உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 22 ஏப்ரல், 2013

அவ்வளவே



ஒன்று
இரண்டாக
இரண்டு
நூறாக
கூடிக்கொண்டே போகிறது
உன்னைக் குறித்த
என் கேள்விகள்,
எல்லாக் கேள்விக்கும்
ஒற்றைப் புன்னகையை
பதிலெனக் கொடுத்தாலும்
போதுமானதாய் இல்லை
கேள்வியின் கோரப்பசிக்கு.
கொஞ்சமாய் அதை -நீ
மென்று விழுங்க
பதில்
தொண்டை நெறிக்கும் முன்
துடித்து விழிக்குதுன்
சுயமுகம்
இதுவரை காட்டியவை
கூட்டிச்சென்ற தூரத்திலிருந்து
திரும்புதல் முடியாதென்பதை
தொடர் மெளனமும்
சில கண்ணீர் துளிகளும்
சிறு தடுமாற்றமும்
எடுத்துரைக்க
மிச்சமிருக்கும் ப்ரியங்களை
எச்சமென
நீ புசிக்கையில்
இரவை புணர்ந்து
முடிக்கிறது
இன்னுமொரு பகல்..
இலக்கணங்கள் புரிந்தாலும்
நீ இன்னுமொரு
ஆண்
அவ்வளவே...




4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படி மட்டும் இருந்தால் ஆண் அல்ல...

கவியாழி சொன்னது…

அவ்வளவுதானா? ஆதங்கம் ! அடங்கட்டும்.

இளமதி சொன்னது…

உங்கள் சிந்தனைகளுக்கு அழகிய கவிவடிவங்கள். உண்மையில் வியக்கின்றேன். வலி நிறைந்துள்ளது ஆனாலும் ரசித்தேன் கவி வரிகளை.
வாழ்த்துக்கள் தோழி!

த.ம. 3

பூ விழி சொன்னது…

அப்பா சிதறுகிறது கோபம் எழுத்துகளைவீசி