உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 25 பிப்ரவரி, 2012

தொலைக்கப்பட்டவைகள் சில....



ஒரு இரயில்
பயணத்தின் போது
வந்தமறும் எல்லாரையும்
மெல்லிய புன்னைகையில்
கடக்கின்றேன்...

என் புன்னகையில்
உயிர் இல்லை
என்றாலும்,
பதில் புன்னகை
என் உள்ளம் தொடுக்கின்றது..

அருகில் இருக்கும்
எல்லாரையும்
அலட்சியப்பார்வை ஒன்றை
வீசி,
பேசுவதறக்கான தொடர்பை
துண்டிக்கிறேன்..

எதையோ மறைக்க நினைத்து
புத்தகத்தில்
புதையுண்ட கண்கள்
எதிர் வரிசை
குழந்தையின் அசைவுகளை
அளவெடுக்கிறது..

சிரிப்பதும், அழுவதும்,
கண்களை கசக்குவதுமாய்
அதன் அழகில்
என் பயணம் நீள
நீண்ட பெருமூச்சில்
தவறவிட்ட குழந்தைதனம்
என்னை பார்த்து சிரிக்கின்றது
இது தானே நீ
என்று,

சில நேரங்களில்
மறந்தே தான் போகிறோம்,
நிமிடத்தில் முடிந்துபோகின்ற
பயணத்தில்,
தொலைத்து போன
நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறத்தே தான் வாழ்கின்றோம்...

23 கருத்துகள்:

Vijayan Durai சொன்னது…

தொலைப்பதும்,தொலைத்ததை தேடுவதும் ஒரே மனது!!
நாம் குழந்தைகள் போல இருக்க நினைக்கிறோம்.சந்தோசமாக,பரவசமாக,உற்சாகமாக...
//நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறந்தே தான் வாழ்கின்றோம்...
//

முத்தரசு சொன்னது…

உண்மை... மறந்து தான் போகிறோம்...தொலைத்து விட்டு வாழ்கிறோம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒரு இரயில்
பயணத்தின் போது
வந்தமறும் எல்லாரையும்
மெல்லிய புன்னைகையில்
கடக்கின்றேன்...//

இதோ அண்ணனும் ரயில்லதான் இருக்கேன் தங்கச்சி, இப்போ ரயில் சேலத்துல நிக்குது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எதார்த்தமான கவிதை'ம்மா தங்கச்சி வாழ்த்துக்கள்...!!!

சசிகலா சொன்னது…

நாமே நம்மை தொலைத்து விட்டு . நினைவு படுத்திப் பார்க்கிறோம் . அருமைங்க

K சொன்னது…

அருமையான அழகிய கவிதை ரேவா! உண்மைதான் நாம் அனைத்தையுமே தொலைத்தும், மறந்தும்தான் போனோம்!

K சொன்னது…

தமிழ்மணத்திலும், உடான்ஸிலும் இணைத்துவிட்டேன்!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
தொலைத்த பின்புதான் பொருளின் அருமை கூடத் தெரிகிறது
மனம் கவர்ந்தபதிவு
தொடர வாழ்த்துக்கள்

SELECTED ME சொன்னது…

அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html

அன்பு துரை சொன்னது…

//** தொலைத்து போன
நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறத்தே தான் வாழ்கின்றோம்... **//

100 விழுக்காடு முற்றிலும் உண்மை..

Unknown சொன்னது…

விஜயன் கூறியது...

தொலைப்பதும்,தொலைத்ததை தேடுவதும் ஒரே மனது!!
நாம் குழந்தைகள் போல இருக்க நினைக்கிறோம்.சந்தோசமாக,பரவசமாக,உற்சாகமாக...
//நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறந்தே தான் வாழ்கின்றோம்...
//

நன்றி சகோ உஙகள் வருகைக்கும் கருத்துரைக்கும்...

Unknown சொன்னது…

மனசாட்சி கூறியது...

உண்மை... மறந்து தான் போகிறோம்...தொலைத்து விட்டு வாழ்கிறோம்.

உண்மை தான் சகோ.... :)நன்றி சகோ உஙகள் வருகைக்கும் கருத்துரைக்கும்...

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

ஒரு இரயில்
பயணத்தின் போது
வந்தமறும் எல்லாரையும்
மெல்லிய புன்னைகையில்
கடக்கின்றேன்...//

இதோ அண்ணனும் ரயில்லதான் இருக்கேன் தங்கச்சி, இப்போ ரயில் சேலத்துல நிக்குது.

அண்ணா நீங்க இருக்கிற இடத்துல சந்தோஷத்துக்கு குறைவிருக்காது நீங்க தான் பலமொழி பகலவன் ஆச்சே ஹி ஹி....

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

எதார்த்தமான கவிதை'ம்மா தங்கச்சி வாழ்த்துக்கள்...!!!

நன்றி மனோ அண்ணா ரொம்ப நாள் கழிச்சு என் பக்கம் வந்துருக்கேங்க....

Unknown சொன்னது…

சசிகலா கூறியது...

நாமே நம்மை தொலைத்து விட்டு . நினைவு படுத்திப் பார்க்கிறோம் . அருமைங்க

நன்றி சசி உங்க கருத்துரைக்கு :)

Unknown சொன்னது…

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...

அருமையான அழகிய கவிதை ரேவா! உண்மைதான் நாம் அனைத்தையுமே தொலைத்தும், மறந்தும்தான் போனோம்

ம்ம்ம் ரஜிவன்...சில நேரங்களில் பக்கத்து வீட்டிக்குழந்தைகள் விளையாடும் போது நம்மையும் அறியாம ஒரு ஏக்க பெருமூச்சு விடுவதை ஏனோ தவிர்க்க முடியல :)

Unknown சொன்னது…

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...

தமிழ்மணத்திலும், உடான்ஸிலும் இணைத்துவிட்டேன்!


நன்றி நண்பா :)

Unknown சொன்னது…

Ramani கூறியது...

அருமை அருமை
தொலைத்த பின்புதான் பொருளின் அருமை கூடத் தெரிகிறது
மனம் கவர்ந்தபதிவு
தொடர வாழ்த்துக்கள்


நன்றி ரமணி சார் உங்கள் மறுமொழிக்கு :)

Unknown சொன்னது…

நிலவன்பன் கூறியது...

அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html


மிக்க நன்றி சகோ உங்கள் நட்பின் விருதுக்கு....

Unknown சொன்னது…

அன்பு கூறியது...

//** தொலைத்து போன
நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறத்தே தான் வாழ்கின்றோம்... **//

100 விழுக்காடு முற்றிலும் உண்மை..


அன்போடு நீங்கள் இட்ட மறுமொழிக்கு மிக்க நன்றி சகோ.. தொடர்ந்து வாருங்கள் :)

பெயரில்லா சொன்னது…

அற்புதம் ரேகா,சிலநாட்களுக்கு முந்திய பேரூந்து பயணத்தின் போறது சில தேவதைகளுடனும் தேவர்களுடனும் பயனிதிருந்தேன் பெரூந்தையே தங்களுடைய புன்னகைக்குள் கட்டி வைத்திருந்த அவர்களை பற்றி எழுத நினைத்து இன்றுவரைக்கும் குறையாகவே வைத்து இருக்கிறேன்...பார்போம் நேரத்தை நான் வெல்லுகின்ற நேரத்தில் எழுதிமுடிப்போம்...நிச்சயமாக அந்த பதிவின் முடிவை ரேகாவின் சிலவரிகளுடன் முடிக்கலாம் என நினைக்கிறன்...(ரேகாவின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில்)

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

////அருகில் இருக்கும்
எல்லாரையும்
அலட்சியப்பார்வை ஒன்றை
வீசி,
பேசுவதறக்கான தொடர்பை
துண்டிக்கிறேன்..///

சிறந்த வரிகள்! உண்மையும் கூட
நம்மை அலட்சியப்படுத்துபவர்களிடம் நமக்கு பேசப்பிடிப்பதில்லை!

எவனோ ஒருவன் சொன்னது…

மிக எதார்த்தமான கவிதை ரேவா. இதை படிக்கும் போது என் மனசாட்சி என்னிடம் கேள்வி கேட்பது போல இருந்தது.

சிரிப்பதும், அழுவதும்,
கண்களை கசக்குவதுமாய்
அதன் அழகில்
என் பயணம் நீள
நீண்ட பெருமூச்சில்
தவறவிட்ட குழந்தைதனம்
என்னை பார்த்து சிரிக்கின்றது
இது தானே நீ
என்று,

வந்தமறும் எல்லாரையும் - எழுத்துப் பிழை ரேவா....