உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

இங்கே மாப்பிள்ளை வாங்கப்படும்.....                  இணையத்தில் படிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு கணவன்கள் விற்க்கப்படும்ங்கிற நகைச்சுவை தாங்கிய ஒரு பதிவ படிக்க முடிஞ்சது... பெண்களை எப்பவும் திருப்தி படுத்தவே முடியாதுங்கிற ஒன்லைன் ஸ்டோரி....படிச்சதும் பெண்கள் மட்டும்தான் இப்படியான்னு எப்பவும் ஏற்படுற கோவத்தோட உதட்டோர புன்னகையுமா அந்த தளத்தை விட்டு வெளிய வந்தேன்..அதே இடத்தில ஆண்களை பொருத்தி பார்த்தேன், எதிர்பார்ப்பு ரெண்டு தரப்புக்குமே பொதுவான ஒன்னுதானே... அன்பான ஆண்களை பெண்கள் தேடுனா, அழகான அன்பான பெண்களை ஆண்கள் தேடுவாங்க... சோ இங்க யாரையும் எதுலையும் திருப்தி படுத்த முடியாது, அவங்க அவங்களா நமக்கு கிடைச்சத வச்சு திருப்தி பட்டுக்கிட்டா தான் உண்டு....

கணவன்கள் விற்கப்படும்...... ஹஹா தலைப்பு நல்லா இருக்கா... ஆண்கள் கல்யாணச்சந்தையில விற்கப்படும் கடைச்சந்தை பொருளா போயிட்டாங்களா? இல்லை பெண்கள் தான் தனக்கு வர்ற மனுசன கடைச்சந்தை பொருளா மாத்திட்டாங்களா? ஒன்னும் புரியல...

ஆனாலும் காலம் காலமா நடந்துகிட்டு இருக்கிற விவாதம் தான் இந்த கல்யாணச்சந்தை...கடவுளே தன் கல்யாணத்துக்கு வரதட்சணை வாங்கினார்ன்னு சில தகவல்களை நம்மளும் கேள்விப்பட்டுருப்போம்... நான் வரதட்சணை வாங்க மாட்டேன்னு ஒரு முற்போக்கான ஆணாளையும் சொல்ல முடியாது, வரதட்சணை கொடுக்க மாட்டோம்ன்னு ஒரு பொண்ணாலையும் சொல்ல முடியாது....... ஏனா சமூகம் எந்த ஒரு ஆரோக்கிய நகர்வுக்கு பின்னாலையும் ஒரு அதிபாதாள குழியத்தேண்டி போட்டு எவண்டா மாட்டுவான்னு ஒக்காந்திருக்கும்..... நான் இப்படி நடக்கனும்ன்னு சொன்னா ஏன் அப்படி நடக்கக்கூடாதான்னு கேள்விய சுருக்கு கயிறா நம்ம கழுத்துல கட்டிவிடும்...இப்படி அடுத்தவங்க கேள்விக்கு பயந்தோ இல்லை அந்த பயத்த நமக்கு சாதகமா எடுத்துக்கிட்டோ தான் இந்த சந்தை வியாபாரம் இன்னமும் களைகட்டிகிட்டுயிருக்கு.........

ஆண் பிள்ளைகள் பெற்றவங்க என்னமோ நாடாளும் அரசர்கள் மாதிரியும், பெண் பிள்ளைகளை பெற்றவங்க என்னமோ அவங்களுக்கு வரி கட்டி உயிர் வாழும் சிற்றரசர்கள் மாதிரியுமான அமைப்ப நாம பழக்கப்படுத்தி வழக்கப்பட்ட இந்த சமூகம் (முன்னோர்கள்) நமக்கு தந்திட்டு போயிடுச்சு....இன்னுமும் இந்த வழக்கம் நம்ம விட்டு போகலைன்னு தான் சொல்லலாம்...

இன்னைக்கு கல்யாண சந்தையில, ஒரு ஜோடி புதுசா இணைச்சாலும் காசு, புடிக்கலைன்னு பிரிஞ்சாலும் காசு...பணத்தை சுத்தியே இந்த பந்தத்தை நாம கட்டிப்போட்டுட்டோமா? இல்லை என்கிட்ட இருக்குங்கிறத காட்டி இல்லாதவங்களையும் இருக்கிறமாதிரி காட்டிக்க வைக்கிறோமா?

ஆனாலும், அர்த்தமுள்ள வாழ்க்கைங்கிறது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணத்தில தான் கிடைக்குது... இத கேலிக்கூத்தா ஆண்கள் எண்ணலாம், ஆனாலும் பெண் சரியில்லாத எந்த ஒரு இடமும் நரகம் தான், ஆனா பெண்ணுக்கு அப்படியில்லை ஒரு ஆண் எப்படி இருந்தாலும் அதோட எந்த பாதிப்பும் இல்லாம அவ சுத்தி இருக்கிற இடத்த பாத்துக்க முடியும்... (சில நேரங்களில் சில கருத்துகள் மாறுபடலாம்)..

எந்த வித ரத்த சம்மந்தமும் இல்லாம ஆத்மார்த்தமா உருவாகிற ஒரு உறவ இன்னைக்கு விலை பேசும் நிலைக்கு மாத்துனதுக்கு யார் தான் காரணம்...... 

இளைங்கலை படிச்சா ஒரு ரேட்டு, முதுகலை படிப்பு முடிச்சா ஒரு ரேட்டு, வசீகரமா இருந்தா ஒரு ரேட்டு, பையன் படிச்சு பாரின்ல இருந்தா டபுள் ரேட்டுன்னு ஆண்களை பெத்தவங்க அவங்களுக்கு கல்யாண் புரட்டி போராட்டம் மாதிரி பிரைஸ் டேக் போட,

பொண்ணுங்கள பெத்தவங்களும், பையன் தனியா இருங்காரா, கல்யாணம் முடிச்சதும் தனிக்குடித்தனம் வந்துருவாரா? ஒரு பையனா இருக்காரா? கம்பெனில இங்கிரிமென்ட் கிடைக்குமான்னு அவனையும் ஒரு பணம் பார்க்கும் மிஷனா தான் பார்க்குது..

இந்த நிலை என்னைக்கு மாறும், மாறனும்ன்னு நினைச்சா,  மாற்றம் முதலில் நம்மகிட்ட இருந்து வரனும் அப்போ தான் அது ஆரோக்கியமான மாற்றமா இருக்கும்... இன்னைக்கு வரதட்சணை வாங்குனா இவ்வளவு வாங்கிட்டான்னும் , வாங்கலைன்னா பையனுக்கு ஏதோ குறைன்னு நினைச்சுடுவாங்கன்னும் சொல்லுறாங்க அப்போ தன் தேவைக்கு சமூகத்தின் மேல பழி போடுற மனப்பாங்கு தான் நம்மில் பலருக்கும்... இது பெண் வீட்டாருக்கும் பொருந்தும்...

ஆனாலும் ஒரு வியாபார ரீதியில இந்த உறவுபாலத்தை நாம கட்டிபோட்டுக்க அனுமதிக்கக்கூடாதுங்கிறது மீ ஆசை...முடிஞ்சவரை மனிதர்களின் மனங்களுக்கு மதிப்பு கொடுக்க கத்துகிட்டு, இந்த பணத்தை ஒரு பெரிய அங்கமா கல்யாண உறவுக்குள்ள கொண்டுவராம இருப்போம்...

எது எப்படியோங்க, இன்னைக்கு இருக்கிற நிலை ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை...ஆண்களே எங்க கண்ண மூடிட்டு உங்களுக்கு என்ன விலைன்னு நீங்களே யோசிச்சு பாருங்க.. உங்க விலைக்கு எப்படி பொண்ணு மாட்டும்?....!?!!!!!!?? உங்க விலைக்கு தகுந்த பொண்ணு கிடைக்க இது வியாபாரம் இல்லை விபச்சாரமும் இல்லை........ வாழ்க்கை பாஸூ.... சோ?.... மீ டோன் டெல் அட்வெஸ்....


அம்மா அம்மிணிகளே எங்க அப்படியே கொஞ்சம் உள்ளுக்குள்ள இருக்கிற மனச கொஞ்சம் தூசி தட்டி கேட்டுப்பாருங்க, பையன பெத்த அம்மா அப்பா கூட இருக்கக்கூடாது, பையன் கூட பாரின்ல போய் செட்லாகி ராயலா ஒரு வாழ்க்கை வாழனும்னு நினைக்கிறேங்களா? பையன் சைடு சொந்தம் மட்டும் ஆகவே ஆகாதுன்னு நினைக்கிறேங்களா?... அப்போ சீக்கிரம் ஜீவன் தாரா பாலிசி மாதிரி, ஒரு முதியோர் இல்லத்தையும் ஒரு அட்வான்ஸ் புக்கிங்க் பண்ணிடுங்க....................

 
நம்ம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திரும்பக்கிடைக்கும்.... 
ஹி ஹி இது டவுரிக்கும் பொருத்தும், பின்னாடி டவுசர் கிளியிறப்ப புரியும்............. வரட்டா.................15 நேசித்த உள்ளங்கள்:

{ Seeni } at: 5/14/2012 1:30 பிற்பகல் சொன்னது…

sako!

varathatchanai patriya-
sariyaana saattaiyadikal!

naan sila aanakalai paarthirukken-
kooda irunthirukken!

ivarkal varathatchanai-
vaangaalmal thirumanam-
seythavarkal!

1-vaakith
2-aarif
3-sarbudeen
4-jainutheen

enakku therinthavarkal-
enakku theriyaathavarkal eththanai
kodoyo!?

neenga vizhippunarvu seythathukku mikka nantri!

{ செய்தாலி } at: 5/14/2012 1:53 பிற்பகல் சொன்னது…

ம்ம்ம் ...
நல்ல பதிவு
அருமை சகோ

{ மதுமதி } at: 5/14/2012 3:12 பிற்பகல் சொன்னது…

நம்ம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திரும்பக்கிடைக்கும்....
ஹி ஹி இது டவுரிக்கும் பொருத்தும், பின்னாடி டவுசர் கிளியிறப்ப புரியும்............. வரட்டா....

டாப்பு...

{ சே. குமார் } at: 5/14/2012 7:27 பிற்பகல் சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

{ சிட்டுக்குருவி } at: 5/14/2012 7:35 பிற்பகல் சொன்னது…

sinthikka vendiya pathivu......

{ சசிகலா } at: 5/14/2012 7:57 பிற்பகல் சொன்னது…

டவுசர் கிளியிறப்ப புரியும்............. வரட்டா....ரசிக்கும் படியாக இருந்தது அருமை .

{ ramgoby } at: 5/19/2012 10:06 முற்பகல் சொன்னது…

நம்ம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திரும்பக்கிடைக்கும்....
ஹி ஹி இது டவுரிக்கும் பொருத்தும்

வெளிப்படையான (மறைமுகமான) உண்மைகள் - அருமையான‌ பதிவு..வாழ்த்துக்கள்

{ ரேவா } at: 5/19/2012 4:44 பிற்பகல் சொன்னது…

பிளாகர் Seeni கூறியது...

sako!

varathatchanai patriya-
sariyaana saattaiyadikal!

naan sila aanakalai paarthirukken-
kooda irunthirukken!

ivarkal varathatchanai-
vaangaalmal thirumanam-
seythavarkal!

1-vaakith
2-aarif
3-sarbudeen
4-jainutheen

enakku therinthavarkal-
enakku theriyaathavarkal eththanai
kodoyo!?

neenga vizhippunarvu seythathukku mikka nantri!


சொற்பங்களே ஆனாலும் மேற்கோளிட்டு காட்டிய உங்களின் அன்புக்கு நன்றி சகோ, ஆயினும் இந்த நிலை மாறவேண்டும் மாற்றப்பட வேண்டும், மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், வழமை மாறா அன்புக்கும் :)

{ ரேவா } at: 5/19/2012 4:46 பிற்பகல் சொன்னது…

பிளாகர் செய்தாலி கூறியது...

ம்ம்ம் ...
நல்ல பதிவு
அருமை சகோ


மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கு :)

{ ரேவா } at: 5/19/2012 4:46 பிற்பகல் சொன்னது…

பிளாகர் மதுமதி கூறியது...

நம்ம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திரும்பக்கிடைக்கும்....
ஹி ஹி இது டவுரிக்கும் பொருத்தும், பின்னாடி டவுசர் கிளியிறப்ப புரியும்............. வரட்டா....

டாப்பு...


மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கு :)

{ ரேவா } at: 5/19/2012 4:47 பிற்பகல் சொன்னது…

சே. குமார் கூறியது...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கு :)

{ ரேவா } at: 5/19/2012 4:48 பிற்பகல் சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

sinthikka vendiya pathivu......

ஆமாம்ல நன்றி சகோ :)

{ ரேவா } at: 5/19/2012 4:48 பிற்பகல் சொன்னது…

பிளாகர் சசிகலா கூறியது...

டவுசர் கிளியிறப்ப புரியும்............. வரட்டா....ரசிக்கும் படியாக இருந்தது அருமை .


வருடும் தென்றலின் வருகைக்கு நன்றி :)

{ ரேவா } at: 5/19/2012 4:50 பிற்பகல் சொன்னது…

ramgoby கூறியது...

நம்ம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திரும்பக்கிடைக்கும்....
ஹி ஹி இது டவுரிக்கும் பொருத்தும்

வெளிப்படையான (மறைமுகமான) உண்மைகள் - அருமையான‌ பதிவு..வாழ்த்துக்கள்


அன்பை சுமந்து வரும் உங்களின் அன்பிற்கு நன்றி இனி தொடர்ந்து வாருங்கள் :)

{ sathish prabu } at: 5/25/2012 12:10 பிற்பகல் சொன்னது…

//எந்த வித ரத்த சம்மந்தமும் இல்லாம ஆத்மார்த்தமா உருவாகிற ஒரு உறவ இன்னைக்கு விலை பேசும் நிலைக்கு மாத்துனதுக்கு யார் தான் காரணம்...//

//ஏனா சமூகம் எந்த ஒரு ஆரோக்கிய நகர்வுக்கு பின்னாலையும் ஒரு அதிபாதாள குழியத்தேண்டி போட்டு எவண்டா மாட்டுவான்னு ஒக்காந்திருக்கும்...//

அன்பான ஆண்களை பெண்கள் தேடுனா, அழகான அன்பான பெண்களை ஆண்கள் தேடுவாங்க... சோ இங்க யாரையும் எதுலையும் திருப்தி படுத்த முடியாது, அவங்க அவங்களா நமக்கு கிடைச்சத வச்சு திருப்தி பட்டுக்கிட்டா தான் உண்டு....//
//

எதார்த்தம் பேசி சிந்திக்க வைக்கின்றன.. வரிகள்..