உன் முகம் தேவையில்லையெனக்கு
அப்படியே என்னுடையதும்தொலைபேசி எண் என
எல்லாமே தேவையற்றது தான்
நீ போலியென சந்தேகித்தாலும் கூட
நிமிர்ந்து கிடக்குமிடத்தில் குனிதல்
உன் குணமென சொல்லி
வேஷம் போடுவதை தவிர்
சாயம் வெளுத்த கூட்டங்கள்
நானறிவேன்..
உனக்குள்ளிருக்கும் எதிர்பார்ப்பை
சூன்யப் பெருவெளியில்
சுட்டெறி
குளிர்காய காரணங்களாவது கிடைக்கும்
பொய்களை இன்னொரு நாக்காய்
எடுத்தாள்வதை நிறுத்து
எதையும் நம்புவதாய் இல்லை
நான்
வேறென்ன
பெரிதாய் ஒன்றுமில்லைமுடிந்தால் இவ்வரிகளை
படித்துவிட்டுச் செல்
நான் அப்படியில்லையென்ற பொய்களோடு.. :)
-ரேவா
7 கருத்துகள்:
Great wordings
//முடிந்தால் இவ்வரிகளை
படித்துவிட்டுச் செல்
நான் அப்படியில்லையென்ற பொய்களோடு.. :)//
ஏமாற்றத்தின் வெம்மை
காலாக்கினியாய்ச் சுடும் அற்புதக் கவிதை
இத்தருணங்கள் அனைவர் வாழ்விலும்
வந்து போவதுண்டு
ஆயினும் அதை இத்தனை அருமையாய்ச்
சொல்வதென்பது அரிது
மனம் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்
tha.ma 2
/// சூன்யப் பெருவெளியில் சுட்டெறி
குளிர்காய காரணங்களாவது கிடைக்கும்... ///
நன்றி...
பொய்களை இன்னொரு நாக்காய்
எடுத்தாள்வதை நிறுத்து ///
ஆஹா என்ன ஒரு அழகிய வரி?? அருமையான கவிதை ரேவா !!
அருமையான கவிதை.
எதிர்பார்ப்பு என்பது எல்லோருடைய
வாழ்விலும் பதிந்துபோன கற்குவியல்கள்...
அத்தனை எதிர்பார்ப்புக்கும் ஒவ்வொரு காரணம்
சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம்...
அருமையான ஆக்கம் சகோதரி...
கருத்துரையிடுக