உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 8 அக்டோபர், 2012

முடிச்சு

 
 
இது இப்படியே இருந்துவிடப்போவதில்லை
என்ற கேள்விக்கு  பின் தான்
நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்
சிறு பேச்சின் நடுவில் 
கவனமீர்க்கிறாய்
கலையாதிருக்க வார்த்தை கோர்க்கிறாய்

ஊருக்கு பதில் சொல்லி
உள்ளுக்குள் புதிர்வைக்கிறாய்
அவிழ்க்க முடியா முடிச்சொன்றிட்டு
பரிசெனத் தருகிறாய்

அவ்வளவு கடினமான முடிச்சாய்
அதுயில்லாது போனாலும்
அவிழ்ப்பது கொஞ்சம்
கடினமாதென்பது முயன்றலில்
கிடைத்திட்ட பலன்...

எல்லோரும் வருகின்றனர்
இதனோடு போட்டியிட
இறுதியில் எல்லோருக்குள்ளும்
முடிச்சிட்டுக்கொண்டது
இது..


பலவிதமான முயன்றுபார்த்தல்
பலனில்லை
பதிலில்லை
இதனிடம்..


தோல்வியை மறுக்க
இதை
அறுத்துப்போடுவதென்று
நினைத்திட்ட வேளையில்
அவிழ்க்கப்பட்டது
இவ்முடிச்சு....


பல அபிப்ராய முடிச்சுகள்
உங்களுக்கு இருக்கலாம்
அவிழ்க்கப்பட்ட அதற்கு

காலமென்ற பதிலிருப்பதையும்
அறிந்தபடி...
இறுகிக் கிடக்கிறது

அம்முடிச்சு....  
 
 
 

5 கருத்துகள்:

மாத்தியோசி - மணி சொன்னது…

காலமென்ற பதிலிருப்பதையும்
அறிந்தபடி...
இறுகிக் கிடக்கிறது

அம்முடிச்சு.... ////

ஆஹா அருமை! எம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனையோ முடிச்சுக்கள்?

சிந்திக்க வைத்த அருமையான கவிதை ரேவா :))

செய்தாலி சொன்னது…

முடிச்சை
அழமாய் சொல்லபட்டு இருக்கிறது

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

யதார்த்தமான வரிகள்...

மயிலன் சொன்னது…

விசு படம் வசனம் மாதிரி கண்ஃபியுஸ் பண்ணி கருத்து சொல்றீங்க... :) சூப்பர்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை வரிகள்...

வாழ்த்துக்கள்...