உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உற்சாக துள்ளல் உங்களாலே





வணக்கம் என் வலையுலக உறவுகளே.. அனைவரும் நலமா? வலைப்பக்கம் விட்டு வெகுவாய் ஒதுங்கி இருந்த இவ்வேளையில்,மெயிலிலும், முக நூலின் வாயிலாகவும் என்னை எழுதத்தூண்டி, மீண்டும் புதிதாய் என்னை பயணப்படுவதற்கான உத்வேகத்தை கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... என்ன ரேவா திடீர்ன்னு கவிதையில்லாம வலைப்பக்கம் வந்திருக்காளேன்னு தானே யோசிக்கிறேங்கிற ஆமாம் இந்த பதிவு முழுக்க முழுக்க நன்றிக்கான பதிவு... விளையாட்டுத்தனமாகவும், அதே நேரத்தில் என் மன அழுத்தங்களிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வதின் நிமித்தமாயும் இவ்வலைப்பக்கம் வந்தேன்.. எண்ணிச்சரியாய் மூன்றாடுகளை தொடவிருக்கும் இந் நேரத்தில் இதுவரை என்பக்கம் வந்து சென்ற பார்வையாளர்கள் இரண்டு லட்சத்தி சொஞ்சம் பேருக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இப்பதிவை எழுதுகின்றேன்... இனி எழுத்தை சரியாய் செய்வேனென்கிற உறுதியோடு பயணப்படுகின்றேன்...

2010ல் பதிவுலகம் ஒன்றை அறியாத காலம், எங்கோ ஒரு தேடலில் நிமித்தம் நண்பன் ப்ரியமுடன் வசந்தின் தங்கைக்கான கடிதத்தை வலைப்பதிவில் படித்ததும், தூசி தட்டு எடுக்கப்பட்ட கவிதைகளைத்தான் ஆரம்பங்களில் பகிர்ந்தது. அதற்கு முன்பே ஒரு வலைப்பதிவை தொடங்கி வேலையின் பொருட்டு அதில் பதிவுகளை தொடராதது ஒருபுறமிருக்க, அந்த கடிதத்தின் ஆவலில் துளிர்த்தது தான் என் எழுத்து..2011ல் பிற்பகுதியில் தான் வலையுலகத்தின் பின்னனிகள் சரியாய் புலப்பட்ட காலம்.. நம் எழுத்து தனக்கேற்ற வாசகரை தானே தேடிக்கொள்ளுமென்பதும், நம் எழுத்து தனக்கேற்றபடி நம் எழுத்தை மாற்றிக்கொள்ளுமென்பதையும் சரியாய் உணர்ந்த காலங்கள் தான் இன்றைய காலங்கள்.. இன்னும் எழுத்தை சரியாய் எசெய்யவில்லை என்பது எனக்கு நன்றாய் தெரிந்தாலும், ஆரம்ப காலங்களிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறேன்,அது உங்களால் தான் சாத்தியம் என்பதை சொல்வதில் பெருமையே எனக்கு.. இந்த வெற்றி இங்கிருந்து தான் சாத்தியமெனக்கு..படிப்பேதுமில்லா, இன்னும் சரியாய்ச்சொல்வதானால் என் கவிதைகளை சரிவர புரிந்துகொள்ள இயலா பின்னனி என்னுடையதென்றாலும், உங்களின் பாராட்டுகளும், பாசமும் தான் என்னை இத்தனை தூரம் உந்தித்தள்ளியது..

இதுவரை என் பதிவுகளுக்கு திரட்டிகளின் வாயிலாயும், என் பதிவுகளின் வாயிலாகவும் வாக்கிட்டு, மறுமொழியிட்டு சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றி சொல்லி அன்னியப்படுத்த விரும்பாத போதிலும், என் ஆணிவேருக்கு பலம் கொடுத்த உங்களுக்கு என்னிடம் கொடுக்க நன்றியைத்தவிர வேறில்லை

இதுவரை பதிந்த கவிதைகள் 253
பெற்ற மறுமொழிகள் 4150
மொத்த பார்வையாளர்கள் 2002150

இக்குழந்தையின் கிறுக்கலையும் ரசித்து, எனக்கும் எழுத்தில் பொறுப்புணர்ச்சியை எடுத்துக்கொடுத்த என் வலையுலகில் நான் விரும்பி ரசித்த, ரசிக்கின்ற என் அத்தனை நட்புறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி..
குறிப்பாய் இங்கு சில நட்புறவுகளுக்கு மனமார நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றேன்
நண்பன் வசந்த், மழைக்காதலன், ரசிகன்,ஜோ, இந்திரா கிறுக்கல்கள், நித்தி மேகா
சகோதரன் கவிதைக்காரன் டைரி
தம்பி ரமேஷ் ராக்‌ஷன்,பிரபா, முக நூலில் என் பதிவுதனை பகிர்ந்து இன்னும் இன்னுமென எழுதுவதற்கான உற்சாகமேற்படுத்தும் ரிலாக்ஸ் ப்ளீஸ் சகோதரன் மெல்வின், இன்னும் என் பின்புலத்தில் என்னை உந்தித்தள்ளும் என் ஆகச்சிறந்த நட்பானவளுக்கும்,  என் மனமார்ந்த நன்றிகள்...


என் ஆக்க சக்தியாய் இருக்கும் என் தோல்விகளே என்னை இங்கு எடுத்துவந்ததென்பதையும் எழுத்தில் வைக்க தயக்கமில்லையெனக்கு,,,

இதுவரை எழுதியவை 
கூட்டிச்சென்ற தூரமிது புரிந்தாலும்
போகவேண்டிய தூரமின்னும்
வெகுதொலையிலிருப்பது புலப்பட


இணைந்தே இருங்கள் இச்சிறுபிள்ளை கிறுக்கலோடு... குறைகளையும் என் நிறைகளுக்கு காரணமாய் சுட்டிக்காட்டிய என் அன்பு நட்புக்களுக்கு நன்றி...
இனியும் என் ஆக்கசக்தியாய் இருக்கப்போகின்ற இவ்வலையுலக உறவுகளின் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி நன்றி நன்றி.....

20 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

\\நம் எழுத்து தனக்கேற்ற வாசகரை தானே தேடிக்கொள்ளுமென்பதும், நம் எழுத்து தனக்கேற்றபடி நம் எழுத்தை மாற்றிக்கொள்ளுமென்பதையும் சரியாய் உணர்ந்த காலங்கள் தான் இன்றைய காலங்கள்..\\

நேரிய உணர்தல்!

என் ஆக்க சக்தியாய் இருக்கும் என் தோல்விகளே என்னை இங்கு எடுத்துவந்ததென்பதையும் எழுத்தில் வைக்க தயக்கமில்லையெனக்கு,,,

நுட்பமான புரிதல்!

இந்த உணர்தலும் புரிதலுமே அசாத்தியங்களை சாத்தியமாக்கும். இலக்குகளை அடையாளங்காணவும், அடையும் வழிகளை அறியவும் வைக்கும்.

பயணம் தொடர இனிய வாழ்த்துக்கள் ரேவா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர்த்து எழுந்து உள்ளீர்கள் !கருமமே கண்ணாக கொண்டாலும் ஊணை ,உறக்கத்தை ,உடல்நலத்தை மறக்காமல் உயரப் பறக்க வாழ்த்துகள் !

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பூ விழி சொன்னது…

பலகாலம் தொடர பல்லாயிரம் வாழ்த்துகள் தொடரட்டும்

Yaathoramani.blogspot.com சொன்னது…

தங்கள் உடன் பயணிப்பதில்
பெருமை கொள்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

இளமதி சொன்னது…

எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!

இன்னும் இன்னும் பல சாதனைகளைப் படைத்திட வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

வெற்றிவேல் சொன்னது…

வாழ்த்துகள் சகோதரி... மேலும் வளர வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரெண்டு லட்சமா......வாழ்த்துக்கள்"மா தங்கச்சி....

S.டினேஷ்சாந்த் சொன்னது…

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

கீத மஞ்சரி கூறியது...

\\நம் எழுத்து தனக்கேற்ற வாசகரை தானே தேடிக்கொள்ளுமென்பதும், நம் எழுத்து தனக்கேற்றபடி நம் எழுத்தை மாற்றிக்கொள்ளுமென்பதையும் சரியாய் உணர்ந்த காலங்கள் தான் இன்றைய காலங்கள்..\\

நேரிய உணர்தல்!

என் ஆக்க சக்தியாய் இருக்கும் என் தோல்விகளே என்னை இங்கு எடுத்துவந்ததென்பதையும் எழுத்தில் வைக்க தயக்கமில்லையெனக்கு,,,

நுட்பமான புரிதல்!

இந்த உணர்தலும் புரிதலுமே அசாத்தியங்களை சாத்தியமாக்கும். இலக்குகளை அடையாளங்காணவும், அடையும் வழிகளை அறியவும் வைக்கும்.

பயணம் தொடர இனிய வாழ்த்துக்கள் ரேவா.

உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கீதாக்கா...தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பதை மனதிற்கு இதமாய் இருக்கிறது..தொடர்ந்திருங்கள்...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

உற்சாக வாழ்த்துக்கு என் உளமார்ந்த நன்றிகள் சகோ..

Unknown சொன்னது…

Bagawanjee KA கூறியது...

பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர்த்து எழுந்து உள்ளீர்கள் !கருமமே கண்ணாக கொண்டாலும் ஊணை ,உறக்கத்தை ,உடல்நலத்தை மறக்காமல் உயரப் பறக்க வாழ்த்துகள் !

முதல் வருகைக்கும், முளைவிடச்செய்யும் படியான உற்சாக மறுமொழிக்கும் நன்றிகள்.. தொடர்ந்து வாருங்கள்...

Unknown சொன்னது…

poovizi கூறியது...

பலகாலம் தொடர பல்லாயிரம் வாழ்த்துகள் தொடரட்டும்

அன்பான வாழ்த்துக்கு என் ஆழமான நன்றிகள்..தொடர்ந்து தொடர்பில் இருங்கள் என் பக்கத்தில்

Unknown சொன்னது…

Ramani S கூறியது...

தங்கள் உடன் பயணிப்பதில்
பெருமை கொள்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்


மிக்க நன்றி ஜயா, உங்கள் வாழ்த்துகளை பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன்..தொடர்ந்து வாருங்கள்

Unknown சொன்னது…

இளமதி கூறியது...

எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!

இன்னும் இன்னும் பல சாதனைகளைப் படைத்திட வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!


மிக்க நன்றி தோழி..உங்களின் நட்பு மொழிகளைப்பிடித்தே நடைபழக வாய்ப்பேற்படுத்திக்கொடுத்தமைக்கு.. தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...

வாழ்த்துகள் சகோதரி... மேலும் வளர வாழ்த்துகள்.

மிக்க நன்றி சகோ உங்களின் வருகைக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கும்.. தொடர்ந்து இணைந்திருங்கள் :)

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

ரெண்டு லட்சமா......வாழ்த்துக்கள்"மா தங்கச்சி....


அண்ணனின் அன்பான வாழ்த்துக்கு என் அன்பான நன்றிகள்... தொடர்ந்து இணைந்திருங்கள் இத்தங்கையோடு...

Unknown சொன்னது…

S.டினேஷ்சாந்த் கூறியது...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

முதல் வருகைக்கும் உங்களின் முத்தான வாழ்த்துக்கும் என் முதல் நன்றிகள்..தொடர்ந்து வாருங்கள்