உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 21 செப்டம்பர், 2011

எத்தனை முறை



உன்னை மறந்துவிட்டதாய் 
இன்னும் எத்தனைமுறை
தான் பொய் சொல்வது 
என் தோழிகளிடம்...

இன்னும் எத்தனை முறைதான்
பொய் சொல்வது,
உன் நினைவு தரும் பொருட்கள்
என்னருகில் இல்லை என்று...

உன் கையெழுத்தில் 
நீ வடித்த கவிதை, 
என் கண்ணீரில் நனைந்ததை, 
உன்னிடம் கிளித்தெரிந்ததாய் 
சொன்ன பொய்களையே
இன்னும் எத்தனை முறை தான் சொல்வது...

இனியும் உன்னை நினைக்க
மாட்டேன் என்று மனதுக்குள் 
நினைத்துக்கொண்டே,
கட்டுபாடுகள் அற்று 
காகிதத்தில் உன் பெயரை 
கிறுக்கும் இந்த கிறுக்கிக்குள் 
நீ இல்லை என்று 
இன்னும் எத்தனை முறை 
எனக்கு நானே பொய் சொல்வது....

18 கருத்துகள்:

Unknown சொன்னது…

mee the firstuuuuuuuuuuu.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் முறை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>இன்னும் எத்தனை முறை
எனக்கு நானே பொய் சொல்வது..

வலிகள் உணர்த்தும் வரிகள்

Unknown சொன்னது…

இன்னும் எத்தனை முறை எனக்கு நானே பொய் சொல்வது....//எத்தனை முறை கேட்டாலும் சொல்ல வேண்டும்

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் அக்காச்சி,
படிச்சிட்டு வாரேன்,

நிரூபன் சொன்னது…

மறக்கத் தெரியாது நினைவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் உள்ளத்தின் உணர்வுகளை உங்களின் இக் கவிதை சொல்லி நிற்கிறது.

Astrologer sathishkumar Erode சொன்னது…

மனதை லேசாக்கும் வரிகள்?மனதை கனக்கவும் செய்கின்றன

Unknown சொன்னது…

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா....கவிதை வலியுடன் நச் சகோ!

SURYAJEEVA சொன்னது…

மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டே..

Harini Resh சொன்னது…

//உன்னை இன்றோடு மறப்பதை எண்ணி
என் நாட்குறிப்பில் குறித்து விட்டு
மறு நொடி பார்கிறேன்
அழகாய் கிறுக்கப்படிருக்கிறது உன் பெயர் //

அழகான வரிகள் ரேவா :)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கட்டுபாடுகள் அற்று
காகிதத்தில் உன் பெயரை
கிறுக்கும் இந்த கிறுக்கிக்குள்
நீ இல்லை என்று
இன்னும் எத்தனை முறை
எனக்கு நானே பொய் சொல்வது....

அழகான பொய்கள்!
கவிதைக்குப் பொய் அழகு!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை எழுதிய ரேவாவின் கைக்கு, வலி வளையல்கள் அனுப்புகிறேன்....

பெயரில்லா சொன்னது…

பிரிவின் வலிகளை வரிகளாக வடித்துள்ளீர்கள் ..அழகாக உள்ளது ..

எவனோ ஒருவன் சொன்னது…

அனைத்து வரிகளும் மிக அருமை. பொய் சொல்லவில்லை ;-)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வலி நிறைந்த கவிதை.
வாழ்த்துக்கள் ரேவா.

பெயரில்லா சொன்னது…

இன்னும் எத்தனை முறை
எனக்கு நானே பொய் சொல்வது..
எப்பவுமே பொய் சொல்ல முடியாது. இது தானே யதார்த்தம்...காதலில்...ம்...ம்......
வேதா. இலங்காதிலகம்.

Unknown சொன்னது…

கருத்துரை இட்ட அத்துணை நட்புக்கும் நன்றிகள்

Unknown சொன்னது…

கருத்துரை இட்ட அத்துணை நட்புக்கும் நன்றிகள்
//ITHU template comment...:)