உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஒரு சொல்...





யாருக்கும் கேட்காதபடி
தனக்கானதொரு மொழியெடுத்து
விழியறுக்கிறது
உனதிந்த மெளனம்

பிடித்த அத்தனையிலும்
பிடித்தமற்று
நீள்கிறது
எனதிந்த நாட்கள்

ஒரே நேரத்தில் சொல்லத்துணிந்த
சொற்களின் நகர்வுக்கான
இக்காத்திருப்பென்பது
காட்சிபடுத்தமுடியா
ஏதோ ஒரு அழிவை கண்முன்னே
நிறுத்துகிறது

பார்வைகளில்
கடந்து போவது மட்டுமே
இனி
சாத்தியமென்றான பின்
நீ உடைத்தெரிந்த சொல்லில்
இங்குமங்குமாய் சிதறிக்கிடக்கும்
ஞாபகவேர்கள்
ஒவ்வொன்றாய் துளிர்த்து
சுவாசம் நெறிக்க

கணத்ததொரு நிராகரிப்பை
சலனமே இல்லாமல்
ஏற்றிவருகிறது
நீ உடைத்த ஒரு சொல்...

- ரேவா



5 கருத்துகள்:

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

//நீ உடைத்தெரிந்த சொல்லில்இங்குமங்குமாய் சிதறிக்கிடக்கும்
ஞாபகவேர்கள்
ஒவ்வொன்றாய் துளிர்த்து
சுவாசம் நெறிக்க//
வலிகளை தாங்கி வரும் துளி நீரின் சுவை கலந்த சொற்களை குடிக்கையில் எனக்குள்ளும் படருகிறது அந்த சொல்லின் வலி

அருமை ரேவா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மௌனமான சொல் இப்படித்தான்...

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

முத்தரசு சொன்னது…

ம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை...

கீதமஞ்சரி சொன்னது…

மௌன நிராகரிப்பின் வேதனை தெறிக்கிறது ஒவ்வொரு வரியிலும். என்ன சொல்ல? மனம் கனக்கிறது ரேவா.