உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஒளித்துக்கொள்கிறேன்



இது
இப்படித்தான்..

ப்ரியத்தின் பொருட்டு
தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற
இந்நிமிடங்கள்
சொல்லமுடியா மலட்டு தாயின்
பாசம் போன்றது...

பகிர்தலில் பழக்கப்பட்ட
என் பாஷைகள்
மொழியறியாது
ஸ்வரம்புரியாது
இசைத்துக்கொண்டே கிடக்கிறது
ஈனஸ்வரத்தில்

இந்த மெளனத்திற்கு
எத்தனையோ காரணமிருக்கலாம்
எடுத்துவைக்கும் காரணம் புரியாதுமிருக்கலாம்..

சின்னசின்ன செய்திகளில்
கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளில்
ஆசுவாசப்படுத்தும் பகிர்தல்களில்
கோர்த்துப்பார்க்கும் பிரியங்களில்
நிரப்ப முடியா
வெறுமை பெற்று அழைகிறது
உன்னிடம் பகிரா செய்திகள்...

காதுக்குள் எப்போதும் வந்துமிழும்
வீரிய வார்த்தைகள்
நமை விழுங்காதிருக்க
எனக்குளே ஒளித்துகொள்கிறேன்
உன் நட்பை
உனதிந்த வருத்தங்களோடு

5 கருத்துகள்:

கோவி சொன்னது…

smart...

Thozhirkalam Channel சொன்னது…

அருமை சகோதரி...

மிகச்சிறந்த கவியாற்றல்..

தொடருங்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை....
அழகான கவிதை.
வாழ்த்துக்கள் சகோதரி.

SathyaSudha சொன்னது…

தங்களின் வலைய தளத்திற்க்கு நான் புது வரவு தங்களின் அனைத்து படைப்புக்களும் அருமை தோழி..... எனக்காக உங்கள் வாசகிக்கா இந்த கற்பனையில் ஒரு கவிதை வடிவில் மன்னிப்பு கவிதை வேண்டும்....

நான் நேசிக்கு ஒருவரிடம் நான் சொல்ல முற்படும் ஒரு விடயத்தை நாம் சொல்வதற்குள் அவர் அந்த விடயத்தை தெரிந்துக்கொள்கிறார்.. நாம் குறியிருந்தால் அதில் இருக்கும் தவறு கூட தெரியாமல் போய் இருக்கும் அவரே தெரிந்துக்கொண்டதால் வருத்தும் நாம் நேசிக்கும் நெஞ்சத்துக்கு மன்னிப்பாயா என்று கேட்க வேண்டும் இது தான் தோழி.....

SathyaSudha சொன்னது…

ARUMAI