தெரிந்த தனிமை, எல்லாம் சேர்ந்து அவன் நினைவோடு மறுபடியும் பயணப் படவைத்தது...

            என் வீடும் வந்தது...அம்மாவின் அன்பும், அப்பாவின் கரிசனமும், தம்பி, தங்கையின், சண்டையும் இன்று அந்நியமாய் தெரிந்தது....வெட்க்கித்து, இந்நிலையிலிருந்து மீள நினைத்தேன்....மீட்டிய வீணையின் நாதமாய், என் தலையணை அருகில் இருந்த பொம்மையை பார்க்கையில், பற்றி எரிந்தது அவன் நினைவுகள்...அவன் தந்த பரிசோடு, அவன் ஸ்பரிசம் கண்டு, அதோடு உறவாடினேன்....இரவில் அனைவரும் உறங்க, நான் மட்டும் விழித்திருக்கிறேன் காதலோடு....

            பொழுதும் புலர்ந்தது...இதுவரை நான் பார்க்காத சூரியன், என்னை புதிதாய் பார்த்து சிரித்தான்...சிட்டுக் குருவிகளும், மைனாக்களும் சத்தம் இடும் ஓசைகள் சங்கீதமானது...வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்களும், புன்னகையோடு அவன் வாசம் தந்தது... அவன் வாசம் தந்த பூக்களை சூடிக் கொண்டு,  சென்றேன்....புன்னகையோடு....

          அருகில் வந்தவன், நேற்று போனதும் ஏன் மெசேஜ் பண்ணல, என்ற அன்பான வார்த்தையை உதிர்க்க, பதில் சொல்ல தெரியாமல், அவன் விழி மொழிகள் வாங்கிக் கொண்டு, பதில் பேசாமல் இருந்தேன்..இருவருக்குள்ளும் இருந்திடும் காதலை உணர்கிறோம் என்றாலும், யார் முதலில் சொல்வது என்ற தயக்கமே, தண்டவாளமாய் நீள, நட்பின் பெயரில் இணைந்தே இருந்தோம்...

              ஓர் மாலை கோவிலுக்கு செல்வதாய் முடிவு செய்து, இந்த நட்புக்கு முடிவு கட்டிவிட, இருவரும் நினைத்தோம்....கோவிலுக்கு சென்று வழக்கம் போல், அர்ச்சனை செய்ய, அர்ச்சனை டிக்கெட் வாங்கி  வர சென்றவன், சாமி பெயருக்கு பதில், எங்கள் இருவரின் பெயரையும் எழுதிக் கொண்டு வந்தான்...அதுவரை பட படத்துப் பேசிய இதழ்கள், மௌனப் புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தது அவனிடம்...கோவில் பூசாரியும், எங்களை தம்பதியராய் நினைத்து, கடவுள் மாலையை எங்களுக்கு சூட, கடவுளின் தீர்ப்பும் நாங்கள் இணைவதே என்பதைப் போல் உணர்ந்தோம்...

           கோவிலை விட்டு வெளியே வந்தாலும், இருவர் மனமும் சந்தோஷத்தில், பேச வார்த்தைகள் தேடிக் கொண்டிருந்தது...அவன் சிந்தும் வெட்கப் புன்னகையை உள்வாங்கி, நானும் புன்னைகையை அவனுக்கு பதிலாய் தந்தேன்...கடவுளின் ஆசிர்வதமாய். சில மழைத்துளிகள் எங்கள் கைகளில்...

           நண்பர்களாய் இருந்தவர்களை, காலம் காதலர்களாய் மாற்றியது...காதலோடு அவன் தந்த அன்பு மொத்தத்தையும் ஆசையோடு பருகி வந்தேன்...விதி என்னும் வில்லன் என் வழி வந்து, எனக்கும் அவனுக்குமான இந்த பயணத்தை, தூரமாகிப் போடுவான் என்று கனவிலும் அறியேன்...

          எங்கள் பிரியம் இருவர் குடும்பத்திலும் தெரிய, அவர்கள் தரும் முடிவிற்க்காய் காத்திருந்தோம் காதலோடு...இறுதியில் சாதி என்னும் வில்லன், சிம்மாசனமிட்டு அமர்ந்தான் எங்கள் காதலின்  முன்னே... பின் இருவரும் சிறைபடுத்தப்பட்டோம், எங்கள் காதல் நினைவுகள் முன்னே.  இந்த பிரிவு தற்காலிகமானது என நான் நினைத்தாலும், அவனை விடுத்து, இயங்குதல் என்பது இயலாத செயல் என்று அவனும் அறிவான்...

          எப்படியும்  அவனோடு பேசிவிட நினைத்து, அவன் அலுவலகம் சென்றேன், காதலின் அன்பை அணு அணுவாய் பருகி வந்தவர்கள், நீண்டநாள் சந்திப்பிற்கு பின், பேச வார்த்தைகள் அன்றி, கண்ணீரில் நலம் விசாரித்தோம்.இணைந்து வாழ்வது என்றால், பெற்றோரின்  சம்மதத்துடனே இருவரும் இணைவது, இல்லையேல் இருக்கின்ற நிலையில், நிலையாய் இருப்பது என்று உறுதி வாங்கி, திரும்பி வந்தேன், எங்கள் மாறாக் காதலோடு..

         .எங்களின்  இந்த பிரிவு, சாதி என்னும் கண்ணுக்குத் தெரியா கௌரவப் பேயால் வந்தது... அந்த கௌரவப் பேய்கள் பிடித்தும் ஆடும் உறவுகளை, எங்கள் உண்மைக் காதலின் வலிமை மாற்றும், என்று நினைத்து அமைதிகாத்தோம்...இந்த காத்திருப்பில், அவனை விடுத்து,அவன் குரல் மொழிகள் கேட்காது,  நீளும் என்  இரவுகளில், நீங்காத அவன் நினைவுகள், என் தனிமையை சுட்டெரிக்கும் என்றாலும் .. என் அருகில் அவன் இல்லை என்று, நினைக்கும் பொழுதுகளில், என் அருகில் அன்பு சிம்மாசம் இட்டு, நினைவுகளில் காதல் செய்வான்...

         சின்ன சின்ன சண்டையின் போது ஏற்படும் பிரிவுகளின் காத்திருப்பு  எல்லாம்,  சமாதானம் எனும், அவன் அன்பான காதல் மூலம் நிரப்பப் படும்...இன்று?.... இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும், உன் கைபிடிக்க..ஆனாலும் உனக்கான இந்த காத்திருப்பிலும், வலி கலந்த சுகம் இருக்கத்தான் செய்கிறது... .என் பாசம் மொத்தத்தையும் ஒன்றாய் திரட்டி, நான் காதல் செய்த காதலனே, நீயில்லாது, பிடித்தங்கள் இல்லை என்பதை எப்படிப் புரியவைப்பேன், என் உறவுக்கு...

             உருகி உருகி உயிர் தேய்ந்த பொழுதுகளில் கூட, சாதியால், நம் அன்பை, புறம் தள்ளிய, நம் உறவுக்களுக்கு எப்படிப் புரியவைப்பது..என் உயிர் நீ என்றும், உன் உயிர் நான் என்றும்..

        ஒவ்வொரு தொடக்கத்தின் போதும், அதற்கான முடிவும் எழுதப்படுமாம்..நம்மக்கான முடிவும் வந்தது, உன் பெற்றோர், வேற திருமணம் செய்ய சொல்லி, வற்புறுத்துவதாகவும், நீ அதை தவிர்த்து  வருவதாகவும், உன் நண்பன் என்னிடம் சொன்ன நேரம், மரணம் தரும் வலி என்ன என்பதை உணர்ந்தேன், முதல் முறை....ஒரு முறை உன்னிடம் பேசிவிட நினைத்து, உன் நண்பனிடம் உன்னை வர சொல்லிவிட்டு உன் வருகைக்காய் காத்திருந்தேன், நம் காதல் நினைவிடத்தில்....

         உன்னை முதல் முதலில் காதலனாய், எனக்கு காட்டிய,  இடம் அல்லவா..என் காதலுக்கான கருவறை அல்லவா அந்த இடம்....அங்கே இருக்கையில், ஒரு வித அமைதியை இருவரும் உணர்வோம்...இன்று, கண்ணீர் பெருக்கெடுக்க, காரணம் புரியாமல் காத்திருக்கின்றேன்,   நீ தரும் பதிலுக்காய்...வெகு நேரம் கழித்து, வந்தவன் .சாதிக்காய், புறம் தள்ளப்பட்ட நம் காதலை சாதிக்க, மரணம் மட்டுமே வழி என்றான்.. சாவதென்று ஆன பின், அனைவரையும் எதிர்த்து வாழலாம்.  நம் காதலை, நாம் வாழும் வாழ்க்கையில், அவர்களுக்கு புரியவைக்கலாம்...சாவது என்பது முட்டாள் தனமல்லவா? என்று அவனிடம் உரைத்தாலும், ஏற்கனவே ஒரு முடிவோடு வந்தவன், என் முடிவுக்குள் வரமறுத்தான் என்பதை அவன் பார்வையில் உணர்ந்தேன்...

            மரணம் என்ற வார்த்தை மிரட்டல், தைரியமில்லாதோர், தான் காரீயம்   சாதிக்க பயன்படுத்தும் வார்த்தை, என்று அவன் சொன்னது எனக்கு நினைவு வர, சாவதென்று முடிவெடுத்துவிட்டால், இருவரும் ஒன்றாய், உறவை எதிர்த்து, வாழ்ந்து விடலாம், இல்லையேல், பெற்றவற்க்காய், தனித் தனியே பிரித்து போய், நமக்கான விருப்பங்களை சாகடித்து, அவர்களுக்காய், அவர்கள் விருப்பபடி வாழ்ந்து விடுவோம், என்று சொல்லி முடிப்பதற்குள், என்னிடம் அவன் எதிர்பாத்த பதில் வந்து விட்ட திருப்தியில், நானும் அதையே நினைத்தேன், என்று பதில் சொன்னவனின், முகம் பார்க்க முடியாமல் தலைகவிழ்ந்தேன்...

         கண்ணீர் என் காதல் நனைக்க, இருதயம் துடிக்க மறுக்க, உலகமே இருண்டதாய் ஒரு கணம் தோன்ற, என் வாழ்க்கை முழுவதும் வருவதாய் சொன்ன,  என்னவன் என்னை விலகிச் சென்றான்..எங்கள் காதல் ஆரம்பம் ஆன அந்த இடத்திலே, முடியும் என்று தெரியாமல் போனது...சிறு நேர அழுகைக்குப் பின், பயணப் பட்டேன் என் பாதையில், மழைத்துளி, என் கண்ணீர் மறைத்தது...இருவரின் காதல் பரிமாற்றத்தின் போதும், தோன்றிய மழை
நியாபகம் வந்தது...அன்று அட்ச்சதயாய்த் தெரிந்தது, இன்று நெருப்பு துண்டுகள்  மேலே பட்டது போல் சுட்டது, அவன் நினைவுகளுடன்.... 

        வாழ்க்கையில் காதல் மனிதனை பக்குவப்படுத்தும்..என் காதல், முதுகெலும்பில்லாத என்னவனின், இன்னொரு முகம் நான் அறிய காரணமாய் இருந்தது...விருப்பங்கள் எல்லாம், விருபுகின்ற ஒன்று கிடைக்கின்ற வரையில், என்பதும் புரிந்தது...

               அவனை மறத்தல் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை, என்று, உறவின் முன், அவனை மறந்ததாய், பொய்யாய் நடிக்க, காலம் எனக்கு காதலோடு, வாழ்வியலையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது...அவன் இல்லாத இடத்தில், அவன் நினைவுகள் என் நாட்களை நிரப்பிக் கொண்டு இருக்கிறது...அவனுக்கு விதிக்கப் பட்ட வாழ்க்கையோடு, பொய்யாய் ஒரு வாழ்க்கைப் பயணத்தை அவன் தொடங்க,  அவன் தந்த காதல் நினைவுகளுடன், இன்னொருவரை, அவன் உறவில் நிரப்ப விருப்பமற்று, அவன் காதல் நினைவுடன் நான்..

14 கருத்துகள்:

முத்துக்குமார் சொன்னது…

அருமை

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

கட்டுரையா? கவிதையா? சூப்பர் ரேவா....

sulthanonline சொன்னது…

ரேவா அசத்திட்டீங்க. ஆரம்பத்தில் அழகான காதல் கதையாக ஆரம்பித்து. பிறகு காதலின் சோகமான வலியை எழுதியிருந்தீங்க. கவிதையை உரைநடையில் எழுதியது போல் இருந்தது.superb

ஆனந்தி.. சொன்னது…

தங்கமே...அசத்துற...

சௌந்தர் சொன்னது…

நீ எழுதிய விதம் நல்லா இருந்தது, படிக்க படிக்க, மனம் ஏதோ சொல்கிறது..

சேர்ந்து சாவதற்கு பதில் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து விடலாம் அல்லது பிரிந்து விடலாம் என்பது நல்ல முடிவு தான்.

ஆனால் பிரிவு ஒவ்வொரு நாளும் மரணம்... !!!!!!

பெயரில்லா சொன்னது…

கவிதை சாயலில் ஒரு கதை ,

பெயரில்லா சொன்னது…

///பெற்றவற்க்காய், தனித் தனியே பிரித்து போய், நமக்கான விருப்பங்களை சாகடித்து, அவர்களுக்காய், அவர்கள் விருப்பபடி வாழ்ந்து விடுவோம், என்று சொல்லி முடிப்பதற்குள், என்னிடம் அவன் எதிர்பாத்த பதில் வந்து விட்ட திருப்தியில், நானும் அதையே நினைத்தேன், என்று பதில் சொன்னவனின், முகம் பார்க்க முடியாமல் தலைகவிழ்ந்தேன்...

//// சூழ் நிலையா சுயநலமா..!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையா எழுதியிருக்கீங்க. கடைசி பாராவில் மனசு கனக்கிறது... நடப்பவை நன்மைக்கே....

எவனோ ஒருவன் சொன்னது…

பாராட்ட வார்த்தைகள் இல்லை. அழ வைத்து விட்டீர்கள்....

Unknown சொன்னது…

பாராட்ட வார்த்தைகள் இல்லை. அழ வைத்து விட்டீர்கள்....// no no cry...
friend..

"hey revathi eppo paru unnala ellarum alaranga..sorry un pathivala.."

eppadi ellam pativu pota avlothan..&&*^&*JIKIsdf'''

Unknown சொன்னது…

ஆனந்தி.. கூறியது...
தங்கமே...அசத்துற...
//

hkum thangam vikira velaiyila..ethuveraiya...eppadiey usupethunga...

Karthikeyan Rajendran சொன்னது…

nallayirukku

நிரூபன் சொன்னது…

கவிதை கலந்த உரை நடையோடு, ஓர் சிறுகதை வடிவில் காதல் காவியமொன்றப் பகிர்ந்திருக்கிறீங்க. விரிவான பின்னூட்டங்களைப் பின்னர் வழங்குகிறேன். மன்னிக்கவும்.

Karthik சொன்னது…

Saadhi Villain, Petravarin virumthikaaga thiyagam.. Kaadhalai comedyaakum palarin convenientaana sappaikatugal.
kaadhalika thayavadharku munnal thorpadharku thayaragivittavargal ena thonrugiradhu..

sorry, If my comment was rude.. But trust me true Love is such a great space, so positive a vibe, so binding that failing in it is never an option.