
பல நேரங்களில்
எதையெதையோ நினைக்கிறது
மனது..
நினைத்த எல்லாவற்றையும்
சில தருணத்தில்
மறந்தும் விடுகிறது...
மறந்த ஒன்றும் நினைவுகளின்
சாயலில் மண்டியிட்டு அழுகிறது..
அழுகின்ற விஷயங்களை
தவிர்க்க துணிகின்ற நேரத்தில்,
மறந்தும் மறக்காமல்
வந்து விடுகிறது
உன் நினைவு...

வணக்கம் நண்பர்களே நலமா?......நட்போடு அனைவரும் நலமாய் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில், என் திருப்திக்காய் என் மனதில் செல்லரித்துக் கிடக்கும் விஷயத்தை என் எண்ணங்களுக்கு உட்பட்டு பதிய விரும்புகிறேன்....எத்தனையோ பதிவுகள் இந்த பதிவுலகில் வந்து எழுதியாகி விட்ட போதிலும், எல்லாம் ஒரு வட்டத்துக்குள் ஒழிய...

நெருங்கி நெருங்கி
வரும் இருட்டு,
கிட்ட கிட்ட உன் நினைவுகளை
கொண்டு வர,
உறக்கம் வரும் அந்த
அந்தி ஜாமத்திலும்
உன்னைப் பற்றிய
சிந்தனையில் லயித்துப்போகிறேன்
நான்....
இரவில்
கடிகார ஓசையையும்,
சுவர் பல்லிகளின் சத்தத்தையும்,
தூரத்தில் குறி சொல்ல வந்திருக்கும்
சாமக்கோடங்கியின் ஓசையையும்
உள்வாங்கிக்கொண்டே
ஆளரவமற்ற...

முதல் பார்வையில்
உருவான ஒன்று,
மறக்கமுடியாத மறுக்கமுடியாத
நிகழ்வாகிப் போனது..
சிறு புன்னகையில் தொடங்கி,
மௌனத்தில் புரிந்து,
விழி மொழியில் பேசிய
அழகியத் தருணங்கள் அவை...
விடவேண்டும் என்று நினைத்தும்
விழக்கூடாது என்று நடித்தும்,
விருப்பத்தை மறைத்தும்,
உள்ளிருக்கும் காதலை
அணுஅணுவாய் நான் மட்டும்
ரசித்த...