உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 1 அக்டோபர், 2011

போதும் எனக்கு....

முதல் பார்வையில்
உருவான ஒன்று,
மறக்கமுடியாத மறுக்கமுடியாத
நிகழ்வாகிப் போனது..
சிறு புன்னகையில் தொடங்கி,
மௌனத்தில் புரிந்து,
விழி மொழியில் பேசிய
அழகியத் தருணங்கள் அவை...
விடவேண்டும் என்று நினைத்தும்
விழக்கூடாது என்று நடித்தும்,
விருப்பத்தை மறைத்தும்,
உள்ளிருக்கும் காதலை
அணுஅணுவாய் நான் மட்டும்
ரசித்த நேரம் அது...
புரிந்தும் புரியாத உன் சிரிப்புகள்,
கவிபேசிய உன் மொழிகள்,
எதிர்பாரா உன் அக்கறைகள்,
எதிர்பார்த்து ஏமாந்த தருணங்கள்
கு
ந்தையை பேணுதல் போன்ற
உன் அன்பு,
என்று எனக்கே எனக்காக நீ,
இனி என்ன வேண்டும் எனக்கு
எல்லாமுமாய் நீ என்னோடு
இருக்கையில்,
உன்னோடு
வாழும் இந்த ஆனந்த காலங்களே
போதும் எனக்கு....

26 கருத்துகள்:

kavithai (kovaikkavi) சொன்னது…

நல்ல காதலைச் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நல்லதொரு கவிதை படித்தேன்..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super Kavithai

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Tamilmanam first vote

Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…

அழகான உருக்கமான கவிதை ரேவா!!!

siva சொன்னது…

அழகான உணர்வுகள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை நெஞ்சை தொடுகிறது....!!!

kobiraj சொன்னது…

அழகான கவிதை சூப்பர்

Rathnavel சொன்னது…

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உள்ளத்தைத் தெடும் கவிதை...

வாழ்த்துக்கள்...

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்காச்சி,

போதும் எனக்கு: நினைவுகளோடு, அவனைப் பற்றிய எண்ணச் சுமைகளோடு வாழ்வதே சுகம் எனும் உண்மையினை உரைத்து நிற்கிறது.

சே.குமார் சொன்னது…

அழகான கவிதை.

வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நல்லதொரு கவிதை படித்தேன்..

ஆமினா சொன்னது…

//விடவேண்டும் என்று நினைத்தும்
விழக்கூடாது என்று நடித்தும்,
விருப்பத்தை மறைத்தும்,
உள்ளிருக்கும் காதலை
அணுஅணுவாய் நான் மட்டும்
ரசித்த நேரம் அது..//

அருமையான வரிகள்

திரும்ப திரும்ப இந்த வரிகளை படித்தேன்.

ரேவா சொன்னது…

கருத்திட்டு வாழ்த்திய நல் நட்புகள் அத்துணை பேர்க்கும் நன்றிகள் :)

எவனோ ஒருவன் சொன்னது…

நல்லா இருக்கு ரேவா.. குறிப்பாக இந்த வரிகள்,

விடவேண்டும் என்று நினைத்தும்
விழக்கூடாது என்று நடித்தும்,
விருப்பத்தை மறைத்தும்,
உள்ளிருக்கும் காதலை
அணுஅணுவாய் நான் மட்டும்
ரசித்த நேரம் அது...

எவனோ ஒருவன் சொன்னது…

இனி என்ன வேண்டும் எனக்கு
எல்லாமுமாய் நீ என்னோடு
இருக்கையில்,
உன்னோடு
வாழ்ந்த அந்த ஆனந்த காலங்களே
போதும் எனக்கு....

நான் இப்படித் தான் படித்தேன் :-)

bala சொன்னது…

அன்பில் வீழ்ந்த ஒரு இதயத்தின் நினைவுகள் வாழும் காலத்து கவிதை நன்று

பெயரில்லா சொன்னது…

நன்றாக உள்ளது...

எப்பவும் காதல் ஏக்க கவிதைகள் தானா?!!

சே.குமார் சொன்னது…

//புரிந்தும் புரியாத உன் சிரிப்புகள்,
கவிபேசிய உன் மொழிகள்,
எதிர்பாரா உன் அக்கறைகள்,
எதிர்பார்த்து ஏமாந்த தருணங்கள்//

நல்லா இருக்கு ரேவா.

Mathi சொன்னது…

உண்மையில் காதல் அழகானது வாழ்த்துக்கள்

shankar சொன்னது…

குட் ஒன் .....,

shankar சொன்னது…

போன பதிவோட இது குட் ,,

siva சொன்னது…

LAST LINES TOUCHING REVA.

nalla erukku..

enga blog pakam ellam neenga varamatenga..

erungathalum unga blogku naanga varuvom..

because you are great..poet.

siva சொன்னது…

LAST LINES TOUCHING REVA.

nalla erukku..

enga blog pakam ellam neenga varamatenga..

erungathalum unga blogku naanga varuvom..

because you are great..poet.

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் கவிதை அருமை