உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 4 ஆகஸ்ட், 2012

இப்படியாக நான்...

 
விந்தின் வழி முளைக்கவில்லை
முலைப்பாலும் குடிக்கவில்லை,
ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டும்
என் உயிரில் பொருளில்லை...

பொறுப்பான மனிதனிடம்
இருப்பதெல்லாம்
என்னிடம் இருந்ததில்லை..

ஆனாலும்
பலர் விழிநீர் நான் துடைத்ததுண்டு
பலர் விதியோடு விளையாடியதும் உண்டு..
இருப்பவரிடம் இல்லாமலும்
இல்லாதவரிடம் இருந்திடவும் துடித்ததுண்டு...

ஆனாலும் ஆண்டவர்கள்
என்னை அடிமைபடுத்த,
ஆன்மீகர்கள் என்னை பாடாய்படுத்த,
பலரும் பலவாறு
என் கற்பை கலைக்க
வெற்றுகாகிதமென்னை வேசியாய்
மாற்றியவர் நீர்...
ஆசையாய் பலர் புணர,
அடுத்தடுத்து பலர் கைக்களுக்கு
மாற்றி விட்டவர் நீர்..

என்னை படைத்த மனிதரின்
கடவுளுக்கும்யெனை
காணிக்கையாக்கியவர் நீர்..

இயந்திர மனிதனாய்
மாறிப்போன மனிதனின்
மாற்றிபோட்ட செய்கைக்கு
பின்
என்னை காரணம் காட்டும்
மனிதனே
உந்தன் செய்கைக்கு
எனக்கு எதற்கு சாயம்?...

படைத்தலும்
காத்தலும்
அன்பாலே தொடங்கி
அன்பாலே முடியட்டும்...

வெற்று காகிதமெனை
வேசியாய் மாற்றாதீர்....
பின் உங்கள் கயமை எனக்கும் வரக்கூடும்..
ஜாக்கிரதை....

இப்படிக்கு
பணம்....




27 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

Arumai sakotharam

Unknown சொன்னது…

ரெம்ப நல்லா இருக்கு..

Unknown சொன்னது…

ரெம்ப நல்லா இருக்கு..

MARI The Great சொன்னது…

இப்படிப்பட்ட சிந்தனை வரிகள் எப்படி தோன்றுகின்றன உங்களுக்கு!

அருமையான கவிதை என்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது எனக்கு!

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

ஒரு குறியீட்டில்
உலகை அடையாளபடுத்துவது
எளிதல்ல
உங்களுக்கு அது கைவரபெருகிறது ......

வாழ்த்துக்கள் (உள்ளுறை )

Robert சொன்னது…

மிகவும் அருமையான கவிதை.. தொடரட்டும்!!!

Seeni சொன்னது…

ada!

ஆத்மா சொன்னது…

வித்தியாசமான புலம்பல்கள் ரசிக்கக் கூடியது ஆனாலும் பணத்தின் மோகம் குறையாத மக்களும் இருக்கின்றனர்.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட்டகாசமான வரிகள்... பாராட்டுக்கள்...

பகிர்வுக்கு நன்றி...
(த.ம. 3)

Athisaya சொன்னது…

இருப்பவரிடம் இல்லாமலும்
இல்லாதவரிடம் இருந்திடவும் துடித்ததுண்டு.......

அட்டகாசமானவரிகள்.இங்கு பேசப்பட்ட பொருள் தெரிவு அற்புதம்.வாழ்த்துக்கள் சொந்தமே!

வெற்றிவேல் சொன்னது…

எதுகை, மோனைகளை அற்புதமாக கையாண்டு உள்ளீர் நண்பரே...
அருமையான சொற்களை அற்புதமாக இணைத்துள்ளீர்...
வணக்கம்

கொசக்சி பசபுகழ் சொன்னது…

தேர்ந்த வரிகள் .,சரியாக பிரயோகபடுதுள்ளது .....,அருமை அருமை ..,( இது தான் முதன் முதல் கமெண்ட் இன் கவிதை ப்ளாகில் )

Unknown சொன்னது…

மிக்க நன்றி கவி அழகன் சகோ :)

Unknown சொன்னது…

komathi akka கூறியது...

ரெம்ப நல்லா இருக்கு..

மிக்க நன்றி தோழி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...

இப்படிப்பட்ட சிந்தனை வரிகள் எப்படி தோன்றுகின்றன உங்களுக்கு!

அருமையான கவிதை என்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது எனக்கு!


பணத்தின் மீதான கோபம் தான் சகோ, வேறென்ன, இல்லாத ஒன்றை பற்றி நித்தம் சிந்திப்பது தான் இயற்கையாகி விட்டதே :) நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

கோவை மு சரளா கூறியது...

ஒரு குறியீட்டில்
உலகை அடையாளபடுத்துவது
எளிதல்ல
உங்களுக்கு அது கைவரபெருகிறது ......

வாழ்த்துக்கள் (உள்ளுறை )


மிக்க நன்றிகள் தோழியே, அதோடு மன்னிப்புகளும், பல கவிதைகளை உங்கள் சாயலில் தவரவிட்டதற்கு :)

Unknown சொன்னது…

Robert கூறியது...

மிகவும் அருமையான கவிதை.. தொடரட்டும்!!!


மிக்க நன்றிகளோடு உங்கள் வரவை தொடர வேண்டுகிறேன் :)

Unknown சொன்னது…

Seeni கூறியது...

ada!


:) நன்றிகள் சகோ :)

Unknown சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

வித்தியாசமான புலம்பல்கள் ரசிக்கக் கூடியது ஆனாலும் பணத்தின் மோகம் குறையாத மக்களும் இருக்கின்றனர்.....

மோகம் குறையாத மக்களில்லை இம்ரான், தேவைகள் ஆசைகள் இருக்கும் வரை இல்லாத உயிருக்காய் நாம் துடிக்கத்தான் வேண்டும் :)

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...

அட்டகாசமான வரிகள்... பாராட்டுக்கள்...

பகிர்வுக்கு நன்றி...
(த.ம. 3)


மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும், தொடர்ந்துவாருங்கள் சகோ :)

Unknown சொன்னது…

Athisaya கூறியது...

இருப்பவரிடம் இல்லாமலும்
இல்லாதவரிடம் இருந்திடவும் துடித்ததுண்டு.......

அட்டகாசமானவரிகள்.இங்கு பேசப்பட்ட பொருள் தெரிவு அற்புதம்.வாழ்த்துக்கள் சொந்தமே!


மிக்க நன்றி சொந்தமே :)

Unknown சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...

எதுகை, மோனைகளை அற்புதமாக கையாண்டு உள்ளீர் நண்பரே...
அருமையான சொற்களை அற்புதமாக இணைத்துள்ளீர்...
வணக்கம்

மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

கொசக்சி பசபுகழ் கூறியது...

தேர்ந்த வரிகள் .,சரியாக பிரயோகபடுதுள்ளது .....,அருமை அருமை ..,( இது தான் முதன் முதல் கமெண்ட் இன் கவிதை ப்ளாகில் )

முதலில் மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் குறியிடப்பட்ட குறிப்பீட்டிற்கும், தொடர்ந்து வாருங்கள் சகோ :)

K சொன்னது…

மிக அருமையான கவிதை ரேவா!

பணம் பற்றி இதுவரை எத்தனையோ கவிஞர்கள் எழுதிவிட்டார்கள்! ஆனால் இந்தக் கோணத்தில் யாருமே எழுதியதில்லை!

வாழ்த்துக்கள் ரேவா!

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

படைத்தலும்
காத்தலும்
அன்பாலே தொடங்கி
அன்பாலே முடியட்டும்...

அருமையான வரிகள்

அ. வேல்முருகன் சொன்னது…

நன்றாக இருக்கிறது

ஆனாலும் அது அப்படிதான்

" அது " கை மாறிக் கொண்டுதான் இருக்கும். அதன் குணம் அப்படிதான்

Charruh சொன்னது…

மிக்க நன்று...