உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 11 மே, 2012

எனக்கு பிடித்தது தனிமை...சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தபட்ட
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு
என் மேல் ...

நலம் விரும்பிகளையும்,
நட்புகளையும்,
எனக்கென இருந்த உறவுகளையும்
வெளித்தள்ளிவிட்டு 
ஒய்யார நடை நடந்துவருகின்றது
என் அறையெங்கும்...

தினம் வரும்
நலம்விசாரிப்புகளிலிருந்து,
நேசம் பரிமாறிடும் காதலிலிருந்து,
அன்பு தாங்கி வந்த
அத்தனை பேரையும்
வெறுப்பை சுமந்து செல்லும் படி
செய்கிறது...

கவிதைகளை கைக்கு
கிடைக்கசெய்துவிட்டு
காதலை தள்ளி வைக்கின்றது....

காலர நடக்கச்செய்துவிட்டு
நான்கு சுவர்களுக்கு நடுவே
கட்டிபோட்டுவிடுகிறது...

இப்போதெல்லாம்,
சுவர் பல்லியும்,
தேநீர் குவளையும்,
சில புத்தகங்களும்,
சில பல கவிதைகளுமே
சொந்தமென்றான பின்,

உண்மையாய் பழகி
உயிரினில் வைத்து
உரிமை பாராட்டுவதாய் நினைத்து
 உதறித்தள்ளும்  உறவுகளை விட
இந்த தனிமை
எனக்கு
பிடித்துதான் இருக்கின்றது...


                      முந்தைய பதிவு : என் பார்வையில் வழக்கு எண் 18/9


12 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னாச்சும்மா தங்கச்சி...? டோன்ட் ஒர்ரி இதுவும் கடந்துபோகும், ரயில் பயணங்களில் கடந்துபோகும் மரங்களைப்போல....

சிட்டுக்குருவி சொன்னது…

போட்டிருக்குற படம் சூப்பரா இருக்கு....கவிதையைப் போல

சே. குமார் சொன்னது…

தனிமை... இனிமையாகத்தான் இருக்கும்...

ஆனால் உங்கள் கவிதையில் சோகம் இழையோடுவது படிக்கும் போது மனசுக்குள் கனக்கிறது.

Seeni சொன்னது…

appudiyaa!
eppadiyo ungal thanimai-
inimaiyaana kavithai thanthathu!

ஷோ.ரா. கதிர் சொன்னது…

இனிக்கும் எந்த ஒரு விசயமும் இனியதல்ல...! தனிமையும் அப்படிதான்.. தனிமை இனித்திருக்கும்.. பின்பு ஒரு நாள் பிடித்து நடக்க யாருமில்லையே என்று திரும்பி பார்த்தால் பயம் தான் மிஞ்சும். பார்த்துக்கொள்ளுங்கள்.. இது என் கருத்து....!

தனிமை நிரந்தரமல்ல..

கீதமஞ்சரி சொன்னது…

தனிமையும் சில சமயங்களில் மனத்துக்கு இதமும் இனிமையும் தரக்கூடும். வெறுமையின் பாதையில் பயணிக்கும் தனிமையின் சுவடுகளும் அற்புதம் உள்ளடக்கி ரசிக்கவைக்கும். பாராட்டுகள் ரேவா.

சசிகலா சொன்னது…

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

கோவை மு.சரளா சொன்னது…

// இப்போதெல்லாம்,
சுவர் பல்லியும்,
தேநீர் குவளையும்,
சில புத்தகங்களும்,
சில பல கவிதைகளுமே
சொந்தமென்றான பின்,// அருமை ரேவா தனிமையின் தடயங்களை ஆழ பதிவு செய்திருக்கிறது உங்கள் கவிதை

arul சொன்னது…

what happened?

ரேவா சொன்னது…

கருத்திட்டு என் கவனத்தை ஈர்த்த உங்கள் அன்புக்கு நன்றி :)

விஜயன் சொன்னது…

//கவிதைகளை கைக்கு
கிடைக்கசெய்துவிட்டு
காதலை தள்ளி வைக்கின்றது.//
செம ஃபீலிங்க்!!

தனிமையில் இனிமை??

sathish prabu சொன்னது…

//தினம் வரும்
நலம்விசாரிப்புகளிலிருந்து,
நேசம் பரிமாறிடும் காதலிலிருந்து,
அன்பு தாங்கி வந்த
அத்தனை பேரையும்
வெறுப்பை சுமந்து செல்லும் படி
செய்கிறது...//

தன்னை நேசிப்பவர்களால் மட்டும் தான் தனிமையையும் நேசிக்க முடியும்..

கவிதை அருமை..