உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 3 செப்டம்பர், 2011

காத்திருக்கிறேன்

  

பிரியம் தொலைத்த
உன் கேள்விக்கு  பின்னும்,
தொடர்கதையென தொடரும்
உன் மௌனத்தின் பின்னும்,
நீ எட்டித் தள்ளிய
பிரியத்தின் மிச்சங்கள்
எச்சங்களாய் போன பின்பும்,
விடுகதையென மாறி
விடைதெரியாமல் போன
நம் காதல்  காலங்கள்
கானலாய் போன பின்னும்,
என்னுள் தேங்கிய
உந்தன் நினைவுகள்
என்னை உன்னிடம் சேர்க்கும்
என்ற புரியா பிரியத்தில்
காத்திருக்கிறேன்
இந்த நிமிடம்..

17 கருத்துகள்:

Unknown சொன்னது…

அடடா என்னாமா காதல் சொட்டுது கவிதைல.....சூப்பருங்கோ சகோ!

rajamelaiyur சொன்னது…

அருமையான கவிதை

rajamelaiyur சொன்னது…

என்று என் வலையில்

விஜய் vs அஜித் யார் புத்திசாலி?

Unknown சொன்னது…

meeeeeeeeee the firstu..

Unknown சொன்னது…

என்ற புரியா பிரியத்தில்//வார்த்தை ஜாலம் இம் இம் நடக்கட்டும்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அசத்தல் கவிதை...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>நீ எட்டித் தள்ளிய
பிரியத்தின் மிச்சங்கள்

vaav வாவ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>என்னுள் தேங்கிய
உந்தன் நினைவுகள்
என்னை உன்னிடம் சேர்க்கும்
என்ற புரியா பிரியத்தில்


சேர வாழ்த்துக்கள் தோழி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

காதலுக்காக காத்திருக்கும் ஓவ்வொரு நொடியும் சுகமானது... உண்மையாக நேசித்து பிரிந்த காதலின் வலியும் சுகமானது...

உங்கள் வரிகளும் சுகம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

காதல் ரசம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது போங்க....!!!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

இந்த நிமிடமாவது நினைவுகள் சேர்ந்ததா?

SURYAJEEVA சொன்னது…

சொச்ச வார்த்தைகளில் புரியும்பிரியம்..பிரிந்திருக்கும் சமயங்களில்பெருகும்..

ரேவா சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

அடடா என்னாமா காதல் சொட்டுது கவிதைல.....சூப்பருங்கோ சகோ!

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்.....

ரேவா சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

அருமையான கவிதை


நன்றி நண்பரே :)

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் சகோதரி,
உணர்வுகள் சிதைக்கப்பட்ட பின்னும், உற்றவனோடு இணைந்து வாழ ஏங்கும் ஒரு பெண்ணின் உணர்வலைகளை இங்கே கவிதை பாடி நிற்கிறது.

எவனோ ஒருவன் சொன்னது…

கவிதை அழகு தோழி.

என்னைய சோகமா எழுதாதீங்கன்னு சொல்லிட்டு நீங்க மட்டும் இப்படி எழுதலாமா :-)