உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 3 டிசம்பர், 2011

காணாமல் போன அப்பா....
இப்போதெல்லாம் அப்பாவின்
அடையாளம் காணவே இல்லை...

தொண தொணக்கும் வாயோடு
தான் வளர்ந்த விதத்திற்கும்,
நான் வளரும் விதத்திற்கும் ,
உள்ள வேறுபாட்டை சொல்லி சொல்லி
மெய்சிலிர்க்கும் அப்பா
இப்போ இல்லவே இல்லை...

அஞ்சுக்கும் பத்துக்கும்,
அறைவேளை உணவிற்கும்,
ஒதுங்க ஒரு சாண் இடத்திற்க்குமாய்
பாடுபட்டு கரைசேர்ந்த
தன் வாழ்வில்,
நான் அலச்சியமாய் கடக்கும்
ஒவ்வொரு விஷயத்திலும்
உள்ள கஷ்டத்தை சொல்லித் தந்த
அப்பா இப்போ இல்லவே இல்லை...

அழுகின்ற நேரத்தில்,
அரவணைக்கும் - என் 
ஆண் தோழனாய்,
விழுகின்ற நேரத்தில்,
தன் நிழல்கொடுத்து
இளைப்பாறுதல் தந்த
என் நிழலாய் எனைக் காத்த
அப்பா இப்போ இல்லவே இல்லை... 

நான் பெறுகின்ற ஒவ்வொரு
வெற்றியையும்,
தன் வெற்றியாய் வாஞ்சையோடு
கொண்டாடும் அப்பா
இப்போ இல்லவே இல்லை....

என் வசதிக்காய்
தன் வாய்ப்பை சுருக்கிக்கொண்டு
அதிலும் சுகம் கண்ட அப்பா
இப்போ இல்லவே இல்லை...

அப்பாவிற்கும், பெண்ணிற்க்குமாய்
வகைபடுத்தபட்ட வாழ்வில்
நட்பாய் புதுவரையறை
வகுத்து,
நட்போடு ஒரு தோழனாய்
வலம் வந்த என் அப்பா
இப்போ இல்லவே இல்லை..


ஆம் இப்போதெல்லாம்
அப்பாவின் அடையாளம்
இல்லவே இல்லை...
வயது ஆக ஆக ஒரு குழந்தையாய்
மாறிப்போன அப்பாவிடம்
இப்போதெல்லாம்
என் அப்பாவிற்க்கான  அடையாளம்
இல்லவே இல்லை...

எனக்கு வாழ்க்கைமுறையை
சொல்லித்தந்து,
 அதில் என் குழந்தையாய்
பயணிக்கும்
என்  குழந்தை (அப்பா) யி(வி)டம்
என் அப்பாவின் அடையாளம்
காணவே  இல்லை....இந்த கவிதைக்கு முதல் ரசிகன் என் அப்பா, இந்த கவிதைய படிச்சதும் எனக்கு பிடிச்ச டெடி பியர்  கிபிட் பண்ணுனாரே...இத எதுக்கு சொல்றேன்னு பாக்குறேங்களா? எல்லாம் ஒரு காரணமாத்தான்.....

14 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

அடையாளம் தேடும் கவிதை அருமை.

விக்கியுலகம் சொன்னது…

அருமையா சொல்லி இருக்கீங்க...அப்பா மறக்க முடியாத விஷயம்!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

சபாஷ் ரேவதி

தோளுக்கு மீறி வளர்ந்தாலும் அவர் நமக்கு அப்பாதான் அவருக்கு நாம் குழந்தைதான்..

வயதின் செறிவு காரணமாக அவர் நம் கடைக் குழந்தையாதல் காலப்பிரட்சியே அன்றி அது அவரின் குற்றமல்ல

அப்பா அப்பாதான்..

siva சொன்னது…

:) nalla erukkunga.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

:):):)

மழை சொன்னது…

அஞ்சுக்கும் பத்துக்கும்,
அறைவேளை உணவிற்கும்,
ஒதுங்க ஒரு சாண் இடத்திற்க்குமாய்
பாடுபட்டு கரைசேர்ந்த
தன் வாழ்வில்,
நான் அலச்சியமாய் கடக்கும்
ஒவ்வொரு விஷயத்திலும்
உள்ள கஷ்டத்தை சொல்லித் தந்த
அப்பா இப்போ இல்லவே இல்லை...///

அருமையான வரிகள் கலக்கிட்டீங்க:)

ரேவா சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

அடையாளம் தேடும் கவிதை அருமை.

நன்றி திரு முனைவர்.இரா.குணசீலன் அவர்களே :)

ரேவா சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

அருமையா சொல்லி இருக்கீங்க...அப்பா மறக்க முடியாத விஷயம்!

உண்மைதான் சகோ :)

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

சபாஷ் ரேவதி

தோளுக்கு மீறி வளர்ந்தாலும் அவர் நமக்கு அப்பாதான் அவருக்கு நாம் குழந்தைதான்..

வயதின் செறிவு காரணமாக அவர் நம் கடைக் குழந்தையாதல் காலப்பிரட்சியே அன்றி அது அவரின் குற்றமல்ல

அப்பா அப்பாதான்..

உண்மை தான் வசந்த் அப்பா அப்பாதான்...ஆனாலும்.....?....நன்றி நண்பா உன் மறுமொழியில் தெளிவு கண்டேன்.......:)

ரேவா சொன்னது…

siva கூறியது...

:) nalla erukkunga.

:0 nandringa :)

ரேவா சொன்னது…

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) கூறியது...

:):):)

இந்த புன்னகைக்கு பதில் என்னவோ?....யார்கிட்ட தான் கேட்க?

ரேவா சொன்னது…

மழை கூறியது...

அஞ்சுக்கும் பத்துக்கும்,
அறைவேளை உணவிற்கும்,
ஒதுங்க ஒரு சாண் இடத்திற்க்குமாய்
பாடுபட்டு கரைசேர்ந்த
தன் வாழ்வில்,
நான் அலச்சியமாய் கடக்கும்
ஒவ்வொரு விஷயத்திலும்
உள்ள கஷ்டத்தை சொல்லித் தந்த
அப்பா இப்போ இல்லவே இல்லை...///

அருமையான வரிகள் கலக்கிட்டீங்க:)

நன்றி மழை நண்பரே :)

mum சொன்னது…

ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் ஹீரோ அப்பா தான்...
அப்பா கவிதைக்கு நன்றி தோழி !!!!

எவனோ ஒருவன் சொன்னது…

கவிதை நல்லா இருக்கு ரேவா.

சரி அடுத்து அம்மாகிட்ட இருந்து என்ன ஆட்டைய போடாலாம்னு பிளான் பண்ணிருக்கீங்க :-)