
தொலைதலின் பொருட்டு மகிழ்ச்சி கொண்டால் # இதுவும் காதலே.......
அழுதலின் நிமித்தம் ஆனந்தமடைந்தால் # இதுவும் காதலே...
வாசல் வரை வந்துவிட்டு வானம் பார்த்து சிரித்துவைத்தால் # இதுவும் காதலே......
சின்ன சின்ன சிரிப்பிற்கும் சிறைபடுத்தமுடியா பொருள் கொண்டால் # இதுவும் காதலே...
தூக்கத்திலும்...

இது இப்படியே இருந்துவிடப்போவதில்லை
என்ற கேள்விக்கு பின் தான்
நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்
சிறு பேச்சின் நடுவில்
கவனமீர்க்கிறாய்
கலையாதிருக்க வார்த்தை கோர்க்கிறாய்ஊருக்கு பதில் சொல்லி
உள்ளுக்குள் புதிர்வைக்கிறாய்
அவிழ்க்க முடியா முடிச்சொன்றிட்டுபரிசெனத் தருகிறாய்
அவ்வளவு...

என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
நீயும் கேட்கிறாய்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை
அறிந்தும்...
ஒரு நேசத்தை மறுதலித்தலில்
உண்டாகும் வலி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
ஆகப் பெரும் மகிழ்வின் பின்
ஆனந்தக்கூத்தாடவோ
ஒரு தோல்வியின் பொருட்டு
மண்டியிட்டு அழவோ
எனக்கென்று...