உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 19 டிசம்பர், 2011

மொத்தமாய் காதல் ♥♥♥
என்னுள் 
மோதித்தெறிக்கின்ற
உன் பார்வையில் எல்லாம்
அணு அணுவாய்
காதல்....


தேங்கிய நீரிலும்,
தெரிகின்ற நிலவதினில்
உன் முகம் காணும்
என் கண்களுக்குள் 
காதல்....


உன் விழி ஈர்ப்பில்
விதைக்கப்பட்டு,
எனக்குள் கருத்தரிக்கும்
என் கவிதைக்குள்ளும்
காதல்....


இருண்டு கிடக்கும்
இளமையதில்,
ஒளிந்து கிடக்கும் 
ஆசைகளை 
வெளிச்சமிட்ட உன் 
வெட்கப் புன்னகையில்
காதல்....


பேசி பேசி 
விடிந்த பின்னும்
தீராத வார்த்தைகளில்
இன்னும் இன்னும் தீராத
காதல்....


உன் மௌன கவியை
மொழிபெயர்க்கும்
என் செல்லக் கம்பனாய்
காதல்....


உன்னோடு பேசுவதாய்
எண்ணி, எனக்குள்ளே
பேசிக்கொள்ளும்
நேரத்தில் வந்துவிழும்
கவிதைகள்
காதல்....


கருமேகம் சூழ
தோகை விரித்தாட
காத்திருக்கும்,
வண்ணமயில் போல,
உனக்கான காத்திருப்புகள்
அத்தனையும் 
காதல்...


நீண்ட பயணம் அதில்
வழித்துணையாய்
வந்திட்ட 
உன்  நினைவுகளில் எல்லாம்
காதல்....


ஏதோ ஒரு தருணத்தில்,
என்னைக் கடக்கும் 
எல்லாரும் நீயாய் 
தெரிகின்ற விந்தை
காதல்...


வேண்டாம் என்று 
நினைத்த வேளையிலும்,
முடியாது என்று,
தவித்த வேளையிலும்,
நீயே வேண்டும்
என்ற தவிப்பு
காதல்.....

 தேவதை
உன்னை ஊரே
காதல் செய்ய,
நான் மட்டுமே 
உன் நேசிப்பை பெற வேண்டும்
என்ற தவம்
காதல்...


உன் புன்னைகைக்கும்,
நீ சூடும் பூவிற்கும்,
உடுத்துகின்ற உடுப்புக்கும்,
உதட்டுச் சுளிப்பிருக்கும்
வைக்கும் பொட்டுக்கும்,
விரல் இடுக்கில் விழுகின்ற
உன் கூந்தல் கற்றைக்கும்,
தவற விட்ட பேருந்திற்குமாய்
கவிதை சொல்லும்
என் கவிதை
அத்தனையிலும்
மொத்தமாய் காதல்....
♥♥♥♥

14 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எனக்கு கிடைத்த வரம்
நீ...
உனக்கு கிடைத்த வரம்
நான்...
நமக்காய் கிடைத்த வரம்
காதல் ....//

ஆரம்பமே அசத்தலா இருக்கேம்மா...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வா வா வா காதல் காதல், சூப்பரா இருக்கு ரொம்பவும் ரசிச்சேன், என் பேஸ்புக்'ல இதை போடப்போறேன் கொஞ்ச கொஞ்சமாக...!!!

siva சொன்னது…

நீண்ட பயணம் அதில்
வழித்துணையாய்
வந்திட்ட
உன் நினைவுகளில் எல்லாம்
காதல்....
//

so sweet friend.

keep on rocking..

siva சொன்னது…

உன் கை வண்ணத்தில் ரசித்தேன் வழக்கம் போல ரசித்தேன் :)

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

எனக்கு கிடைத்த வரம்
நீ...
உனக்கு கிடைத்த வரம்
நான்...
நமக்காய் கிடைத்த வரம்
காதல் ....//

ஆரம்பமே அசத்தலா இருக்கேம்மா...!!!

நன்றி அண்ணா, இந்த வரிகளில் இன்னொருவரின் சாயல் இருப்பதை உணர்ந்தேன் முகநூலின் வாயிலாக அதனால் நீக்கி விட்டேன் அண்ணா....

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வா வா வா காதல் காதல், சூப்பரா இருக்கு ரொம்பவும் ரசிச்சேன், என் பேஸ்புக்'ல இதை போடப்போறேன் கொஞ்ச கொஞ்சமாக...!!!

ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா....முகநூலின் நீங்கள் பகிர்ந்ததை பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி மனோ ணா....

ரேவா சொன்னது…

siva கூறியது...

நீண்ட பயணம் அதில்
வழித்துணையாய்
வந்திட்ட
உன் நினைவுகளில் எல்லாம்
காதல்....
//

so sweet friend.

keep on rocking..

thank you so much siva.... :)

ரேவா சொன்னது…

siva கூறியது...

உன் கை வண்ணத்தில் ரசித்தேன் வழக்கம் போல ரசித்தேன் :)


இது எங்க போட்ட விதைன்னு தெரியுது... :)

தினேஷ்குமார் சொன்னது…

காதல் என்ற சொல்லே கவிப்பாடுகிறது நெஞ்சத்தில் மோதி நிலையாய் நிழலாய் நீந்திச் செல்லும் உத்தமம் சப்தமிலா அடைப்பட்டு நித்திரையில்லா அகப்பட்டு தடைப்போட்டு தடைப்போட்டு தன்னையே தான் இழுக்க இன்னும் ...

பெயரில்லா சொன்னது…

மொத்தமாய் காதல்
:) சூப்பர்ங்க..

sasikala சொன்னது…

உன் புன்னைகைக்கும்,
நீ சூடும் பூவிற்கும்,
உடுத்துகின்ற உடுப்புக்கும்,
உதட்டுச் சுளிப்பிருக்கும்
வைக்கும் பொட்டுக்கும்,
விரல் இடுக்கில் விழுகின்ற
உன் கூந்தல் கற்றைக்கும்,
தவற விட்ட பேருந்திற்குமாய்
கவிதை சொல்லும்
என் கவிதை
அத்தனையிலும்
மொத்தமாய் காதல்....
அருமை

rishvan சொன்னது…

ந்ல்ல கவிதை.....

பிரியமுடன் பிரபு சொன்னது…

nice

எவனோ ஒருவன் சொன்னது…

ஹை எனக்கு மிகவும் பிடித்த காதல் கவிதைகள் :-) எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு :-)

பதிவுகள் எண்ணிக்கை குறைஞ்சிட்டே வருது?? ரொம்ப பிஸி ஆயிட்டீங்க போல????