உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

வழி விடுங்கள் காதல் வருகிறது....



       மழை விட்ட நேரத்து, இலை ஒட்டிய மழைத்துளிப்போல, நீ சென்ற பின்னும் இன்னும் இன்னும் தூறல்களால் நிறைந்து கொண்டிருக்கிறது என் காதல் வானம்...

எப்படியோ இருந்தவளை இந்த காதல் இப்படி மாற்றும் என்று நான் அறியவில்லை, நலம் விசாரிக்கும் தோழிகளிடமும், என்னைப்பற்றிய உன்னை பற்றியே சொல்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது எனக்கு...ஆம் ஆண் வாசம் அறியாத என்னை, ஆட்டிபடைக்கப்போகும் என்னவன் ஒரு பேருந்து பயணத்தில்  தான் எனக்கு அறிமுகமானான்...

பொதுவாக பெண்கள் அழகில் கர்வப்பட்டு காதல் கொள்ளும் ஆண்கள் மத்தியில், உன்னை தனித்துக் காட்டியது உன் கூச்சகுணம் தான்... உன்னை முதன் முதலாய் பார்த்த தினம் என்று எதுவும் என் நினைவுக்கு வராவிட்டாலும், நீ முதல் முதல் என்னிடம் பேசிய தினம் ஏனோ இன்னும் உள்ளுக்குள் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது...


     அன்று முதல் நீயும் நானும், சேர்ந்து பயணித்த பயணத்தில் எல்லாம் என்னுள் உற்ற நண்பனாய் மாறிப்போனாய்...எனக்கு பிடித்தவைகள், பிடிகாதவைகள், அரசியல், குடும்ப சுழல் என்று அனைத்தையும் பகிரும் ஒரு அந்தரங்க டைரியாய் என்னை ஆட்க்கொண்டது உன் அன்பு..ஒவ்வொரு விடியலும் உன்னோடான பயணத்தின் எதிர்பார்ப்பிலே சுகமாய் விடிந்தது, என்னை அடக்கி ஆளும் இந்த மாற்றத்திருக்கு பெயர் தேட விரும்பா விடினும், இந்த பயணம் ஏனோ தினம் தினம் பல கனவுகளை விதைத்து சென்றது...

.   ஆடவர் கண்பார்த்து பேச கூச்சப்படும் நாணம் இது வரை வாய்த்ததே இல்லை எனக்கு, ஆனாலும் ஒரு பயணத்தில் என் அருகாமை, உன்னை பாடாய் படித்தியதில் தான் அறிந்தேன் நாணம் என்பது இருவருக்கும் பொதுவானது என்று ... அன்று மட்டும் ஏனோ என் இரவுகள், ரசாயனமாய் என்னை எரித்து தின்றது...விடிந்திடும் பகலுக்காய் விளக்கு வைத்து காத்திருந்தேன், விடியல் வந்தது.
எனக்காக காத்திருக்கும் உனக்காய் இன்று நான் காத்திருந்தேன்..
புல்லாங்குழலில்
இருக்கும் இசை
போலவே
எனக்குள்
நீ

கண்கள் படபடக்க, இதயம் ஏனோ உன் பெயர் சொல்லி துடிக்க, உன் வரவிற்காய் என் விழிவாசல் காத்திருந்தது... மெல்லிய உன் நறுமணம் என்னை கடத்திச் செல்ல, இத்தனை நாள் உன் அருகாமையில் உணராத ஒன்றை முதல் முதலாய் உணர்ந்தேன்.... இறுதியில் என்னை வெட்கம் ஆட்க்கொள்ள நீ காரணமாய் அமைந்துவிட்டாய்...


முதல் முதலாய்
என் விழிகள் படிக்க 
விரும்பிய 
புத்தகம்
உன் இதயம்.....

எப்போதும் போல ஒற்றை புன்னைகையை சிந்திவிட்டு நீ இருக்க, என் கண்கள் ஒற்றனாகி உன்னை வேவு பார்க்க தொடக்கி விட்ட இந்த விந்தைக்கு என்ன பெயர் என்று விளங்கவில்லை..அந்நேரம் பேருந்து வந்துவிட, உன்னை பற்றிய சிந்தனையில் லயித்திருந்த என்னை பற்றிய உன் கரங்களில் வாயிலாய் மீண்டு வந்தேன் இவ்வுலகிற்கு...   

தொன தொணக்கும் என் உதடுகள் ஏனோ இன்று மௌனத்தை மட்டுமே பற்றி கொண்டு, அவன் மொழிக்காய் காத்திருந்தது...இந்த நிமிடங்கள் வசந்தங்களாய் என் வாழ்க்கையை நிறைத்தது, அவனுக்கான நிறுத்தத்தில் அவன் இறங்கிவிட, அவன் இருந்த இடத்தில் அவன் நினைவுகளுடன் சேர்ந்து பயணித்தேன்....

மௌனத்தை விட  சிறந்த மொழி
இல்லவே இல்லை
இந்த 
காதலுக்கு...

எப்பொழுதும் பேசிதீர்க்கும் நாளாய் இந்த நாள் இல்லை...எப்போதும் நானாய் இருந்த நான் இப்போது இல்லை.... என்னவாயிற்று எனக்கு என்று எண்ணியே நிமிடங்கள் கரைந்தன..இரவு ஏனோ ஒரு புதிரை வைத்து விடை தேட வைத்தது... இந்த நிலவும் நட்சத்திரமும், இதுவரை நான் காணாத தோற்றத்தை காண தந்தது.... இதை காதல் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், எட்டித் தள்ளவும் முடியாமல் மற்றுமொறு தூங்கா இரவை தாரை வார்த்து தந்தது அவன் நினைவு...

நீயில்லாத
நான் அத்தனையிலும்
நான் நலமில்லை...

உள்ளத்து உளறல்களை அவனிடம் சொல்லிவிட எத்தனித்து விடிந்தது பொழுது...வகை வகையாய் ஒப்பனை செய்த வார்த்தை மலர்களை, நாணம் என்னும் நார் எடுத்து, காதலாய் கட்டிவைத்து காத்திருந்தேன் அவன் வரவுக்கு...
எப்போதும் போல மௌனம் பற்றி வந்தவனின் இன்றைய மௌனம் என்னை வழக்கத்திற்கு  மாறாய் கலவரப்படுத்த, சொல்லவா? வேண்டாமா? என்ற தயக்கத்திலே காலங்கள் பல  நகர்ந்தன....

என் அன்பை
உன்னிடம் சொல்லியிருந்தால்
எனக்கு காதலன்
கிடைத்திருப்பான்...
சொல்லாத அன்பால்
எனக்கு காதல்
கிடைத்திருக்கின்றது...

காலங்கள் நகர நகர நீ மட்டும் இன்னும் இன்னுமாய் வேர்விட்டுக் கொண்டிருந்தாய் என்னுள்...விடிந்த பொழுதில் இருந்து, உனக்கு பிடித்த உணவில் இருந்து,பிடித்த பொருளில் இருந்து, பொழுது போக்கும் தனிமையில் இருந்து, என்னைக் கடக்கும் உன் சாயல் கொண்ட மனிதர்கள் வரை,  அத்தனையிலும் நிழலாய் உன் நினைவுகள் தொடர, இது காதல் தானா என்ற தயக்கத்திலே நான் இருந்தேன்...

என் எல்லாக் கவிதைகளிலும்
சொல்ல முடியா
அன்பை விதைத்திருக்கின்றேன்,
என்றேனும் உன் பார்வைக்கு
வந்தால் புரிந்துகொள்
என் காதலை...

சுற்றிய சுற்றமும், நட்பும் என்னை பரிகாசம் செய்ய, என் காதலை உன்னிடம் சொல்லிடச் சொல்லி கட்டளை இடுகிறது.  உன்னை பற்றிய நினைவுகள் இனி வேண்டாம் என்று நினைத்தாலும், மறக்க நினைக்கும் தருணங்களில் எல்லாம் மறக்காமல் வந்துவிடுகின்ற இந்த நினைவுகளே என் காதலுக்கு இப்போதைக்கு போதுமானதாய் இருக்கிறது...

உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
என் காதலை சொல்ல
தைரியம் வருகிறதோ
இல்லையோ?
மறக்காமல் கவிதை
வந்துவிடுகிறது..

இப்போதெல்லாம் பேருந்து பயணத்தில் அவனை காண முடிவதில்லை..
எப்போதும் போல நானும் அவன் நினைவுகளுமாய் பயணங்கள் நீண்டு கொண்டிருக்கிறது..வருடங்கள் பல கழித்து சந்திக்கும் என் எல்லா நட்பும், , இப்போவாவது காதலை சொல்லிவிட்டாயா என்ற அக்கறை விசாரிப்பை விரித்து விட்டு செல்கிறது...


இப்போதும் எப்போதாவது எங்கேயாவது உன்னை பார்த்தால் சொல்லிவிடலாம் என்ற ஆயத்தமாகவே இருக்கிறது என் காதல்.. தவறவிட்ட தருணங்களே என்னை பார்த்து பரிகாசம் செய்ய, அவனை பார்த்துவிட்டால் அவனுடன் சேர்த்துவிடுவதாய் சொல்லி சொல்லியே துடிக்கிறது என் இதயம்...அவன் வழித்தடத்தில், புதைந்து விட துடிக்கின்றதாய் சொல்லிக்கொள்கின்றன  கால்கள்...அவன் கைப்பிடிக்குள் தஞ்சம் புக துடிக்கின்றது என் கைகள்..அவன் விழி ஈர்ப்பில் மயங்கி விழ காத்திருக்கின்றது என் கண்கள்...


உணரமுடியா அன்பை,
வாழ்த்து அட்டையிலும்,
ஒரு பூச்செண்டிலும்,
சின்ன பரிசுகளிலும்,
உணர முடியுமாயின்,
இந்த கவிதை சொல்லட்டும்
என் அன்பை..

கடல் அலைகளோடும், நிலவொளியோடும், யாருமற்ற உலகை உணரும் நிமிடங்களுக்காக காத்திருக்கின்றேன் நான்... நீ என்னை சேராவிட்டாலும் பரவாயில்லை..என்றேனும் என் காதல் இந்த எழுத்துகளாய் உன் கண்ணில் படட்டும்...பொல்லாத என் காதல், சொல்லாததை என் கவிதைகள் சொல்லட்டும்..  கொஞ்சம் வழிவிடுங்கள்  காதல் வருகிறது இந்த கவிதையை காண...

மழை விட்ட நேரத்து, இலை ஒட்டிய மழைத்துளிப்போல, நீ சென்ற பின்னும் இன்னும் இன்னும் தூறல்களால் நிறைந்து கொண்டிருக்கிறது என் காதல் வானம்...

மறுஜென்மத்தில்
நான் மனிதனாக
பிறக்கின்றேனோ? இல்லையோ?
இந்த ஜென்மத்தில்
மனிதனாக இருக்கின்றேன்.
ஆம்
நான் காதலிக்கிறேன்...
காதலிக்கப்படுகின்றேன்
இந்த கவிதைகளால்... 


நண்பர்கள் அனைவருக்கும் அன்பு தின வாழ்த்துக்கள்.... :)




வணக்கம் வலையுலக உறவுகளே, இந்த பதிவு கூட காதலர் தினத்துக்கு உதித்த கற்பனைதானுங்க...எதுக்கு சொல்றேன்னு புரியும்னு நினைக்கிறேன்....அடுத்த பதிவுல சந்திக்கலாம் :) :)

21 கருத்துகள்:

sulthanonline சொன்னது…

வாழ்த்துக்கள் தோழி கடைசியா ஒரு டிஸ்கி போட்டு தப்பிச்சுட்டீங்க.. உரைநடைக் கவிதை அருமை.

Admin சொன்னது…

நிகழ்வுகளுக்கு மத்தியில் கவிதைகளை தொடுத்து காதலை அழகு படுத்தி விட்டீர்கள்..அருமை..
(உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
என் காதலை சொல்ல
தைரியம் வருகிறதோ
இல்லையோ?
மறக்காமல் கவிதை
வந்துவிடுகிறது)பிடித்தது.

முத்தரசு சொன்னது…

//மறுஜென்மத்தில்
நான் மனிதனாக
பிறக்கின்றேனோ? இல்லையோ?
இந்த ஜென்மத்தில்
மனிதனாக இருக்கின்றேன்//

நேசத்துடன் வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் சொன்னது…

அட்டகாசம் ரேவா. ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். நடு நடுவில கவிதையைப் போட்டது அசத்தல் :) கற்பனை தான் என்றாலும் காதலை சொல்லி இருக்கலாம்ல.

எப்படி இப்படி யோசிக்கிரீங்க? அந்த ரகசியத்தை சொல்லலாமே எனக்கும் :)

உணரமுடியா அன்பை,
வாழ்த்து அட்டையிலும்,
ஒரு பூச்செண்டிலும்,
சின்ன பரிசுகளிலும்,
உணர முடியுமாயின்,
இந்த கவிதை சொல்லட்டும்
என் அன்பை..

என்னை மிகவும் கவர்ந்தது....

செய்தாலி சொன்னது…

//உணரமுடியா அன்பை,
வாழ்த்து அட்டையிலும்,
ஒரு பூச்செண்டிலும்,
சின்ன பரிசுகளிலும்,
உணர முடியுமாயின்,
இந்த கவிதை சொல்லட்டும்
என் அன்பை.//


//உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
என் காதலை சொல்ல
தைரியம் வருகிறதோ
இல்லையோ?
மறக்காமல் கவிதை
வந்துவிடுகிறது..//

//என் அன்பை
உன்னிடம் சொல்லியிருந்தால்
எனக்கு காதலன்
கிடைத்திருப்பான்...
சொல்லாத அன்பால்
எனக்கு காதல்
கிடைத்திருக்கின்றது...//

அருமையான கவிதைகள் தோழி
வாழ்த்துக்கள்

Marc சொன்னது…

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

சித்தாரா மகேஷ். சொன்னது…

//என் அன்பை
உன்னிடம் சொல்லியிருந்தால்
எனக்கு காதலன்
கிடைத்திருப்பான்...
சொல்லாத அன்பால்
எனக்கு காதல்
கிடைத்திருக்கின்றது...//

உங்கள் அருமையான காதல் உணர்வு வரவேற்கப்படவேண்டியது அக்கா.சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது.சொல்லிவிடுங்கள் உங்கள் காதலை...

எஸ்.மதி சொன்னது…

/உணரமுடியா அன்பை,
வாழ்த்து அட்டையிலும்,
ஒரு பூச்செண்டிலும்,
சின்ன பரிசுகளிலும்,
உணர முடியுமாயின்,
இந்த கவிதை சொல்லட்டும்
என் அன்பை.//
அருமையான கவிதைகள்

Unknown சொன்னது…

sulthanonline கூறியது...

வாழ்த்துக்கள் தோழி கடைசியா ஒரு டிஸ்கி போட்டு தப்பிச்சுட்டீங்க.. உரைநடைக் கவிதை அருமை.


பின்ன டிஸ்கி போடாட்டி நான் மாட்டிப்பேன்ல ஹி ஹி... நன்றி நண்பா உங்கள் பாராட்டுதலுக்கு :)

Unknown சொன்னது…

மதுமதி கூறியது...

நிகழ்வுகளுக்கு மத்தியில் கவிதைகளை தொடுத்து காதலை அழகு படுத்தி விட்டீர்கள்..அருமை..
(உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
என் காதலை சொல்ல
தைரியம் வருகிறதோ
இல்லையோ?
மறக்காமல் கவிதை
வந்துவிடுகிறது)பிடித்தது.


மிக்க நன்றி சகோ உங்கள் கருத்துரைக்கு :)

Unknown சொன்னது…

மனசாட்சி கூறியது...

//மறுஜென்மத்தில்
நான் மனிதனாக
பிறக்கின்றேனோ? இல்லையோ?
இந்த ஜென்மத்தில்
மனிதனாக இருக்கின்றேன்//

நேசத்துடன் வாழ்த்துக்கள்


நன்றி மனசாட்சி :)

Unknown சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

அட்டகாசம் ரேவா. ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். நடு நடுவில கவிதையைப் போட்டது அசத்தல் :) கற்பனை தான் என்றாலும் காதலை சொல்லி இருக்கலாம்ல.

எப்படி இப்படி யோசிக்கிரீங்க? அந்த ரகசியத்தை சொல்லலாமே எனக்கும் :)

உணரமுடியா அன்பை,
வாழ்த்து அட்டையிலும்,
ஒரு பூச்செண்டிலும்,
சின்ன பரிசுகளிலும்,
உணர முடியுமாயின்,
இந்த கவிதை சொல்லட்டும்
என் அன்பை..

என்னை மிகவும் கவர்ந்தது....


சொல்லி வெற்றி பெற்ற காதலில் எல்லாம் காதல் இருக்குமே இல்லையோ தெரியாது நண்பா, ஆனால் சொல்லாத காதலில் இன்னும் இன்னும் ஆழமாய் காதல் இருந்துகொண்டே இருக்கும் அதானால தான் சொல்லாத காதலில் முடிச்சேன்...

ஹ ஹ உனக்கு சொல்லித்தரவா? மீனுக்கு நீந்த சொல்லித்தரனுமா?

நன்றி நண்பா உன் மனமார்ந்த பாரட்டுதலுக்கு :)

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

//உணரமுடியா அன்பை,
வாழ்த்து அட்டையிலும்,
ஒரு பூச்செண்டிலும்,
சின்ன பரிசுகளிலும்,
உணர முடியுமாயின்,
இந்த கவிதை சொல்லட்டும்
என் அன்பை.//


//உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
என் காதலை சொல்ல
தைரியம் வருகிறதோ
இல்லையோ?
மறக்காமல் கவிதை
வந்துவிடுகிறது..//

//என் அன்பை
உன்னிடம் சொல்லியிருந்தால்
எனக்கு காதலன்
கிடைத்திருப்பான்...
சொல்லாத அன்பால்
எனக்கு காதல்
கிடைத்திருக்கின்றது...//

அருமையான கவிதைகள் தோழி
வாழ்த்துக்கள்


மிக்க நன்றி நண்பா உங்கள் மறுமொழிக்கு :)

Unknown சொன்னது…

dhanasekaran .S கூறியது...

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்



மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

சித்தாரா மகேஷ். கூறியது...

//என் அன்பை
உன்னிடம் சொல்லியிருந்தால்
எனக்கு காதலன்
கிடைத்திருப்பான்...
சொல்லாத அன்பால்
எனக்கு காதல்
கிடைத்திருக்கின்றது...//

உங்கள் அருமையான காதல் உணர்வு வரவேற்கப்படவேண்டியது அக்கா.சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது.சொல்லிவிடுங்கள் உங்கள் காதலை...

மிக்க நன்றி சகோ உங்கள் மறுமொழிக்கு, என்னவர் கிடைக்கும் போது கண்டிப்பா சொல்லிடுறேன் :)

Unknown சொன்னது…

Mathi கூறியது...

/உணரமுடியா அன்பை,
வாழ்த்து அட்டையிலும்,
ஒரு பூச்செண்டிலும்,
சின்ன பரிசுகளிலும்,
உணர முடியுமாயின்,
இந்த கவிதை சொல்லட்டும்
என் அன்பை.//
அருமையான கவிதைகள்

மிக்க நன்றி மதி :)

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

ஒரு பெண்ணின் காதல் உணர்வை அழகாக வெளிப்படித்தியுள்ளீர்கள் கவிதைகளில், உங்களவரை விரைவில் சேர வாழ்த்துக்கள்!


இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்,

/////ஆடவர் கண்பார்த்து பேச கூச்சப்படும் நாணம் இது வரை வாய்த்ததே இல்லை எனக்கு, ஆனாலும் ஒரு பயணத்தில் என் அருகாமை, உன்னை பாடாய் படித்தியதில் தான் அறிந்தேன் நாணம் என்பது இருவருக்கும் பொதுவானது என்று .../////////

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்காச்சி,
அருமையான படைப்பு! மென்மையான கவி வரிகளைக் கொண்டு படைப்பினை அழகு சேர்த்திருக்கிறீங்க.

பேருந்து காதலில் தொலைந்து, காதல் பற்றிய பூரண அர்த்தத்தினைக் கொடுத்திருக்கிறீங்க இப் பதிவின் ஊடாக! ரசித்தேன்.

சசிகலா சொன்னது…

உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
என் காதலை சொல்ல
தைரியம் வருகிறதோ
இல்லையோ?
மறக்காமல் கவிதை
வந்துவிடுகிறது..
நீயில்லாத
நான் அத்தனையிலும்
நான் நலமில்லை...
குட்டி குட்டி வரிகளை சுமந்து வந்த காதல் பேருந்தில் பயணித்த மகிழ்ச்சியோடு அருமைங்க ரசித்து படித்தேன் .

Unknown சொன்னது…

you to like stella bruse

வெற்றிவேல் சொன்னது…

மறுஜென்மத்தில்
நான் மனிதனாக
பிறக்கின்றேனோ? இல்லையோ?
இந்த ஜென்மத்தில்
மனிதனாக இருக்கின்றேன்.
ஆம்
நான் காதலிக்கிறேன்...
காதலிக்கப்படுகின்றேன்

என் அன்பை
உன்னிடம் சொல்லியிருந்தால்
எனக்கு காதலன்
கிடைத்திருப்பான்...
சொல்லாத அன்பால்
எனக்கு காதல்
கிடைத்திருக்கின்றது...



இரண்டும் மிகுந்த அருமை...
தங்கள் கவிதைகள் பருக பருக திகைக்காத காதல் அமிர்தம்...