உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 5 செப்டம்பர், 2011

என்ன பிடிக்கும் இந்த தேவதைக்கு

தேங்க்ஸ் டு கூகிள்


மங்கிய  ஆடையோடு
ஒப்பனையற்ற முகத்தோடு,
சமையலறை நெடியோடு,
அலுக்காமல் அங்கும் இங்கும்
சுற்றிவரும்
என் வீட்டு தேவதையின்
புன்னகையில்
எங்கள் மனபாரம் குறைந்து போகும்...

அவரவர்க்கு பிடித்தம் என்ன
அது அவள் மட்டும் 
அறிந்த வித்தை..
அப்பாவின் பசியறிந்து,
தங்கையின் ருசியறிந்து,
தம்பியின் குணம் அறிந்து,
எந்தன் மனமறிந்து,
நளபாகம் செய்யும் பாங்கு
அவளுக்கே வாய்த்த ஒன்று...

எனக்கு பிடிக்கும் என்பதால்
சிவப்பு நிற புடவையையும்,
தம்பிக்கு பிடிக்கும் என்று,
நெற்றியில் குங்குமமும்,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
தலைநிறைய மல்லிகையுமாய் 
எங்கள் பிடித்தத்தை பற்றிய 
அவள் இதயத்தின் பிடித்தம்
இதுவரை நான் அறிந்ததில்லை...

எனக்கு பிடிக்கும் என்று
ரோஜா செடிவளர்க்க,
தம்பிக்கு பிடிக்கும்  என்று, 
தொட்டி மீன்களுக்கு பெயர் வைக்க,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
மாலைநேர தொலைக்காட்சி நிகழ்சிகளை
தியாகம் செய்ய, என 
எங்கள் விருப்பத்தை
அணு அணுவாய் ரசிக்கும்
எங்கள் குழந்தைத் தாய்க்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரை நாங்கள் அறிந்ததில்லை...


என் எதிர்கால உறவிற்காய்,
உறங்காமல் கனவு காணவும்,
எங்கள் வரும் காலம்
வளமாய் மாற
அம்மனுக்கு விரதம்
இருக்கவும்,
எங்கள் செல்லச் சண்டையில்
சமாதான தூதுவனாய் மாறவும்,
பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்கு
பசிக்கையில் உணவூட்டவும்
எப்படி முடிக்கிறது
இவளுக்கு மட்டும்....


நாங்கள் சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அழுது,
எங்கள் விருப்பத்தில் தன்
விலாசம் மறைத்த
என் தேவதைக்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரைத் தெரியவில்லை
எங்களுக்கு.....

16 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

அம்மாவை பற்றி எழுதிய கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு... உன் கவிதையிலே இது தான் டாப்..

Unknown சொன்னது…

கலக்கலான அன்புக்கவிதை சகோ!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தாயின் அரவணைப்புக்கு...
தாயின் அன்புக்கு..
தாயின் பாசத்திற்க்கு..
தாயின் பரிவுக்கு...

இந்த பூமியில் எல்லைகள் ஏது தோழி...

நெஞ்சம் நிறைகிறது கவிதை...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பல குடும்பங்களிலும்

காணக்கிடைக்கும் உண்மை

கவிதையின் அடிக்கருத்தியலாகப் பொதிந்துள்ளது.

அருமை.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பல குடும்பங்களிலும்

காணக்கிடைக்கும் உண்மை

கவிதையின் அடிக்கருத்தியலாகப் பொதிந்துள்ளது.

அருமை.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இன்று என் வலையில் ஆசிரியர் தினம் கொண்டாட அன்புடன் தங்களையும் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இன்று என் வலையில் ஆசிரியர் தினம் கொண்டாட அன்புடன் தங்களையும் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

பெயரில்லா சொன்னது…

உலகத்தின் கவிதை தோட்டத்தில்
அம்மாவிற்காய் பூத்த மற்றுமொரு கவிதை ரோஜா...

//அழுக்காமல் அங்கும் இங்கும்
சுற்றிவரும்///

அலுக்காமல் என்பதே சரி...

அம்மாவை ரசிக்கவைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் ரேவா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அம்மா என்றாலே அன்புதான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>என் தேவதைக்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரைத் தெரியவில்லை

kuzawdhaiyin குழந்தையின் முன்னேற்றம் தான் வேறென்ன?

நிரூபன் சொன்னது…

எதிர்பார்ப்புக்கள் ஏதுமின்றிப் பிள்ளைகளுக்காக வாழும்,
பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து செயற்படும் அன்னையின் பெருமைகளை,
அவளின் அன்றாட நகர்வுகளை,
பாசத்தின் இருப்பிடத்தை உங்களின் கவிதை தாங்கி வந்துள்ளது.

//

என்ன பிடிக்கும் இந்த தேவதைக்கு//

அன்னையின் நிழலில் ஆனந்தம் காணும் மகளின் உணர்வலைகளாக இங்கே...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அன்பு கவிதையும் சூப்பர், படம் செலக்சன் சூப்பரோ சூப்பர்

எவனோ ஒருவன் சொன்னது…

நாங்கள் சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அழுது,
எங்கள் விருப்பத்தில் தன்
விலாசம் மறைத்த
என் தேவதைக்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரைத் தெரியவில்லை
எங்களுக்கு.....

என்ன சொல்றதுன்னே தெரியல. ஒவ்வொரு வரியை வாசிக்கும் பொழுது என் அம்மா கண் முன்னே வந்து நின்றாள். அனைத்து வரிகளும் அருமை தோழி. பாராட்டுக்கள்.

நிகழ்வுகள் சொன்னது…

அம்மா என்றாலே சும்மாவா .. கவிதை அழகு ..

Nirosh சொன்னது…

அகிலத்தை நான் காண்பதட்காய் எனை அனுமதித்த சொர்க்க வாசல்.... அன்னையின் அன்பைப்போல அழகாக எனை வாரிச்சென்றது வரிகள்... வாழ்த்துக்கள்..>!

தனிமரம் சொன்னது…

அன்னையின் அரவனைப்பை அழகாய் சொல்லியிருக்கிறீங்க எனக்கும் பிடிக்கும் தேவதையை!